தாய்லாந்தில் ராணுவ கல்லூரியில் துப்பாக்கிச்சூடு; 2 வீரர்கள் உயிரிழப்பு

பாங்காக், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் ராணுவ கல்லூரி ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த கல்லூரி வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது கல்லூரியில் பணியில் இருந்த 59 வயதான ராணுவ வீரர் ஒருவர் திடீரென சக வீரர்களை துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவ வீரர் சுட்டதில் 3 வீரர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து அந்த ராணுவ வீரர் அங்கிருந்து … Read more

மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகக் கூறிய பாகிஸ்தானுக்கு தாலிபன் அரசு கண்டனம்!

மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகக் கூறிய பாகிஸ்தானுக்கு தாலிபன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய பொய்கள் இருதரப்பு உறவை பாதிக்கும் என்று தாலிபன் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மும்பைத் தாக்குதல் வழக்கில் தேடப்படும் முக்கியக் குற்றவாளியான மசூத் அசாரை ஐநாவும் தீவிரவாதியாக பட்டியலிட்டு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தாலிபன் அரசுக்கு எழுதிய கடிதத்தில் மசூத் அசார் நங்கர்ஹார் எனுமிடத்தில் பதுங்கியிருப்பதாக தெரிவித்திருந்தது. இதனை மறுத்துள்ள ஆப்கானிஸ்தான் தாலிபன் வெளியுறவு அமைச்சகம், ஆதாரமற்ற இத்தகைய தகவல்களை வெளியிட வேண்டாம் … Read more

சீனாவில் புதிதாக 1,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,048 பேருக்கு … Read more

4 இருக்கைகளுடன் 4 கதவுகளை கொண்ட அதிநவீன காரை அறிமுகப்படுத்தியது ஃபெராரி கார் நிறுவனம்

விலை உயர்ந்த பந்தயகார்கள் உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் இத்தாலியின் ஃபெராரி கார் நிறுவனம் தனது முதல் 4 இருக்கைகளுடன் 4 கதவுகளை கொண்ட அதிநவீன காரை அறிமுகப்படுத்துகிறது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ப்யூரோசேங் என்ற பெயருடைய இந்த கார் , சக்திவாய்ந்த V12 என்ஜினுடன், 715 குதிரை திறன் வேகத்தில் செல்லும் திறன் படைத்தது. வெறும் 3.3 விநாடிகளில் இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. 4 வீல் ட்ரைவ் உடன் … Read more

இந்தியாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை – இலங்கை தொடங்கியது

கொழும்பு, பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பெருமளவில் கடன் வழங்கி இருக்கின்றன. அதேநேரம் சர்வதேச நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கு அந்த நாடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் வெளிநாடுகளிடம் இருந்து பெற்றுள்ள கடன்களை மறுசீரமைத்தால் மட்டுமே இலங்கைக்கு சர்வதேச நிதியத்தின் கடன் உதவி கிடைக்கும். எனவே இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. இதற்காக லசார்டு என்ற வெளிநாட்டு … Read more

கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்- உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா, உலக அளவில் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட கொரோனா தொற்று வழக்குகளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்துமாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், “தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நாம் இதைவிட ஒருபோதும் சிறந்த நிலையில் இருந்ததில்லை. கொரோனா முற்றிலும் முடியவில்லை. ஆனால் அதன் முடிவு நமக்கு எட்டும் தூரத்தில் … Read more

பாக்.,கில் வெடிகுண்டு தாக்குதல்பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு| Dinamalar

பெஷாவர்:பாகிஸ்தானில், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள பாரா பண்டாய் என்ற இடத்தில், நேற்று முன்தினம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கு கபல் தேசில் என்ற பகுதியின் தலைவரும், அமைதிக் குழு உறுப்பினருமான இத்ரீஸ் கான் என்பவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இத்ரீஸ் கான், இரண்டு போலீசார் உட்பட, ஐந்து பேர் உயிரிழந்தனர்.சம்பவ இடத்தில் நேற்று மேலும் மூன்று … Read more

வேகமாகப் பரவும் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்- பிஏ.4.6 மாறுபாடு பற்றிய புதிய தகவல்..!!

லண்டன், கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோய்க்கு எதிராக உலக நாடுகள் போராடி வந்தது. தொற்று நோய் பரவல் முடிவுக்கு வரப்போகிறது என்று தோன்றும்போது, ​​வைரஸின் புதிய மாறுபாடு வெளிப்பட்டு, கவலைகளை தொடரச் செய்கிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸின் ஒமைக்ரான் பிஏ.4.6 துணை மாறுபாடு அமெரிக்காவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை பிஏ.4.6 துணை மாறுபாடு தற்போது இங்கிலாந்தில் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து … Read more

நைட்ரஜன் ஹிபோக்சியா வாயிலாகமரண தண்டனை நிறைவேற்ற முடிவு| Dinamalar

மான்ட்கோமெரி:கைதி ஒருவரின் மரண தண்டனையை, ‘நைட்ரஜன் ஹிபோக்சியா’ என்ற முறையில் நிறைவேற்ற, அமெரிக்காவின் அலபாமா மாகாணம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, விரிவான நடைமுறையை அறிவிப்பதாகவும் கூறியுள்ளது.அமெரிக்காவில், கைதிகளின் மரண தண்டனை, விஷ ஊசியின் வாயிலாகவே நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், நைட்ரஜன் ஹிபோக்சியா என்ற முறையில் தண்டனையை நிறைவேற்ற, ஓக்லஹாமா, மிஸ்சிசிப்பி மாகாணங்களைத் தொடர்ந்து, அலபாமா மாகாணமும் 2018ல் முடிவு செய்தது.ஆனால் இதுவரை இந்த முறையில் எந்த மாகாணத்திலும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த முறையில் தண்டனையை எப்படி … Read more