சீனாவில் விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள்: பொருளாதார பாதிப்பு ஏற்படலாம் என அச்சம்

பெய்ஜிங், சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக ஜிரோ கோவிட் பாலிசியை பின்பற்றும் சீனா, மிகக்கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை முடக்கி வருகிறது. இதனால், தொழில் நடவடிக்கைகளும் முடங்கியிருக்கின்றன. சீனாவில் தொழில்துறையில் ஏற்பட்டு இருக்கும் தொய்வு ஏற்கனவே பலவீனமாக இருக்கும் சர்வதேச வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. சீனாவில் மக்களின் தேவைகள் குறைந்து இருப்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. … Read more

ட்விட்டர், மெட்டாவை தொடர்ந்து 10,000 பேரை பணி நீக்கம் செய்யும் கூகுள்!

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இப்போது கூகுள் நிறுவனமும் பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ட்விட்டர், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கானோரை பணி நீக்கம் செய்துள்ளன. இந்நிலையில், கூகுள் குறைந்தது 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கூகுள் நிறுவனம் தனது புதிய ரேட்டிங் முறையை பயன்படுத்தி ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த … Read more

இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழப்பு 252 ஆக அதிகரிப்பு

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தோனேசிய அரசு வெளியிட்ட தகவல்: மேற்கு ஜாவா தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 5.6 ஆக பதிவாகியது. ஜாவாவில் உள்ள சியாஞ்சூரில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியாக காணப்பட்டது. நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்த சியாஞ்சூர் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சியாஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் … Read more

தொடரை கைப்பற்றியது இந்திய அணி| Dinamalar

நேப்பியர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ‛டி-20′ போட்டி ‛டக்வொர்த் லூயிஸ்’ முறைப்படி ‛டை’ ஆனதால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 ‛டி-20′ மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதுகிறது. முதல் ‛டி-20′ மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று (நவ.,22) நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் … Read more

புரூஸ் லீ உயிரை பறித்த தண்ணீர் – அதிகளவு தண்ணீர் குடித்தால் மரணம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

வாஷிங்டன், தற்காப்பு கலை ஜாம்பவான் மற்றும் பிரபல நடிகரான புரூஸ் லீ தனது 32வது வயதில் உலகிலிருந்து விடைபெற்றார். இப்போது புரூஸ் லீ மரணம் குறித்து ஆச்சரியப்படும் செய்தி வந்துள்ளது. சமீபத்தில் ஒரு புதிய ஆய்வில், புரூஸ் லீ அதிக தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என்று சில மருத்துவர்கள் கூறியுள்ளனர். நடிகர் புரூஸ் லீ ஜூலை 1973 இல் பெருமூளை வீக்கம் காரணமாக இறந்தார். அப்போது, ​​வலிநிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மூளையில் வீக்கம் ஏற்பட்டதாக … Read more

நியூசிலாந்தில் வாக்களிக்கும் வயது 16 ஆக குறைப்பு? – அரசு எடுக்கும் அதிரடி முடிவு!

“நியூசிலாந்து நாட்டில் தேர்தலில் வாக்களிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்,” என, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்து உள்ளார். தென் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தில், தேர்தலில் வாக்களிக்கும் வயது, 18 ஆக இருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்கும் வயது தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பு அளித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், 16 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்களை வாக்களிக்க அனுமதிக்காதது வயது … Read more

கத்தார் கால்பந்து மைதானத்தை சுத்தம் செய்த ஜப்பானியர்கள்: மற்றவர்கள் கற்றுக்கொள்வார்களா?| Dinamalar

கத்தார்: கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவடைந்ததும் ஜப்பானியர்கள் பலர் மைதானத்தில் இருந்த குப்பைகளை அகற்றும் வீடியோ வைரலாகியுள்ளது. இதே பாணியை பின்பற்றி மற்றவர்களும் பொதுஇடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கத்தாரில் ‛பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் 22வது சீசன் நடக்கிறது. நேற்றைய ‛ஏ’ பிரிவு போட்டியில் கத்தார் – ஈகுவடார் அணிகள் மோதின. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணி வெற்றி பெற்றது. … Read more

அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் – ஐ.நா. கவலை

வாஷிங்டன், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐ.நா. சபை தலைவர் குட்ரெஸ் ஆற்றிய உரையில் கூறியதாவது:_ ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறுவனராலோ, தனது காதலனாலோ கொல்லப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை சமாளிக்க தேசிய செயல்திட்டங்களை அரசுகள் செயல்படுத்த வேண்டும். கொரோனா தொற்றுலிருந்து பொருளாதாரக் கொந்தளிப்பு வரை, தவிர்க்க முடியாமல் இன்னும் அதிகமான உடலாலும் மற்றும் மனதாலும் பெண்கள் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார். தினத்தந்தி Related … Read more

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல்

கேன்பெர்ரா: இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்தார். இதேபோல், பிரிட்டன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கும் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. நேற்று (திங்கள்கிழமை) ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் அவையில் எளிதாக நிறைவேறியதை அடுத்து, இன்று செனட் அவை இதற்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளது. எனினும், இந்த ஒப்பந்தத்திற்கு இந்திய நாடாளுமன்றத்திலும், பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை. அதேவேளையில், … Read more

'பாஜக ஆட்சியில் இருக்கும் வரை இது நடக்க வாய்ப்பே இல்லை!' – இம்ரான் கான் பளீச்..!

பாகிஸ்தான் – இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்க வாய்ப்பில்லை என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. இதை பொறுத்துக் கொள்ள … Read more