விண்வெளிக்கு குரங்குகளை ஆய்வுக்காக அனுப்ப சீனா திட்டம்..!

விண்வெளியிலுள்ள சீன விண்வெளி நிலையத்திற்கு குரங்குகளை அனுப்பி அதன் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க முறையை ஆராய்ச்சி செய்ய அந்த நாடு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பூஜ்ஜிய புவியீர்ப்பு சூழலில் குரங்கின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க முறையைத் தெரிந்து கொள்ள இந்த ஆராய்ச்சி உதவும் என்றும், விலங்குகளைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் மனிதர்கள் விண்வெளியில் வாழத் தேவையான கூற்றுகளைத் தெரிந்து கொள்ள முடியுமென்றும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Source link

சிறிய ரக பயணிகள் விமானம் ஏரிக்குள் விழுந்து விபத்து.. 19 பேர் உயிரிழப்பு..!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. டாரஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக, அங்குள்ள விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்த நிலையில், பலி எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 26 பேர் மீட்கப்பட்டதாகவும், எஞ்சியோரை தேடும் பணி நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   … Read more

டுவிட்டரை தொடர்ந்து மெட்டா… பெருமளவு ஊழியர்களை இந்த வாரம் பணி நீக்கம் செய்ய திட்டம்

வாஷிங்டன், உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் உலகின் மிகவும் பிரபல சமூகவலைதள நிறுவனமான டுவிட்டரை சமீபத்தில் வாங்கினார். இதனையடுத்து, டுவிட்டரில் அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 7 ஆயிரத்து 500 ஊழியர்களில் 50 சதவிகித ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி கடந்த 5 ம் தேதி டுவிட்டர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், டுவிட்டர் ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், டுவிட்டரை தொடர்ந்து பேஸ்புக்கின் … Read more

துபாய் புர்ஜ் கலிபா அருகில் உள்ள 35 மாடி கட்டிடத்தில் கொழுந்து விட்டு எரியும் தீ – வீடியோ

துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா அருகே துபாயில் உள்ள 35 மாடி கட்டிடத்தில் திங்கள்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. அசோசியேட்டட் பிரஸ் பத்திரிக்கையாளர் அந்த இடத்தை அடைந்த நேரத்தில், அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவர்கள் விபரம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. எமிரேட்டில் அரசு ஆதரவு டெவலப்பரான எமாரின் 8 பவுல்வர்டு வாக் என்றழைக்கப்படும் அடுக்கு மாடி கட்டிட தொடரின் … Read more

வங்கி கணக்கில் சம்பளத்துடன் விழுந்த ரூ.10 கோடி; திடீர் கோடீசுவரரான காவல் அதிகாரி

கராச்சி, பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஆமீர் கோபங். இவரது வங்கி கணக்கில் சம்பளத்துடன் அடையாளம் தெரியாத வழியில் இருந்து ரூ.10 கோடி விழுந்து உள்ளது. ஆனால், இதனை பற்றி அவர் அறியவில்லை. திடீரென வங்கியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை எடுத்து பேசியவரிடம், உங்களது வங்கி கணக்கில் ரூ.10 கோடி விழுந்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனார். இதுபற்றி கோபங் … Read more

Black Hole: சூரியனை விட 10 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு!

பூமிக்கு மிக அருகில் சூரியனை விட 10 மடங்கு பெரிய கருந்துளையை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது, சூரியனைவிட மூன்று மடங்கு அளவு, பூமிக்கு நெருக்கமாக உள்ளது. இந்த கருந்துளை, பூமியில் இருந்து 1,600 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கருந்துளை என்பது விண்வெளியில் புவியீர்ப்பு மிகவும் வலுவாக இருக்கும் ஒரு பகுதி, இதில் ஒளி கூட வெளியேற முடியாது. பொருள் ஒரு சிறிய பகுதியில் சுருக்கப்பட்டதால், ஈர்ப்பு மிகவும் தீவிரமாக இருக்கும். கருந்துளைகளுக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரங்கள் … Read more

இலங்கை வீரர் குணதிலகவுக்கு ஜாமின் மறுப்பு| Dinamalar

கொழும்பு: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகவை, பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில், சிட்னி போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் இன்று(நவ.,07) குணதிலகவுக்கு ஜாமின் அளிக்க சிட்னி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகவை, பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில், சிட்னி போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் இன்று(நவ.,07) புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

சூரியனை விட பன்மடங்கு பெரிய கருந்துளை பூமியின் மிக அருகில்…

வாஷிங்டன், நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி மண்டலத்தில் நட்சத்திரங்கள், விண்மீன்கள், விண்கற்கள் என ஆச்சரியமளிக்கும் பல விசயங்கள் காணப்படுகின்றன. அவற்றில் கருந்துளையும் அடங்கும். சில கருந்துளைகள் சூரியனை விட 5 முதல் 100 மடங்கு அதிக எடையை கொண்டிருக்கும். இவை ஸ்டெல்லார்-மாஸ் வகையை சார்ந்தவை. இந்த வகை கருந்துளைகள் பால்வெளி மண்டலத்தில் மட்டும் 10 கோடி வரை இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த முறை வானியல் நிபுணர்களின் பார்வைக்கு இந்த வகை கருந்துளைகள் வந்துள்ளன. … Read more

தான்சானியா விமான விபத்து: 19 பேர் பலி; இதுவரை 26 பேர் மீட்பு

டோடோமா: ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் ஏரி ஒன்றில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் பலியாகினர்; பலர் மாயமாகினர். தான்சானியாவின் வடமேற்கு நகரமான புகோபாவில் தரையிறங்குவதற்கு சற்று நேரம் முன்பு மோசமான வானிலை காரணமாக பயணிகள் விமானம் ஒன்று விக்டோரியா ஏரியில் விழுந்தது. இந்த விபத்தில் 19 பேர் பலியானதாக தான்சானியா அரசு தெரிவித்துள்ளது. நேற்று நடந்த இந்த விபத்து குறித்து மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “விமானத்தில் 40-க்கும் அதிகமானவர்கள் பயணித்துள்ளனர். இதில் 19 … Read more

எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி – போலி டுவிட்டர் கணக்குகள் எச்சரிக்கையின்றி நிரந்தரமாக நீக்கம்

வாஷிங்டன், உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனம் தொடர்பாக அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பல்வேறு டுவிட்டர் பயனாளர்கள் ‘புளூ டிக்’ சரிபார்ப்பு அடையாளம் பெற மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் 650 ரூபாய்) கட்டணம் செலுத்த வேண்டும் என டுவிட்டர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கட்டண நடைமுறை விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. … Read more