10 ஆயிரம் பேரை அனுப்ப திட்டம்| Dinamalar

புதுடில்லி:’மெட்டா, டுவிட்டர், அமேசான்’ ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, ‘கூகுள்’ நிறுவனமும், 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.அண்மைக்காலமாக, டுவிட்டர் துவங்கி அமேசான் வரை, பல்வேறு பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், செலவுகளைக் குறைக்கும் வகையில், ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன.அந்த வரிசையில், கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பபெட்’ நிறுவனமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவுக்கு வந்துஉள்ளது. மோசமாக பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு … Read more

indonesia earthquake: 200 ஐ தாண்டிய பலி எண்ணிக்கை… 25 முறை பூமி அதிர்ந்ததால் பொதுமக்கள் பீதி!

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் அவ்வபோது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தோனேஷியாவில்தான் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்படுவதாக தெரிகிறது. ஜாவா தீவில்: இதனை மெய்ப்பிக்கும் விதத்தில் நேற்று மதியம், இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள குடியிருப்புகள், கட்டடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை சில வினாடிகள்குலுங்கின. இதனால் அச்சமும், அதிர்ச்சியும அடைந்த பொதுமக்கள் அலறி … Read more

சவுதியில் 10 நாளில் 12 பேருக்கு  மரண தண்டனை நிறைவேற்றம்| Dinamalar

ரியாத்:சவுதி அரேபியாவில், கடந்த, 10 நாட்களில் மட்டும் 12 பேருக்கு வாளால் கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதி அரேபியாவில், . கொலை, பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்தது என, குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், போதைப் பொருள் பயன்படுத்தியது, கடத்தியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 12 பேருக்கு, கடந்த, 10 நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. வாளால் கழுத்து … Read more

உக்ரைனில், ஆட்சியை மாற்றுவது தங்கள் நோக்கம் இல்லை – ரஷ்யா திட்டவட்டம்..!

உக்ரைனில், ஆட்சியை மாற்றுவது தங்கள் நோக்கம் அல்ல என ரஷ்யா தெரிவித்துள்ளது.  உக்ரைனில் உருவான ரஷ்யாவிற்கெதிரான மனநிலையை எதிர்க்கவே போர் தொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உக்ரைனின் மின்கட்டமைப்புகளை ரஷ்யா தொடர்ந்து தாக்கிவருவதால் குளிர்காலத்தில் ஒரு கோடி பேர் மின்சாரமின்றி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹீட்டர்களை பயன்படுத்தமுடியாமல் பலர் குளிரில் உயிரிழக்கக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. Source link

சவுதி அரேபியாவில் கொடூர தண்டனை! கடந்த 10 நாட்களில் 12 பேரின் தலை துண்டிப்பு!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை: நெஞ்சை உலுக்கும் செய்தி ஒன்று சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகியுள்ளது. சவூதி அரேபிய அரசின் உத்தரவின் பேரில் கடந்த 10 நாட்களில் அங்கு 12 பேர் தலை துண்டிக்கப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவில் குற்றங்கள் தொடர்பாக பல கடுமையான சட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக கடந்த 10 நாட்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியாவில் சில காலமாக அரசு தரப்பில் கடுமையான தண்டனைகள் தொடர்பாக தளர்வு செய்யப்பட்டு வந்த … Read more

மீனவர் ஒருவர் வீசிய தூண்டிலில் சிக்கிய 30 கிலோ ராட்சத கோல்டுபிஷ்..!

பிரிட்டன் மீனவர் ஒருவர் வீசிய தூண்டிலில் 30 கிலோ ராட்சத கோல்டுபிஷ் சிக்கியது. கெண்டை மீனுக்கும், அலங்கார கொய் மீனுக்கும் ஏற்பட்ட கலப்பால் உருவான இந்த மீன் கேரட் என அழைக்கப்படுகிறது. பிரான்ஸின் ஷாம்பெய்ன் பிராந்தியத்திலுள்ள மீன்பிடி ஏரியில், ஆண்டி ஹாகெட் என்ற மீனவரின் தூண்டிலில் இந்த ராட்சத மீன் சிக்கியுள்ளது. தூண்டிலை கவ்வியபடியே சுமார் நூறடி தூரம் சென்ற மீனை, 25 நிமிடங்கள் போராடி ஹாகெட் பிடித்துள்ளார். முப்பது கிலோ மீனுடன் போஸ் கொடுத்தபின் அதனை … Read more

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம்: ஆஸி., பார்லி ஒப்புதல்| Dinamalar

மெல்போர்ன்: இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகத்திற்கு ஆஸ்திரேலிய பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கி உள்ளது. கேன்பெர்ரா: இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு ஆஸி., பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆஸி., பிரதமர் அந்தோணி அல்பனீசும், இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதாக கூறியுள்ளார்.அதேபோல், பிரிட்டனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கும் ஆஸி., பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கி உள்ளது. நேற்று ஆஸி., பிரதிநிதிகள் சபையில் எளிதாக நிறைவேறியது. இன்று செனட் சபையில் சட்ட அங்கீகாரம் அளித்துள்ளது. எனினும் இந்த ஒப்பந்தத்திற்கு … Read more

நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள்… கொட்டி கிடக்கும் தங்கம், பிளாட்டினம்; பால்வெளி மண்டலத்தில் ஆச்சரியம்

டோக்கியோ, நமது சூரியன் அமைந்துள்ள பால்வெளி மண்டலத்தில் பல ஆச்சரியங்கள் நிறைந்து உள்ளன. நாம் வாழும் பூமியில், தங்கம், இரும்பு உள்ளிட்ட தனிமங்கள் காண கிடைக்கின்றன. இவற்றை மனிதர்கள் தங்களது தேவைக்கேற்ப, வெவ்வேறு மதிப்புடைய ஒன்றாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பால்வெளி மண்டலத்தில், தங்கம், பிளாட்டினம் போன்றவை நிறைந்த நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களை உலகம் முழுவதும் உள்ள தொலைநோக்கிகளின் உதவியுடன் விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். பொதுவாக, கோடிக்கணக்கான விண்மீன் கூட்டங்கள் சேர்ந்து ஒரு விண்மீன் மண்டலம் உருவாகின்றது. இப்படிப்பட்ட … Read more

உலகக்கோப்பை கால்பந்து : சவுதி அரேபியாவிடம் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி.. மெஸ்சி மட்டும் கோல் அடித்தார்..!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் அர்ஜென்டினா அணி, சவுதி அரேபியா அணியிடம் தோல்வியுற்றது. கத்தாரின் லுசைல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 10ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, அர்ஜென்டினாவின் மெஸ்ஸி முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் அந்த அணி 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், 2ஆவது பாதியில் அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து சவுதி அரேபியா முன்னிலை பெற்றது. அதன் பின்னர் சவுதி அரேபியா வீரர்கள், எதிரணியின் … Read more

நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த ஓரியன் விண்கலம்- பூமியை படம் பிடித்து அனுப்பியது

வாஷிங்டன் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண் வெளி ஆய்வு கழகமான நாசா முடிவு செய்து. ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டது. ஆர்டெமிஸ்-1 என்று அழைக்கப்படும் இத்திட்டத்தில் எஸ்.எல்.எஸ். ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தை கடந்த ஆகஸ்டு மாதம் அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் தொழில் நுட்பகோளாறு மற்றும் … Read more