டேங்கர் லாரி வெடித்து 8 பேர் உயிரிழப்பு| 8 killed in tanker truck explosion

ஜோகன்னஸ்பெர்க் : தென் ஆப்ரிக்காவில், டேங்கர் லாரி விபத்தில் சிக்கி வெடித்ததில், இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் பலியாகினர்; 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கின் கிழக்கு பகுதியில் உள்ள போக்ஸ்பர்க் என்ற இடத்தில், தாழ்வான பாலத்தைக் கடக்க முயன்ற பெட்ரோல் டேங்கர் லாரி, பாலத்தின் அடியில் சிக்கியது. அந்த லாரியை நகர்த்த முயன்ற போது பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில், அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் … Read more

என்.ஜி.ஓ நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை – தலிபான் அரசு உத்தரவு

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை விதிக்கப்படுவதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், அங்கு பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, நாடு முழுவதும் மாணவ – மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆடைகள் அணிவதில் விதிகளை மீறியதாக மறு அறிவிப்பு வரும் வரை பெண் ஊழியர்கள் பணிபுரிய தடை … Read more

 அழிவை தந்த ஆழிப்பேரலை – இன்று சுனாமி நினைவு தினம் -| Azhipperalai which caused destruction – Today is Tsunami Remembrance Day –

இந்திய மண்ணில் ‘சுனாமி’ ஏற்படுத்திய சோகம் மக்களின் மனதை விட்டு இன்னும் மறையவில்லை. 2004 டிச., 26ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில்நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்துஎழும்பிய ஆழிப் பேரலைகள் இந்தோனேஷியா, இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் கடலோர பகுதிகளை வாரி சுருட்டியது. இதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உயிர் சேதத்துடன், கோடிக் கணக்கில் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு முன் சுனாமி என்ற வார்த்தையை … Read more

இலங்கையில் கனமழை; வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

தொடர்மழை வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில், குறிப்பாக கண்டி மாவட்டத்தில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக, கண்டி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டன. மூழ்கிய ரெயில் நிலையம் கண்டி ரெயில் நிலையம், அக்குரணை நகரம் உள்பட பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின. கடைகளில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்ததுடன், சில வாகனங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. கண்டி மாவட்டத்தின் அலவாத்துகொடாவில் உள்ள … Read more

சீனாவில் இம்மாதத்தில் மட்டும் சுமார் 25 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு.. கட்டுப்பாடுகள் தளர்ந்ததால் கட்டுக்குள் அடங்க மறுக்கும் கொரோனா..!

சீனாவில் இம்மாதத்தில் மட்டும் சுமார் 25 கோடி பேர்  கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் பாதிப்பில் இருந்து சீனா விடுபட பலமாதங்களாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பணிந்து பூஜ்யம் கோவிட் கொள்கையை சீன அரசு தளர்த்தியதையடுத்து இருபதே நாட்களில் 3 ஆண்டுகளாக கட்டுக்குள் வைத்திருந்த கோவிட் சுனாமி பேரலையாக சீனாவை சூழ்ந்துள்ளது. தற்போது உருமாறிய பி.எப். 7 வகை கொரோனா பாதிப்பால் சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. Source link

சீனாவில் மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பு உள்ளதாக அரசு தரப்பு விளக்கம்

பெய்ஜிங், சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. அதே சமயம் கொரோனா பாதிப்புகளை சீன அரசு முறையாக பதிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. அண்மையில் சீனாவில் அறிகுறில் இல்லாத கொரோனா பாதிப்புகளை பதிவு செய்யப்போவதில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்தது. இந்த நிலையில் இனி தினசரி கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களயும் வெளியிட மாட்டோம் … Read more

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமாக போற்றப்படும் பெத்லஹேமில் சிறப்பு பிரார்த்தனை..!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமாக போற்றப்படும் பெத்லஹேமில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஜெருசலேமைச் சேர்ந்த பாதிரியார், கிறிஸ்துமஸ் தின சேவையை வழிநடத்த, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்டோர் தேவாலய பீடங்களில் அமர்ந்திருந்து பாடல்களை பாடினர். இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். 2 வருட கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு, இம்முறை பெத்லகேம் தேவாலயத்திற்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தந்தனர். Source link

நேபாளத்தில் மீண்டும் பிரதமராகிறார் பிரசந்தா

நாடாளுமன்ற தேர்தல் 275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 20-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான 138 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. எனினும் பிரதமர் ஷேர் பகதூர் தூபா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சி 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் ஷேர் பகதூர் தூபா இறங்கினார். அதன்படி முன்னாள் பிரதமர் புஷ்ப … Read more

ஸ்பெயினில் 65 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்து.. 3 பேர் பலி!

ஸ்பெயினில்,  65 அடி உயர பாலத்திலிருந்து, ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்தனர். இரவு வேளையில், 8 பயணிகளுடன் விகோ நகரம் நோக்கி அந்த பேருந்து சென்றுக்கொண்டிருந்த நிலையில், மழை பெய்ததன் காரணமாக, சாலையில் பேருந்தின் டயர்கள் வழுக்கியதால், பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு, ஆற்றுக்குள் பாய்ந்தது. ஓட்டுநர் உள்பட 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், 3 பேர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 4 பேரை தேடும் பணிகள் விடிய விடிய தொடர்ந்து நடைபெற்றன. … Read more