சீனாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 36 பேர் உடல்கருகி உயிரிழப்பு.!
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 36 தொழிலாளர்கள் உடல்கருகி உயிரிழந்தனர். அன்யாங் நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் திங்கள்கிழமை பிற்பகலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 63 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலை வரை கொழுந்து விட்டு எரிந்த தீயில் கருகி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Source link