சீனாவில் ராணுவப் புரட்சி | வீட்டுச் சிறையில் அதிபர் ஜி ஜின்பிங்? – சமூக ஊடகங்களில் பரவும் தகவல்

பெய்ஜிங்: சீன அதிபர் பதவியில் இருந்தும், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (பிஎல்ஏ) தலைவர் பதவியில் இருந்தும் ஜி ஜின்பிங் நீக்கப்பட்டுள்ளார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. எனினும், சீன அரசு இதை உறுதி செய்யவில்லை. இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் சூழல் ஏற்பட்டு, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், முக்கிய நிலைகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியுள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் சற்று தணிந்துள்ளது. சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் … Read more

என்னது? பூமியின் ஏலியன்களா நாம்? அதிர வைக்கும் அறிவியல் ஆராய்ச்சி!

பூமியின் பூர்வீக பிள்ளைகள் இல்லையா நாம்? என்ற கேள்விகளை ஒரு அறிவியல் ஆராய்ச்சியின் முடிவுகள் எழுப்புகின்றன. பூமியில் உயிர்கள் விண்வெளியில் இருந்து வந்திருக்கலாம் என்பதைக் குறிக்கும் சமிக்ஞைகளை ஒரு ஆராய்ச்சிக் கொடுக்கிறது. சிறுகோள் தூசியில் காணப்படும் நீர் ஏற்படுத்தும் சந்தேகங்கள், விஞ்ஞானிகளின் முந்தைய அனுமானங்களை உறுதி செய்வதாக இருக்கிறது. ரியுகு என்ற சிறுகோளில் இருந்து ஹயபுசா-2 ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்ட 5.4 கிராம் பாறைகள் மற்றும் தூசிகளின் பகுப்பாய்விலிருந்து வெளியிடப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்த கண்டுபிடிப்புகள் உள்ளன. … Read more

அமைதியை விரும்புவதாக கூறும் பாக்., எல்லாம் பொய் என இந்தியா பதிலடி

நியூயார்க்-”அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்புவதாக கூறும் ஒரு நாடு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்காது; மும்பையில் கொடூர பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தராது,” என, பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில், இந்திய நிரந்தர துாதரகத்தின் முதல் செயலர் மிஜிதோ வினிதோ பதிலடி கொடுத்தார். ஐ.நா., பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர்ஷபாஸ் ஷெரீப் பேசியதாவது:பாகிஸ்தான், இந்தியா உட்பட அண்டை நாடுகளுடன் … Read more

'உனக்கு 12… எனக்கு 30' – அமெரிக்க அதிபர் பைடன் பேச்சால் சலசலப்பு

அமெரிக்க நாட்டு அதிபரும், ரிப்ளிக் கட்சித் தலைவருமான ஜோ பைடன், நாட்டின் மிகப்பெரிய ஆசிரியர் சங்கமான தேசியக் கல்விச் சங்கத்தில் நேற்று உரையாற்றினார். பருவநிலை மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு பெண்மணியை பைடன் கவனித்தார். பருவநிலை மாற்றம் குறித்த தனது பேச்சை பாதியில் நிப்பாட்டிய அதிபர் பைடன், அந்த பெண்ணை சுட்டிக்காட்டி,”நீங்கள் எனக்கு வணக்கம் சொல்லலாம்” என கூறினார். அதாவது, ஏற்கெனவே இருவரும் ஒருவருக்கொருவர் அறிந்தவர்கள் என தெரிந்தது.  மேலும் படிக்க | மாமிசம் சாப்பிட்டால் … Read more

வீட்டுக்காவலில் சீன அதிபர் ஷி ஜின்பிங்? இணையத்தில் பரவும் தகவல்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீன அதிபர் ஷி ஜின்பிங் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரத்தை சீன ராணுவம் கைப்பற்றிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பர வி வருகிறது. ஆனால், அதன் உண்மை தன்மை உறுதி செய்யப்படவில்லை. சீன அதிபராகவும், சீன ராணுவத்தின் தலைவராகவும் இருப்பவர் ஷி ஜின்பிங் உள்ளார். அந்நாட்டின் வலிமையான தலைவராக திகழ்ந்த அவர், கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் பரவி … Read more

பாதுகாப்பும் கவனமும் அற்ற சிகிச்சையால் ஆண்டுக்கு 26 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார நிறுவனம்

புதுடெல்லி: பாதுகாப்பும் கவனமும் அற்ற சிகிச்சையால் ஆண்டுக்கு 26 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை பாதுகாப்பானதாகவும், கவனத்துடன் கூடியதாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனினும், உலகின் பல பகுதிகளில் இத்தகைய சிகிச்சை நோயாளிகளுக்கு கிடைப்பதில்லை என்பதை புள்ளி விவரத்துடன் தெரிவிக்கிறது உலக சுகாதார நிறுவனம். குறிப்பாக, குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் பாதுகாப்பான, கவனத்துடன் கூடிய சிகிச்சை வழங்கப்படாததால் ஆண்டுதோறும் … Read more

அமைதிப் போராட்டத்தில் படைகளை பயன்படுத்தாதீர்கள்: ஈரானுக்கு ஐ.நா. வேண்டுகோள்

வாஷிங்டன்:அமைதியான போராட்டத்தில் தேவை இல்லாமல் படைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்று ஈரானிடம் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. ஈரானில் 80 நகரங்களில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது. போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். பல காயமடைந்தனர். இந்த நிலையில் போராடும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் குரல்கள் வலுத்து வருகின்றன. … Read more

டீ குடித்தால் டைப் 2 சர்க்கரை நோயை தவிர்க்கலாம்: 10 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு

வாஷிங்டன்: நாளொன்றுக்கு 4 முறை டீ குடித்தால் டைப் 2 சர்க்கரை நோயை தவிர்க்கலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்க்கரை நோய் ஆய்வுக்கான ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டம், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 8 நாடுகளைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில், பிளாக் டீ, … Read more

ஈரானில் ஹிஜாப் எரிப்பு போராட்ட பலி எண்ணிக்கை உயர்வு..! – தொடரும் பதற்றம்..!

ஈரானில் பூதாகரமாக வெடித்துள்ள 22 வயது மஹ்சா அமினியின் மரணத்தை எதிர்த்து, 30க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது. ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் என்பது பாரம்பரியமாக முஸ்லிம் பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு வெளியே ஆண்களின் முன்னிலையில் அணியும் ஒரு முக்காடு ஆகும். 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அனைத்துப் பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டாய ஆடைக் குறியீட்டை ஈரான் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஈரானில் 9 வயதுக்கு … Read more