உக்ரைனின் நோவா ககோவ்கா அணையில் குண்டு வெடிப்பு.. அணையை தகர்க்க திட்டமிடப்பட்டிருப்பதாக ரஷ்யா-உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு..!
உக்ரைனின் கெர்சான் நகரிலுள்ள நோவா ககோவ்கா அணையில் குண்டு வெடிக்கும் காட்சியை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. வெடிமருந்துகள் மூலம் அணையை தகர்க்க திட்டமிட்டிருந்ததாக, ரஷ்யாவும், உக்ரைனும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வந்தனர். கெர்சோன் நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அணைக்கு சேதம் ஏற்படலாம் என அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான Maxar தெரிவித்த நிலையில், மறுநாள் அணையில் குண்டு வெடித்துள்ளது. Source link