ஐநாவில் ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை இந்தியா நிராகரித்தது ஏன்?

India vs Russia at UN: ஐநாவில் உக்ரைன் விவகாரத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துக் கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியிட அவர் மறுத்துவிட்டார். எனினும், ‘போர்’ என்ற கருத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறினார். உக்ரைனில் நான்கு பிராந்தியங்களை மாஸ்கோ இணைத்ததைக் … Read more

சீனாவில் கொரோனா அதிகரிப்பு : ஊரடங்கால் மக்கள் அவதி| Dinamalar

பீஜிங் : சீனாவின் ஷான்சி மாகாணத்தில் பென்யாங்க் நகரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், நேற்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஹோஹாட் நகரில் கடந்த 12 நாட்களில் 2,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பகுதிக்கு வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜின்ஜியாங் மாகாணம், ஷாங்காய் மற்றும் நாட்டின் தலைநகரான பீஜிங்கில் சில பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பீஜிங்கில் அடுத்த வாரம் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மிகப்பெரிய கூட்டம் நடக்க உள்ளது, கூட்டத்துக்குப் … Read more

பாகிஸ்தானில் அவலம்: கூலி கேட்ட இந்து பெண்; குண்டர்களுடன் வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை

லாகூர், பாகிஸ்தான் நாட்டில் லாஹிண்டே பஞ்சாப் பகுதியில் பகவல்பூர் நகரில் சக் என்ற இடத்தில் வசித்து வருபவர் கங்காராம். இவரது மனைவி குசும் பாய். பண்ணை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் குசும் பாய், பண்ணை உரிமையாளரான முகமது அக்ரமிடம் சென்று வேலைக்கான கூலியை வாங்கி வருவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். ஆனால், அக்ரம் அவரை கடுமையாக அடித்து விரட்டி விட்டுள்ளார். இதன்பின்னர், அடுத்த நாள் காலையில் அக்ரம் மற்றும் … Read more

'ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு' – ஐ.நா.அவசரக் கூட்டத்தில் உக்ரைன் கடும் கண்டனம்

ஜெனீவா: ஐ.நா. பொதுச் சபை அவசரக் கூட்டத்தில் ரஷ்யாவை பயங்கரவாத நாடு என்று விமர்சித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது உக்ரைன். ஐரோப்பிய யூனியன், நேட்டோ படையில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதனால் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. எனினும், ராணுவ நிலைகளை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், கிரீமியா தீபகற்ப பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கும் … Read more

ஏவுகணை மழை பொழிந்த ரஷ்யா… உக்ரைனுக்கு வந்ததே கோபம்- இப்படி பண்ணிட்டாங்களே!

சர்வதேச அரசியல் களத்தில் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ரஷ்யா படைக்கு புதிய தளபதி, கிரீமியா பாலம் மீது தாக்குதல், உக்ரைன் மீது 75 ஏவுகணைகளை விட்டு ரஷ்யா நடத்திய தாக்குதல் என நிலவரம் கலவரமான சூழலில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் உக்ரைனுக்கு சொந்தமான 4 மாகாணங்களை தங்களுடன் இணைத்துக் கொண்டதாக ரஷ்யா அறிவித்ததற்கு சர்வதேச அளவில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதுபற்றி விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் … Read more

உக்ரைன் மீதான ரஷிய ஏவுகணைத் தாக்குதல் மிருகத்தனமானது- ஜோ பைடன் கண்டனம்

வாஷிங்டன், கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷியா, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குறைந்தபட்சம் 5 இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக கூறுப்படுகிறது. இது குறித்த வீடியே சமூக வளைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். … Read more

‘காலிஸ்தான்’ பிரச்சினை கனடா அரசுடன் பேச்சு – அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

கான்பெரா: ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவுக்கு சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்கை சந்தித்து பேசினார். இதன் பிறகு இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக நீண்ட காலமாக மேற்கத்திய நாடுகள் (அமெரிக்கா, ஐரோப்பா), இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை. அதற்குப் பதில் ராணுவ சர்வாதிகார பின்னணி கொண்ட எங்கள் அண்டை நாட்டுக்கு … Read more

உக்ரைன் தலைநகரில் ரஷியா சரமாரி ஏவுகணை வீச்சு: 10 பேர் பலி

கீவ், உக்ரைன் நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைப்பதாக கூறி போரை தொடங்கிய ரஷியா பின்னர் மின்உற்பத்தி நிலையங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் என தாக்குதல்களை விரிவுப்படுத்தியது. போர் தொடங்கிய சமயத்தில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷிய படைகள் முயற்சித்த நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்களின் கடுமையான எதிர்ப்பால் ரஷிய படைகள் அங்கிருந்து … Read more

கிரீமியா பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் எதிரொலி – உக்ரைன் மீது 75 ஏவுகணை தாக்குதல்

கீவ்: கிரீமியா பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா நேற்று 75 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பிய யூனியன், நேட்டோ படையில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதனால் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. எனினும், ராணுவ நிலைகளை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், … Read more

வடகிழக்கு சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்.. ஐ.எஸ். தீவிரவாதி சுட்டுக்கொலை..!

வடகிழக்கு சிரியாவில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஐ.எஸ்.பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். ஹமாம் அல்-துர்க்மேன் கிராமத்தில் மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பயங்கரவாதியை குறிவைத்து அமெரிக்க பாதுகாப்புப் படையினர் அதிரடி ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இதில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டதாக குர்திஷ்-சிரிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link