ஸ்பெயினில் கொட்டித் தீர்த்த கனமழை – வீடுகள், வாகனங்கள் சேதம்

மேட்ரிட், ஸ்பெயின் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு காரணமாக வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. ஸ்பெயினில் உள்ள டோரெவிஜா நகரில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாகன ஓட்டிகள் பலர் சிக்கிக் கொண்டனர். அடுத்த சில தினங்களுக்கு ஸ்பெயினில் மழை தொடர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் … Read more

அமெரிக்காவில் இந்திய மாணவரை குத்தி கொன்றது ஏன்? – கொரிய மாணவர் வாக்குமூலம்

வாஷிங்டன், அமெரிக்காவின் இன்டியானா பர்டூ பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இந்தியாவை சேர்ந்த வருண் மணீஷ் சேடா (வயது 20) என்ற மாணவர் டேட்டா சயின்ஸ் பிரிவில் பயின்று வந்தார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இவருடன் கொரியாவை சேர்ந்த மின் ஜிம்மி ஷா என்ற மாணவரும் தங்கியிருந்தார். இந்தநிலையில் கடந்த வாரம் இவர்கள் இருவரும் அறையில் இருந்தபோது மின் ஜிம்மி ஷா திடீரென வருண் மணீஷ் சேடாவை கத்தியால் குத்தி கொலை … Read more

தொழில்நுட்ப கோளாறு..? – ஃபேஸ்புக்கில் ஒரே நாளில் 118 மில்லியன் ஃபாலோயர்களை இழந்த மார்க் ஸக்கர்பெர்க்..!

ஃபேஸ்புக் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயனர்கள் பலர், தங்களைப் பின்தொடர்வோரை அதிக அளவில் இழந்துள்ள நிலையில், மெட்டா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஸக்கர்பெர்க்-கும் 118 மில்லியன் ஃபாலோயர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அதன் செய்தித் தொடர்பாளர், ஃபேஸ்புக்-கில் பயனர்கள் பலர் தங்களை பின்தொடர்ந்து வந்த ஃபாலோயர்களின் எண்ணிக்கை திடீரென மிகப்பெரிய சரிவை சந்தித்ததாக புகார் அளித்துள்ளதாகவும், மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் பணியை … Read more

சாண்டி ஹூக் துப்பாக்கிச் சூடு போலி செய்தி வெளியிட்டவருக்கு $965 மில்லியன் அபராதம்

வாட்டர்பரி: போலிச் செய்திகள் தொடர்பாக அமெரிக்காவில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவருக்கு, $965 மில்லியன் அதாவது, இந்திய மதிப்பில் 79,39,49,40,750 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு அமெரிக்காவில் உள்ள நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 2012ம் ஆண்டில் நடைபெற்ற சாண்டி ஹூக் துப்பாக்கிச் சூடு, துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை அமல்படுத்துவதற்காக மட்டுமே நடத்தப்பட்ட அரசாங்கத்தின் சதி என்று அலெக்ஸ் ஜோன்ஸ் தனது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தெரிவித்து வந்தார். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, அந்தத் தாக்குதல் 100 … Read more

கராச்சி அருகே ஓடும் பேருந்தில் தீப்பிடித்து குழந்தைகள் உள்பட 21 பயணிகள் உடல்கருகி உயிரிழப்பு – பலர் தீக்காயம்..!

பாகிஸ்தானின் கராச்சி அருகே ஓடும் பேருந்தில் தீப்பிடித்த விபத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 21 பயணிகள் உடல்கருகி உயிரிழந்தனர். கராச்சியில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் நூரியாபாத் அருகே ஏர் கண்டிஷன் யூனிட்டில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து பேருந்து சாலையில் நிறுத்தப்பட்டது. பயணிகள் சிலர் பேருந்திலிருந்து கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு கீழே குதித்துத் தப்பினர். எனினும், பேருந்துக்குள் தீ விரைந்து பரவியதால், பேருந்திலிருந்த கீழே இறங்க முடியாமல் சிக்கிக் கொண்ட 21 பேர் … Read more

கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்க இந்தியாவின் உதவியை நாடும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: கடும் வெள்ள பாதிப்புக்கு பிறகு கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்க இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்துக்கு பிறகு அந்நாட்டின் 32 மாவட்டங்களில் மலேரியா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு கொசுக்களால் பரவும் நோய்களால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவிடமிருந்து 62 லட்சம் கொசு வலைகளை கொள்முதல் செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது. இதற்கான முடிவுக்கு பாகிஸ்தான் அரசு கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் … Read more

இரண்டரை ஆண்டாக உறவு சரியில்லை; சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லோவி இன்ஸ்டிடியூட்டில் (சிந்தனை அமைப்பு) வளர்ந்து வரும் ஆஸ்திரேலியாவுடனான இந்திய உறவின் முக்கியத்துவம் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசியதாவது: லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு சீன ராணுவம் அத்து மீறி நுழைய முயன்றது. இதை தடுத்த இந்திய வீரர்களுக்கும் சீன வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் சிலர் உயிரிழந்தனர். அதன் பிறகு கடந்த இரண்டரை … Read more

டிபார்ட்மெண்ட் ஸ்டோர்க்கு அடியில் குழந்தைகள் உட்பட 240 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு.!

இங்கிலாந்தில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் அஸ்திவாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 240 பேரின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. ஹாவர்ஃபோர்ட்வெஸ்ட்-ல் ஓக்கி ஒயிட் கட்டிடத்தின் மேம்பாட்டு பணியின் போது, தோண்டிய இடமெல்லாம் மனித எலும்புக்கூடுகள் கிடந்தன. 2013-ஆம் முதல் செயல்பாட்டில் இல்லாத அந்த கட்டிடத்தின் அடியில் கைப்பற்றப்பட்ட எலும்புக் கூடுகளில் தலை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள், போர்க் காயங்களுடன் ஒத்துப்போனதால், 1405-ஆம் ஆண்டில் மன்னர் ஓவைன் க்ளின்டர் தலைமையிலான பிரெஞ்சு மற்றும் வெல்ஷ் … Read more

உக்ரைன் விவகாரத்தில் ரகசிய வாக்கெடுப்பு – ரஷ்யாவின் கோரிக்கையை இந்தியா உட்பட 107 நாடுகள் நிராகரிப்பு

நியூயார்க்: உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா. சபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை, இந்தியா உள்ளிட்ட 107 நாடுகள் நிராகரித்தன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முடிவு செய்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய இடங்களில் டன்ஸ்க், கெர்சன், லுகாஷ்க், ஜபோரிஷ்ஜியா ஆகிய 4 பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அவற்றை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது. இது சட்ட விரோதம் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், அல்பேனியா கண்டனத் … Read more

பூமியை காப்பாற்றிய அமெரிக்கா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : பூமியை நோக்கி வந்த விண்கல்லை திசைதிருப்பி நாசா விஞ்ஞானிகள் உலகை காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர். பூமியை நெருங்கும் விண்கல்கள், குறுங்கோள்களை கண்காணித்து எச்சரிக்கை விடுக்க தனி அமைப்பை நாசா உருவாக்கியுள்ளது. அந்த அமைப்பு நெருங்கும் விண்கல்கள் மீது மோதி அவற்றை திசை திருப்பவும், அழிக்கவும் தனி விண்கலங்களையும் அனுப்பி வருகிறது. பூமியிலிருந்து 68 லட்சம் மைல்கள் துாரத்தில் டிமார்பாஸ் என்ற விண்கல் சுற்றி வந்தது. 525 அடி … Read more