இரவு விடுதியில் தீ விபத்து ரஷ்யாவில் 15 பேர் பலி| Dinamalar

மாஸ்கோ, ரஷ்யாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 15 பேர் உடல் கருகி பலியாகினர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து, 340 கி.மீ., தொலைவில் உள்ளது கோஸ்ட்ரோமா என்ற நகரம். இங்கு மக்களின் பொழுது போக்கிற்காக ஏராளமான இரவு விடுதிகள் செயல்படுகின்றன. இந்நிலையில், இங்குள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது; ஒருவரை ஒருவர் தாக்கினர். இவர்களில் ஒருவர் துப்பாக்கியால் … Read more

இந்தியர்கள் திறமையானவர்கள் ரஷ்ய அதிபர் புடின் புகழாரம்| Dinamalar

மாஸ்கோ,’இந்தியர்கள் மிகவும் திறமையானவர்கள்; வளர்ச்சியில் இந்தியா மிகப் பெரும் சாதனைகளை படைக்கும்’ என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். ரஷ்யாவின் ஒற்றுமை தினத்தையொட்டி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் நாட்டு மக்களிடையே, ‘டிவி’ வாயிலாக உரையாற்றினார். அப்போது, ரஷ்யாவின் பெருமை, சிறப்புகள் குறித்தும், மற்ற நாடுகள் குறித்தும் தன் பேச்சில் அவர் குறிப்பிட்டார். இந்தியா குறித்து தன் பேச்சில் அவர் குறிப்பிட்டதாவது:காலனி ஆதிக்கத்தின்போது, ஆப்ரிக்கா பெரிய அளவில் சூறையாடப்பட்டது. அவ்வாறு சூறையாடப்பட்ட வளத்தினாலேயே, … Read more

ரஷ்யாவில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து – 13 பேர் உயிரிழப்பு..!

ரஷியாவில் இரவு விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் 13 பேர் இறந்தனர். கோஷ்ட்ரோமா சிட்டியில் ஓல்கா நதிக்கரையில் உள்ள இரவு கேளிக்கை விடுதியில் நள்ளிரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 13 பேர் இறந்ததாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகளில் மீட்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். Source link

'எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க..!' – ட்விட்டர் ஊழியர்களிடம் மனமுருகிய ஜாக் டோர்சி!

ட்விட்டர் நிறுவன ஊழியர்களிடம் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி மன்னிப்புக் கேட்டுள்ளார். உலகின் மிகவும் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் வாங்கினார். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். மேலும், உலகம் முழுவதும் பணியாற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. … Read more

பகீர் கிளப்பிய பைடன்; அதிர்ச்சியில் உறைந்த எலான் மஸ்க்!

உலகிலேயே மிகவும் பிரபலமான சமூக வலைதளமாக கருதப்படும் டிவிட்டரை மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் சமீபத்தில் விலைக்கு வாங்கினார். இதைத் தொடர்ந்து டிவிட்டர் நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருந்து வந்த நிர்வாகிகளை திடீரென எலான் மஸ்க் பணியில் இருந்து நீக்கினார். அதுமட்டும் இன்றி உலகம் முழுவதும் பணியாற்றும் டிவிட்டர் நிறுவன ஊழியர்கள் பலரையும் பணியில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் … Read more

கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சியினால் 205 யானைகள் இறப்பு..!

கென்யா நாட்டில் நிலவும் வறட்சியினால் 205 யானைகள் இறந்துள்ளன. 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அங்கு வறட்சி நிலவுவதால் அம்போசெலி, சம்புரு, டைட்டா டிவிட்டா பகுதிகளில் உள்ள காடுகளில் யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. கடந்த 9 மாதத்தில் 205 யானைகள் இறந்ததாக கென்யா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இறந்த குட்டியை தாய் யானை பரிதவிப்போடு பார்க்கும் காட்சி, எழுந்து நிற்க முடியாத யானையை வனத்துறையினர் கயிறு கட்டி இழுத்த போதும் அந்த யானை நிலைகுலைந்து … Read more

இந்தியாவை பாருங்கள்; திறமையால் முன்னேறுகின்றனர்: புடின் புகழாரம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: இந்தியர்கள் திறமைசாலிகள், முயற்சி செய்பவர்கள் எனக்கூறியுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வளர்ச்சியில் இந்தியா சிறப்பான இடத்தை அடையும் ஆற்றல் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனக்கூறியுள்ளார். ரஷ்ய ஒற்றுமை தினம் (நவ.,4) முன்னிட்டு, நடந்த நிகழ்ச்சியில் புடின் பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் திறமைசாலிகளாகவும், முயற்சி செய்பவர்களாகவும் உள்ளனர். இதன் மூலம் இந்தியா சிறப்பான இடத்தை அடையும். வளர்ச்சி அடிப்படையில், … Read more

சிலி நாட்டில் நடந்த ருசிகரம்.. நேரலையில் திருட்டு அதிகம் என்று கூறிய நிருபரின் இயர்பேடை கவ்விச் சென்ற கிளி..!

தென்அமெரிக்க நாடான சிலியின் சான்டியகோ பகுதியில் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் அப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, பறந்து வந்த ஒரு கிளி அவரது தோள்பட்டையில் அமர்ந்தது. அந்த நிருபரோ, பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதியில் என்ற சொல்லும் போதே அந்த கிளி நிருபரின் காதில் மாட்டியிருந்த இயர்பேடை கவ்விக் கொண்டு பறந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அந்த கிளியை பிடிக்க முயற்சித்த போது கிளியோ … Read more

டி-20 உலக கோப்பை: அரையிறுதியில் இங்கிலாந்து| Dinamalar

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு 2வது அணியாக இங்கிலாந்து முன்னேறியது. குருப் 1 பிரிவில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இலங்கைக்கு அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ரன் ரேட் அடிப்படையில் 2வது இடம் பிடித்து அரையிறுதிக்கு அந்த அணி முன்னேறியது. இதனால், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தொடரில் இருந்து வெளியேறியது.நாளை நடக்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய … Read more

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் 'Artemis 1' ராக்கெட் ஏவும் தேதியை அறிவித்தது NASA!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ம் ஆண்டின் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ் 1’ திட்டத்தை நாசா துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 2025ம் ஆண்டிற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை கடந்த ஆக்ஸ்ட் மாதம் 29-ந் தேதி, அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு … Read more