மூளை அறுவை சிகிச்சையின் போது இசைக்கருவி வாசித்த நோயாளி..!

இத்தாலியில் மூளை அறுவை சிகிச்சையின்போது நோயாளி ஒருவர்  இசைக்கருவி வாசித்தார். 35 வயதான இளைஞர் ஒருவருக்கு மருத்துவமனையில் 9 மணி நேரம் மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஒருபக்கம் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே மறுபுறம் அவர் இசைக்கருவியை வாசித்துக்கொண்டு இருந்தார். Source link

கோவிடிலும் தில்லுமுல்லு செய்த டிரம்ப்! கிடுக்கிப்பிடி விசாரணையில் அமெரிக்க முன்னாள் அதிபர்

American Congress vs Trump: கொரோனா தொற்றுநோயை கையாள்வது தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்த நிலையில், திங்களன்று (அக்டோபர் 17) வெளியிடப்பட்ட அமெரிக்க காங்கிரஸின் அறிக்கை, டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், கோவிட்-19 பற்றிய துல்லியமான தகவல்களை சுகாதார அதிகாரிகளை வழங்குவதைத் தடுத்தது என்று கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் தொடர்பான டிரம்பின் நம்பிக்கையை ஆதரிக்கும் வகையில் அரசு நிர்வாகம் செயல்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. டிரம்ப் உதவியாளர்கள் கோவிட் … Read more

கம்யூனிஸ்ட் மாநாட்டில் கல்வான் மோதல் வீடியோ வெளியீடு – பகையை தூண்டுவதாக சீனா மீது புகார்

பெய்ஜிங்: சீனாவில் ஒரு கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டு, அவரே அதிபராகவும் பதவியேற்பார். தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் தற்போது 2-வது முறையாக அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்த பின்னணியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் அதிபர் ஜி ஜின்பிங் 3-வது … Read more

பாரீசில் பல மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு ஏலம்..!

பல மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு, பாரீசில் வரும் 20ஆம் தேதியன்று ஏலம் விடப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கொலோரேடோவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் தற்போது பிரான்சின் பாரீசில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பாரீசில் நடைபெற உள்ள ஏலத்தில் சுமார் 4 லட்சம் யூரோ வரை டைனோசர் எலும்புகள் ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  Source link

நைஜீரியாவில் வெள்ளம் பலி 600 ஆக உயர்வு| Dinamalar

அபுஜா, நைஜீரியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கன மழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் வசித்தவர்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள 36 மாகாணங்களில், 33 மாகாணங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இரண்டு லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். 82 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 603 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகளும் முடுக்கி … Read more

தலிபான் தண்டனையில் இருந்து தப்பிக்க இளம்பெண் தற்கொலை| Dinamalar

காபூல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பொது இடத்தில் கல்லெறிந்து கொல்ல திட்டமிட்டு இருந்ததை அறிந்த இளம்பெண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர். உயர் கல்வி கற்க, பொது இடங்களில் தனியாக நடமாட, வேலைக்குச் செல்ல, காதல் திருமணம் செய்ய தடை விதித்தனர்.இதனால் லட்சக்கணக்கான பெண்கள் உயர் கல்வியை இழந்தனர். ஏராளமானோர் வேலையை இழந்து தவிக்கின்றனர். வேலை இழந்த 1.8 … Read more

வலியை சமாளித்து வாழ வழி இருக்கு :இன்று (அக்.18) உலக ‛மெனோபாஸ் தினம்| Dinamalar

மதுரை :’மெனோபாஸ்’ என்பது மாதவிடாய் நிற்பது மட்டும் அல்ல. ஹார்மோன் மாற்றங்களும் அதுசார்ந்த உடல்நல வேறுபாடுகளும் ஏற்படுவதால் அதற்கேற்ப பெண்கள் தயாராவதே நல்லது என்கிறார் மதுரை மகப்பேறு நிபுணர் ரேவதி ஜானகிராம்.அவர் கூறியதாவது:‘மெனோபாஸ்’ மனநலம் சம்பந்தப்பட்டது. ஒருபக்கம் வயதாவதால் வரும் மாற்றங்கள், மறுபுறம் ஹார்மோன் குறைவதால் ஏற்படும் மாற்றங்கள். இதை ஒவ்வொரு பெண்ணும் அறிவது அவசியம். பிரெய்ன் பாக்’ எனும் மூளை மூடுபனி, அதாவது சிந்திக்க சிரமப்படுவது, ஞாபகசக்தி குறைதல், மனச்சோர்வு, தேவையற்ற கவலை, படபடப்பு போன்றவை … Read more

பிரிட்டன் பிரதமரின் வரி சலுகைகளை ரத்து செய்தார் புதிய நிதி அமைச்சர்| Dinamalar

லண்டன், கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் சமீபத்தில் அறிவித்திருந்த அனைத்து வரிச் சலுகைகள் உள்ளிட்டவற்றை, பிரிட்டனின் புதிய நிதி அமைச்சர் ஜெர்மி ஹன்ட் ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக முடியும். இதன்படி கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியான முன்னாள் … Read more

பாக்., இடைத்தேர்தலில் இம்ரான் கட்சி அமோகம்| Dinamalar

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடந்த இடைதேர்தலில், முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் ‘தெஹ்ரிக் – இ – இன்சாப்’ கட்சி, போட்டியிட்ட எட்டு இடங்களில் ஆறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். மேலும், மாகாணங்களில் இம்ரான் கானின் தெஹ்ரிக் – … Read more

ரஷ்ய அடுக்குமாடி கட்டடத்தில் போர் விமானம் மோதி விபத்து!

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஐஸ்க் (Yesyk) நகரில், ரஷ்ய போர் விமானம் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. விமானம் மோதிய அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து பெரும் புகை எழுந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை ஐஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் உறுதிப்படுத்தியுள்ளார். ஐஸ்க், உக்ரைன் நாட்டிற்கு அருகில் உள்ள ரஷ்ய நகரம் என கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய போர் விமானத்தின், விமானிகள் விபத்திற்கு முன்னரே வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து கவர்னர் வெனியமின் கோண்ட்ராடியேவ் கூறுகையில், விபத்துக்குள்ளானது சுகோய் … Read more