ராணி எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த சீன பிரதிநிதிகளுக்கு தடை! பின்னணி இதுதான்

லண்டன்: இங்கிலாந்து மகாராணியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு சீன பிரதிநிதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன தூதரகம் இந்த நடவடிக்கையை விமர்சித்தது. மேலும், சீன பிரதிநிதிகள் பிரிட்டன் மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த விதிக்கப்பட்ட தடை “தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக சீனாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பைத் தடுக்க இங்கிலாந்து பாராளுமன்றத்தின் சில தனிநபர்களின் வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான நடவடிக்கை” என்று சீனா கூறியது. தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மரியாதை செலுத்துவதற்காக சீன … Read more

நட்பு நாடுகள் கூட பாகிஸ்தானை பிச்சை கேட்கும் நாடாக பார்க்கின்றன: பாகிஸ்தான் பிரதமர் வேதனை

இஸ்லமாபாத்: நட்பு நாடுகள் கூட பாகிஸ்தானை பிச்சை கேட்கும் நாடாகப் பார்ப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேதனை தெரிவித்துள்ளார். கனமழை – வெள்ளப் பெருக்கு காரணமாக வரலாறு காணாத இயற்கைப் பேரிடரை பாகிஸ்தான் எதிர்க் கொண்டது. வெள்ளப் பெருக்கில் இதுவரை 1,200 பேர் பலியாகியுள்ளனர். 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 3 கோடிக்கும் அதிகமான மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தினால் சுமார் 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. … Read more

இது போருக்கான காலம் அல்ல – ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் இடையே, ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, இது போருக்கான காலம் அல்ல என தெரிவித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இடையே, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்து வருவதை சுட்டிக்காட்டி, இது போருக்கான காலம் அல்ல என குறிப்பிட்டார். … Read more

சீனாவில் தீக்கு இரையான 42 மாடி கட்டடம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹூனான்: சீனாவின் சாங்கா நகரில் 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 715 அடி உயரமுள்ள கட்டடம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தின் சாங்கா நகரில் 42 மாடி கட்டடம் உள்ளது. 715 அடி உயரமுள்ள இந்த கட்டடம் 2000ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டடத்தில் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சீனா டெலிகாமின் அலுவலகம் இயங்கி வந்தது. … Read more

ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார் பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: எஸ்.சி.ஓ. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகஉஸ்பெஸ்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடினை சந்தித்து பேசினார். எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு உஸ்பெஸ்கிஸ்தானில் உள்ள சமர்காண்ட்டில் துவங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க சென்றார்.மாநாடு நடைபெறும் சமர்காண்ட் நகரில் ரஷ்ய அதிபர் … Read more

சீனாவில் பயங்கர தீ விபத்து..! – பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சி..!

சீனாவில் 42 மாடி கட்டடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் பரபரப்பு நிலவுகிறது. சீனாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரில் 42 மாடி கட்டடம் உள்ளது. 715 அடி உயரமுள்ள இந்த கட்டடம் 2000 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கட்டடத்தில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரில் 42 மாடிவானளாவிய கட்டிடம் ஒன்று செயல்பட்டு … Read more

‘குவியல் குவியலாக சடலங்கள்’ – ரஷ்ய படைகளின் மனித உரிமை மீறல்களை அடுக்கும் உக்ரைன்

கீவ்: ரஷ்ய படைகள் தாக்கிய பகுதிகளில் குவியல் குவியலாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுக்கியுள்ளார். உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் இசியம் என்ற பகுதியிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அங்கு உக்ரைன் படைகள் எதிர்பாராத அளவில் பலம் பொருந்திய தாக்குதலை நடத்தின. இதனைத் தொடர்ந்து ரஷ்ய வீரர்கள் அங்கிருந்து பின்வாங்கினர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட்டு தப்பித்து ஓடினர். இதன் காரணமாக … Read more

விமான போக்குவரத்தில் அடி வாங்கும் ரஷ்யா! மேற்கத்திய நாடுகளின் தடைகளின் எதிரொலி

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தன் விளைவாக மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் ரஷ்ய விமானப் போக்குவரத்துத் துறையை மோசமாகப் பாதித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் கனடா ஆகியவை ரஷ்ய விமானங்கள், தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் எதிர்மறை விளைவுகளை எதிர் கொண்டு வரும் ரஷ்யா, பிராந்திய விமான நிறுவனங்களின் விமானிகளே, தங்கள் சொந்த விமானங்களை பராமரிக்க வேண்டும் என்று நியூஸ் வீக் செய்தி வெளியிட்டுள்ளது.  … Read more

கொரோனா மரணங்கள் நிலவரம்..! – உலக சுகாதார நிறுவனம் கூறும் அந்த நல்ல செய்தி..!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருகின்றன என உலக சுகாதார தலைவர் பேட்டி. உலக மக்களை கொரோனா பெருந்தொற்று பெரிதும் ஆட்டி படைத்து வருகிறது. இதனால் உலகம் முழுதும் உள்ள மக்கள் பெரும் அச்சத்திற்கும் பாதிப்பிற்கும் உள்ளானார்கள். இது உலகம் முழுவது பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. இதன் விளைவாக உலகம் எங்கிலும் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இது மக்களின் பொருளாதார சூழலையும் பெரிதும் பாதித்தது. இந்த நிலையில் … Read more

ஹெட்போன் மாட்ட தடுமாறிய பாக்., பிரதமர்: பார்த்து சிரித்த புடின்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாமர்கண்ட்: உஸ்பெகிஸ்தானில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்த பேச்சுவார்த்தை ஆரம்பித்த போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் காதில் இருந்த ஹெட்போன் கீழே விழுந்தது. அதனை மாட்ட ஷெரீப் தடுமாறிய நிலையில் உதவியாளரை வந்து அதனை சரியாக மாட்டினார். இதனை பார்த்து கொண்டிருந்த புடின் சிரிப்பை அடக்க முடியாமல் கட்டுப்படுத்தியவர் ஒரு கட்டத்தில் சிரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதனை பார்த்து பாகிஸ்தானியர்கள், அவர்கள் பிரதமரை … Read more