ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த ஐ.நா.,சபை: எதிராக வாக்களித்த இந்தியா!

உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதில் இருந்தே, இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து நேட்டோ படையில் இணையவும் உக்ரைன் விருப்பம் காட்டி வருகிறது. ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை உக்ரைன் மீற முயற்சிப்பதால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வந்த நிலையில், அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. உக்ரைந் ரஷ்யா இடையேயான போர் … Read more

அயோடின் மாத்திரைகள் அணுகுண்டு தாக்குதலை தடுக்குமா? விற்பனை மும்முரம்

Potassium Iodide Atomic Attack: அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தற்போது பொட்டாசியம் அயோடைடை வாங்குவதில் மும்முரமாக உள்ளன, இதனால் அணுசக்தி தாக்குதல்களைத் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. இது உண்மையா, ஏன் இந்த பரபரப்பு என்பதை தெரிந்துக்கொள்வோம்.  உக்ரைன்-ரஷ்யா போர், கொரியா தகராறு மற்றும் உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக பல நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. ரஷ்யாவும் அணுகுண்டு தாக்குதல் நடத்தலாம் என பலமுறை எச்சரித்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. … Read more

இந்து முறைப்படி இஸ்லாமியருக்கு இறுதிச்சடங்குகள்! சவுதி அரேபிய NRI குடும்பம் வருத்தம்

ஜெட்டா: NRI Last Ritual Confusion: இந்து முறைப்படி இஸ்லாமியர் ஒருவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்ற நிகழ்வு ஆச்சரியத்தையும், அதன் பின்னால் உள்ள காரணங்கள் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளன. சவுதி அரேபியாவில் பணியாற்றிய வெளிநாடு வாழ் இந்தியர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டதால் நிகழ்ந்த குழப்பம் இது. இறந்த இரண்டு என்.ஆர்.ஐ-களின் உடல்கள், இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன. அதில், கேரளாவுக்கு செல்ல வேண்டிய சடலம் உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுவிட்டது. ஆனால், கேரளாவை சென்றடைந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியருக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, சடலம் … Read more

உக்ரைனில் ரஷ்யா சரமாரி ஏவுகணைவீச்சு.. உலக நாடுகள் கண்டனம்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது, ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் ஐராப்பாவின் மிக நீளமான பாலம் இரு தினங்களுக்கு முன்பு வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டது. இதில் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டிய நிலையில், அதனை உக்ரைன் மறுத்தது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா … Read more

இறந்து கரை ஒதுங்கிய 500-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்

நியூசிலாந்தின் சாத்தம் தீவு 800-க்கும் குறைவான மக்கள் வசிக்கும் தீவு ஆகும். இத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் ஏராளமான சுறாக்கள் இருப்பதால், இத்தீவு மிகவும் சவாலான பகுதியாகும். சாத்தம் தீவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சுமார் 250 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. இதனைத் தொடர்ந்து, இன்று அருகிலுள்ள பிட் தீவில் 240 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. சுறாக்களின் தாக்குதலினால் இந்தத் திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளன. இந்தத் தீவு நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால், உயிரிழந்த திமிங்கலங்களின் உடல்கள் … Read more

உக்ரைன் விவகாரம்: ஐ.நா.,வில் ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிப்பு

நியூயார்க்: உக்ரைனின் 4 பிராந்தியங்களை இணைந்ததைக் கண்டிக்கும் தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யாவின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்து வருகின்றன. 6 மாதங்களைத் தாண்டி போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே, போர் மூலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள … Read more

பெரு நாட்டில் 16 டன் போதைப் பொருட்கள் அமைச்சர் முன் தீ வைத்து எரிப்பு…

பெரு நாட்டில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட 16 டன் போதைப்பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. இவை கடந்த ,இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டு இருந்தன. போதைக் பொருட்களை மூட்டை மூட்டையாக கொண்டு சென்ற  பெரு நாட்டின் அதிகாரிகள் அதனை அமைச்சர் ஒருவர் முன்னிலையில் தீயில் போட்டு அழித்தனர். Source link

ரஷிய முன்னாள் அதிபரை தேடப்படும் பட்டியலில் வைத்த உக்ரைன்

கீவ், ரஷியாவின் முன்னாள் அதிபராக 2008 முதல் 2012-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் டிமிட்ரி மெத்வதேவ். தற்போது ரஷிய பாதுகாப்பு துறையின் துணை தலைவராக அவர் இருந்து வருகிறார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில், உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தொகுத்து அளித்துள்ள தேடப்படும் நபர்களின் பட்டியல் ஒன்று வெளிவந்து உள்ளது. இதில் ஒருவராக, மெத்வதேவ் இருக்கிறார். உக்ரைன் நிலப்பரப்பின் ஒற்றுமையை வலுவிலுக்கவும் மற்றும் உக்ரைன் எல்லைகளில் அத்துமீறி நடந்து கொள்ளவும் … Read more

கதவு மூடப்படாமல் அடுத்த தளத்திற்கு சென்ற லிஃப்ட்.. நூலிழையில் உயிர் தப்பிய நபர்..!

ரஷ்யாவில் லிஃப்ட் ஒன்று பழுதாகி கதவை மூடாமலே அடுத்த தளத்திற்கு சென்ற நிலையில், நூலிழையில் ஒருவர் உயிர் தப்பிய சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. தொழில்நுட்ப கோளாறால் லிஃப்டின் கதவு மூடாமலேயே திடீரென அடுத்த தளத்திற்கு சென்றுள்ளது. லிஃப்ட் தளத்தில் நின்ற போது, ஒருவர் அதில் இருந்து வெளியேறுகிறார், உடனே மற்றொருவர் லிஃப்டில் ஒரு காலை வைத்தபோது, திடீரென அந்த லிஃப்ட் மேல ஏறத் தொடங்கியது. மொபைல் பார்த்துக்கொண்டே லிஃப்ட்டில் ஏற முயன்ற அவரை லிஃப்ட் தீடீரென்று … Read more

இஸ்லாமாபாத்தை 2வது தலைநகர் ஆக்குவோம்: பாகிஸ்தானுக்கு தலிபான்கள் எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல்: ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியரும் பாகிஸ்தானை வெறுக்கிறோம், ஆயிரக்கணக்கான தற்கொலைப்படை மூலமாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி, இஸ்லாமாபாத்தை எங்களது இரண்டாவது தலைவராக மாற்றுவோம் என பாகிஸ்தானுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்க படைகள் வெளியேறின. அதன் பின் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைந்தபிறகு கடந்த ஓராண்டாக பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே … Read more