கண்ணீருடன் விடை பெற்றார் பெடரர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில், தனது கடைசி போட்டியில் விளையாடிய சுவிட்சர்லாந்தின் பெடரர், கண்ணீருடன் விடை பெற்றார். இங்கிலாந்தின் லண்டனில், லேவர் கோப்பை டென்னிஸ் 5வது சீசன் நடக்கிறது. இதில் ஐரோப்பா, உலக அணிகள் மோதுகின்றன. ஐரோப்பா அணி சார்பில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். … Read more

அமைதியை விரும்பும் நாடு ஏன் தாவூத்துக்கு அடைக்கலம் தருகிறது? – ஐ.நா. சபையில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 77வது ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி பாகிஸ்தான் பிரதார் ஷபாஸ் ஷெரீஃபின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு தக்க பதிலடியும் கொடுத்துள்ளார். முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஐ.நா. சபையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப், “பாகிஸ்தான் இந்தியா உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை விரும்புகிறது. ஆனால் இந்தியாவுடனான சுமுகமான உறவு அது காஷ்மீர் பிரச்சினைக்கு நியாயமான நேர்மையான தீர்வு ஏற்படுத்தும் வரை சாத்தியப்படாது” … Read more

மூன்றாம் சார்லஸின் பாதுகாவலர்கள் போலிக் கையுடன் வலம் வருகிறார்களா? – இணையத்தில் வைரலாகும் போட்டோக்கள்

லண்டன்: இங்கிலாந்தின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் பாதுகாவலர் களாக வரும் நபர்கள், போலிக்கைகளுடன் வலம் வருவதாகவும், உண்மையான கையில் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளனர் எனவும் இணையத்தில் போட்டோவுடன் கூடிய தகவல்கள் வைரலாக பரவியுள்ளன. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப்பின், இளவரசராக இருந்த சார்லஸ், புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். இயைடுத்து மன்னர் மூன்றாம் சார்லஸின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவருடன் மெய்க்காப்பாளர்கள் வருகின்றனர். மன்னர் சார்லஸ் பொது மக்களை சந்தித்து வாழ்த்துக்களை பெறும் சில போட்டோக்கள் வெளியாயின. … Read more

உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதற்கான பொதுவாக்கெடுப்பு தொடங்கியது

கீவ், உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி முதல் ரஷியா போர் தொடுத்து வருகிறது.தலைநகர் கீவை கைப்பற்ற முடியாத நிலையில் ரஷிய படைகள் கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைன் மீது கவனம் செலுத்த தொடங்கின. இதன் மூலம் கிழக்கு, தெற்கு உக்ரைனில் உள்ள பல பகுதிகள் ரஷிய வசம் வந்தன. இந்த நிலையில் ஏற்கனவே ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மற்றும் தற்போது ரஷிய படைகளம் வசம் இருக்கும் … Read more

லெபனானிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேற சென்றபோது சிரியாவில் படகு கவிழ்ந்து 73 பேர் உயிரிழப்பு

டமாஸ்கஸ்: சிரியாவில் படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. லெபனான் நாட்டில் பஞ்சம் அதிகரித்துள்ளதால் அங்கிருந்து ஏராளமான மக்கள் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர். லெபனான் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்நாட்டின் பணமதிப்பு 90 சத வீதம் சரிவடைந்தது. இதனால் அந்த நாட்டில் லட்சக்கணக் கானோர் வேலையை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தெருவுக்கு வந்துவிட்டனர். இந்நிலையில் லெபனான் நாட்டிலிருந்து படகு மூலம் நேற்று முன்தினம் … Read more

ஜப்பானில் ஷின்ஜோ அபேவுக்கு நினைவு நிகழ்ச்சி நடத்த கடும் எதிர்ப்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம்

டோக்கியோ, ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்கிற பெருமைக்குரியவரான முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி தேர்தல் பிரசாரம் ஒன்றில் பங்கேற்றிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இது ஜப்பான் மட்டும் இன்றி ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் ஷின்ஜோ அபேயின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜப்பானில் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு வருகிற 27-ந்தேதி அரசு சார்பில் நினைவு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதில் … Read more

‘சுட்டுக் கொல்லப்படலாம் என்ற பயத்தில் உள்ளோம்’ – மியான்மரில் பிணைக் கைதிகளாக இருக்கும் இந்தியர்கள் பதற்றம்

கொச்சி: டேட்டா என்ட்ரி வேலை, நல்ல சம்பளம் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் இந்தியாவி லிருந்து 300 பேர் வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில், கேரளாவைச் சேர்ந்த 30 பேரும் அடங்குவர். இவர்களை ஒரு கும்பல் தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு கடத்திச் சென்று சைபர் குற்றங்களில் ஈடுபட வற்புறுத்துவதாக தகவல் வெளியானது. இந்தியர்கள் தங்களை காப்பாற்ற கோரி வெளியிட்ட வீடியோ மூலம் இந்த கடத்தல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, மத்திய அரசு அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. … Read more

உக்ரைன் போரில் பங்கேற்பதை தவிர்க்க அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷிய ஆண்கள்

மாஸ்கோ, உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷியாவின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் இலக்கை அடையும் வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக கூறி வருகிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாக உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த 3 லட்சம் ரஷியர்களை … Read more

ஆயுதங்களாலும், விஷம் நிறைந்த பொய்களாலும் ரஷ்யா இரட்டைத் தாக்குதலை நடத்தி வருகிறது – ஐரோப்பிய கவுன்சில் தலைவர் கடும் விமர்சனம்!

ஆயுதங்களாலும், விஷம் நிறைந்த பொய்களாலும் ரஷ்யா இரட்டைத் தாக்குதலை நடத்தி வருவதாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மிக்கேல் விமர்சனம் செய்துள்ளார். ஐ.நா.பொதுசபையில் பேசிய அவர், கற்பனையான ஒரு எதிரிக்கு எதிராக உலகை ஒன்று திரட்ட ரஷ்யா முயற்சிப்பதாக சாடினார். உக்ரைன் உள்ளிட்ட எந்த ஒரு நாடும் ரஷ்யாவை மிரட்டவோ தாக்கவோ இல்லை என்றும், ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே ரஷ்யாவுடன் முரண்பட்டு இருப்பதை விரும்பவில்லை என்றும், நீண்ட காலமாக மேற்கத்திய நாடுகளால் அச்சுறுத்தல் இருப்பதாக ரஷ்யா கூறி … Read more

அர்ஜென்டினா: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து – 3 பேர் உயிரிழப்பு

பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினாவின் தெற்கு பகுதியில் உள்ள நியூகன் மாகாணத்தின் பிளாசா ஹுயின்குல் நகரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இந்த ஆலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது ஆலையில் உள்ள முக்கிய கச்சா எண்ணெய் தொட்டிகளில் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அதை தொடர்ந்து மளமளவென பற்றி எரிந்த தீ அடுத்தடுத்து தொட்டிகளுக்கும் பரவியது. இப்படி மொத்தம் 6 எண்ணெய் தொட்டிகளில் தீப்பற்றி … Read more