கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தான்! அதிகரிக்கும் நெருக்கடி!

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: அரசியல் போராட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளில் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு மத்தியில், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாண்டு  கிரெடிட் – டிபால்ட் – ஸ்வாப் என்னும்  (CDS) திட்டம் மூலம் நாட்டிற்கு கடன் கொடுத்தால் திரும்ப வருமா என்பது குறித்து அளவிடப்படுகிறது. CDS என்பது முதலீட்டாளரை பாதுகாக்கும் ஒரு வகையான காப்பீட்டு ஒப்பந்தமாகும். கிரெடிட்-டிஃபால்ட்  ஸ்வாப் புதன்கிழமை 56.2 சதவீதத்தில் இருந்து 75.5 … Read more

காசாவில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்..!

காசாவில், அடுக்குமாடி குடியிருப்பில் நேர்ந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டன. 23 லட்சம் பேர் வசிக்கும், இடநெருக்கடி மிக்க ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறையினர் முழுவதுமாக உயிரிழந்ததால், தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்பட்டது. Source link

மற்றுமொரு கொடூரக் கொலை: இந்தியப் பெண்ணை கொன்று தலையை வெட்டிய பங்களாதேஷ் காதலன்

டாக்கா: டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண் காதலனால் கொல்லப்பட்டு துண்டு துண்டாக்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளிவராத நிலையில், அதேபோல மற்றுமொரு சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபுபக்கர் என்பவர், கவிதா ராணி என்ற பெண்ணைக் கொன்று துண்டு துண்டாக வெட்டினார். இந்த வழக்கு, மே 18 அன்று டெல்லியில் ஆப்தாப் அமீன் பூனாவாலாவால் கழுத்தை நெரித்து 35 துண்டுகளாக வெட்டப்பட்ட ஷ்ரத்தா வால்கரின் கொலையைப் போலவே இருப்பதும் வினோதமான ஒற்றுமையாக இருக்கிறது. கவிதா ராணியின் கொலை இந்தியாவில் … Read more

வாரி வழங்கிய அமெரிக்கா… வேகமாக தீர்த்த உக்ரைன்… – ஆயுதப் பற்றாக்குறையால் முடிவுக்கு வருகிறதா போர்?

உக்ரைனுக்கு தாராளமாக ஆயுதங்களை வழங்கிய அமெரிக்கா, நேட்டோ நாடுகளில் ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் விரைவில் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. வெறும் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலை தொடுத்த ரஷ்யா இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. உக்ரைன் நிலைகுலைந்தது. இந்தப் போர்தான் உலகிலேயே மிகக் குறுகிய காலம் நடந்த போராக இருக்கும் என்றெல்லாம் … Read more

ரிக்டரில் 6.9 ஆக பதிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜகார்தா: இந்தோனோஷியாவின் மேற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனோஷியாவின் தலைநகர் ஜகார்தாவின் வடமேற்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாலை சக்திவாய்ந்த நிலைநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.7 ஆக பதிவானது. இந்நிலையில் மேற்கு மாகாணத்தில் இன்று (நவ.18) இரவு நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள … Read more

ஜப்பானுக்குள் விழுந்த வடகொரிய ஏவுகணை; சகித்து கொள்ள முடியாது என பிரதமர் காட்டம்.!

அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் தாய்லாந்தில் நேற்று நடைபெற்ற ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென் கொரிய அதிபருடனும், ஜப்பான் பிரதமருடனும் முத்தரப்பு உச்சி மாநாடு நடத்தினர். அப்போது வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்தநிலையில் மூன்று நாடுகளை கண்டிக்கும் வகையில், இன்று காலை மற்றொரு கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் … Read more

பாகிஸ்தானில் 19 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 70 வயது 'வாலிபர்' !

பாகிஸ்தானில் மிக பெரிய அளவில் வயது வித்தியாசம்  இருந்தபோதிலும் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் ஜோடியின் காதல் கதை மிகவும் வைரலாகியுள்ளது.  காதலுக்கு கண் இல்லை என்பது மீண்டும் நிரூபனம் ஆகியுள்ளது. ஒரு பாகிஸ்தானிய யூடியூபர் சையத் பாசித் அலி சமீபத்தில் இந்த ஜோடியின் காதல் கதையை வெளிப்படுத்தினார். அவர்கள் லியாகத் அலி, வயது 70 மற்றும் ஷுமைலா அலி, 19 என்ற காதல் ஜோடி ஆவர். இந்த தகவல் சமூக ஊடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. காலை … Read more

10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ‘அமேசான்’ திட்டம்.. ராஜினாமா செய்வோருக்கு 3 மாத சம்பளம்..!

அமேசான் நிறுவனத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள பணிநீக்க நடவடிக்கை அடுத்தாண்டுவரை நீடிக்கும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார். மெட்டா, டுவிட்டர் நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும், செலவீனங்களை குறைக்கும் முயற்சியாக, 10,000 ஊழியர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. 2 மாதங்களுக்குள் வேறேதேனும் நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்ளுமாறு அறிவுறுத்திய அமேசான் நிறுவனம், இம்மாத 29-ந் தேதிக்குள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்வோருக்கு அடுத்த 3 மாதங்களுக்கான முழு சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.  … Read more

ஈராக்கில் சமையல் எரிவாயு வெடித்து சிதறிய விபத்தில் 15 பேர் பலி

ஈராக்கில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. சுலைமானியா (Sulaimaniya) நகரில், குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அருகிலிருந்த 3 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமான நிலையில்,5 வாகனங்கள், பல வீடுகள் பலத்த சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி 17 மணி நேரத்திற்கு பின் நிறைவுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Source link