நாட்டுக்குள் நுழைந்த 200 டிரோன்கள்; பி.எஸ்.எஃப் ஷாக் தகவல்!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் எல்லைக்குள் டிரோன்கள் ஊடுருவல் அதிகரித்து இருப்பதாக, எல்லை பாதுகாப்பு படை கூறி இருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10 மாதங்களில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் எல்லையில் 266 டிரோன்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர். இதில் 215 டிரோன்கள் பஞ்சாப் செக்டார் வழியாகவும், 22 டிரோன்கள் ஜம்மு செக்டார் வழியாகவும் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக எல்லை பாதுகாப்புப் படையின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. … Read more

துருக்கி சுற்றுலா தளத்தில் தற்கொலை படை தாக்குதல்; பலர் உயிரிழப்பு.!

துருக்கி நாட்டின் தலைநகரம் இஸ்தான்புல்லில் பரபரப்பான ஷாப்பிங் இடங்களில் ஒன்றான இஸ்திக்லால் அவென்யூவில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 11 பேருக்கு மேல் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உள்ளூர் நேரப்படி மாலை 4.20 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி மற்றும் காயம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார். நகரின் தஸ்கிம் சதுக்கத்திற்கு அருகில் உள்ள இஸ்திக்லால் அவென்யூவில் உள்ள … Read more

துருக்கி: இஸ்தான்புல் நகரில் குண்டு வெடிப்பு : பலர் காயம்| Dinamalar

இஸ்தான்புல்:துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் காயம் அடைந்துள்ளனர். தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்திக்லால் பகுதி மக்கள் அதிகம் கூடும் பகுதியாகும். இப்பகுதியில் வெளிநாட்டினர் அதிகம் வசித்து வருகின்றனர். பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இப்பகுதிக்கு வருகை தருவர். இந்நிலையில் இன்று (14ம்தேதி) சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில்10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகவலை அந்நாட்டு டி.வி.,நிறுவனம் … Read more

சானியா மிர்சா விவாகரத்து உண்மையா?.. ஷாக் கொடுக்கும் புது அப்டேட்.!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு மகன் பிறந்தார். இருவரும் வெவேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தங்கள் நாடுகளின் சார்பாக தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். சுமார் 12 வருடங்களாக திருமண பந்தத்தில் இருந்த இந்த தம்பதிகள், தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக சமீபத்தில் தீவிரமாக செய்திகள் பரவியது. அந்த செய்திகள் உண்மை எனும் … Read more

கால்வாயில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பரிதாப பலி| Dinamalar

எகிப்து நாட்டில் நைல் நதி கால்வாயில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலியாகினர். வடகிழக்கு ஆப்ரிக்க நாடான எகிப்தின் டகாலியா மாகாணத்தில் சென்ற பஸ், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, நைல் நதியில் இருந்து செல்லும் கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 21 பயணியர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காயம் அடைந்த 30 பயணியர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எகிப்து நாட்டில் நைல் நதி கால்வாயில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலியாகினர்.வடகிழக்கு … Read more

டி20 உலக கோப்பை வென்றது இங்கிலாந்து: பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தியது| Dinamalar

மெல்போர்ன்: ஐ.சி.சி., ‘டி-20’ உலக சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்து அணி, இரண்டாவது முறையாக கைப்பற்றியது. பைனலில், 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.ஆஸ்திரேலியாவில், ‘டி-20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. மெல்போர்னில் நடந்த பைனலில் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் (15) சோபிக்கவில்லை. முகமது ஹரிஸ் (8) ஏமாற்றினார். கேப்டன் பாபர் ஆசம் (32), ஷான் மசூத் … Read more

பசியோடு உறங்க சென்று, அமெரிக்க விஞ்ஞானியாக உயர்ந்த இந்தியர்…

மேரிலேண்ட், மராட்டியத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் சிர்சாதி என்ற கிராமத்தில் குர்கெடா என்ற பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் ஹலாமி (வயது 44). பழங்குடியின சமூகத்தில் பிறந்த இவரது குடும்பத்தில் வறுமை குடி கொண்டிருந்தது. தனது இளமை பருவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஹலாமி, எங்களுக்கு என்று சிறிய அளவில் பண்ணை நிலம் இருந்தது. ஆனால், மழை காலங்களில் அதில் பயிரிட முடியாது. வேலையும் இருக்காது. உண்மையில் வாழ்க்கையை நடத்துவது அதிக கஷ்டம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. ஒரு வேளை … Read more

கால்வாயில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து… பயணிகளின் கதி என்ன?

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து டகாலியா மாகாணம் நோக்கி தனியார் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. வாகனத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணி்த்துக் கொண்டிருந்தனர். கெய்ரோவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் டகாலியா மாகாணத்தை நெருங்கி கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நைல் நதி ஓடிக் கொண்டிருக்கும் டெல்டா பகுதியின் கால்வாயில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 21 பேர் பலியாகியதாக எகிப்து நாட்டின் சுகாதார அமைச்சகம் … Read more

ஜனநாயக கட்சி கட்டுப்பாட்டில் செனட் சபை: ஜோ பைடன் மகிழ்ச்சி| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்க பார்லிமென்டிற்கு நடந்த இடைத்தேர்தலில், செனட் சபை அதிபர் ஜோ பைடனின் உள்ள ஜனநாயக கட்சி 50 இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அக்கட்சி கட்டுப்பாட்டில் வந்தது. குடியரசு கட்சி 48 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைகளுக்கு கடந்த 8ம் தேதி தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் உள்ள 100 இடங்களுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. அதில், பணவீக்கம் மற்றும் பைடனின் … Read more

அமெரிக்கா, சீனா பெயரில் உலக பொருளாதாரம் இரண்டாக பிரிக்கப்பட கூடாது: ஐ.நா. தலைவர்

நாம்பென், கம்போடியா நாட்டின் நாம்பென் நகரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ குடரெஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, நான் நேற்று நடந்த மாநாட்டில் கூறியது போன்று, நாம் எந்த விலை கொடுத்தேனும் உலக பொருளாதாரம் இரண்டாக பிரிந்து விடாமல் அதனை தவிர்க்க முயல வேண்டும். பெரிய அளவில் பொருளாதாரங்களை வழிநடத்தி செல்லும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் பெயரால் அவை இரண்டாக பிரிக்கப்பட கூடாது என கூறியுள்ளார். … Read more