அணு ஆயுத போரை தூண்டுகிறார் ஜோ பைடன்… கட்சியிலிருந்து விலகிய துளசி கப்பார்ட்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கபார்ட் அமெரிக்காவின் முதல் பெண் இந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.  இந்நிலையில், தற்போது துளசி கபார்ட் ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள் ‘போர் தூண்டி விடும் உயர மட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்’ என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் இனத்துடன் இணைத்து, தங்களுக்குள் சண்டையிட்டு, மக்களிடையே பாகுபாட்டை உருவாக்குகிறார்கள் என்றும் துளசி கூறியுள்ளார். மற்ற … Read more

ஜி 20 நாடுகளின் கூட்டத்தில் புடினை சந்திக்கும் எண்ணம் இல்லை – பைடன் சூசக பதில்

ஜி 20 நாடுகளின் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் எண்ணம் தமக்கு இல்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். பாலியில் ஜி 20 நாடுகளின் கூட்டம் நவம்பரில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் எண்ணமில்லை என்றும், ஆனால் அது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது என ஜோ பைடன் சூசகமாக பதிலளித்தார். Source link

ஈரான் போராட்டத்தில் 28 குழந்தைகள் உயிரிழப்பு: விமர்சிக்கும் சமூக அமைப்புகள்

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் இதுவரை 28 சிறுவர், சிறுமியர் பலியாகி உள்ளதாக அந்நாட்டின் குழந்தைகள் நல அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மாஷா அமினியின் மரணத்துக்குப் பிறகு ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தில் இதுவரை 70க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். போராட்டத்தில் 28 சிறுவர் சிறுமியரும் இறந்துள்ளதாக அந்நாட்டின் குழந்தைகள் நல அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ஈரான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக தலைநகர் தெஹ்ரானில் … Read more

ஆங் சான் சூகிக்கு தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கும் ராணுவ நீதிமன்றம்| Dinamalar

நைபைடவ்: மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூகிக்கு, மோசடி வழக்கு ஒன்றில் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம், அவருக்கு 26 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடியவர் ஆங் சான் சூகி. கடந்த 2020ல் நடந்த பொது தேர்தலில் இவர் தலைமையிலான கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. … Read more

நீ இந்த பக்கம் தள்ளு.. நான் அந்த பக்கம் தள்ளுறேன்.. சிறுவனுடன் கால் பந்து விளையாடும் சுட்டி நாய் – இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

சிறுவன் தனது நாயுடன் கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவன் எட்டி உதைக்கும் பந்தை தானும் உதைத்தும், தலையால் தள்ளியும் சிறுவன் பக்கம் தள்ளி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

Hajj Pilgrimage: மெக்காவின் மசூதியை விரிவுபடுத்த 53 பில்லியன் டாலர்கள் செலவு!

Women Hajj pilgrims: பெண் ஹஜ் யாத்ரீகர்கள் இனி ஹஜ்ஜில் ஆண் பாதுகாவலருடன் செல்ல வேண்டியதில்லை என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. அனைவருக்கும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான செலவைக் குறைக்கும் நோக்கில் அரசு செயற்பட்டு வருவதாக  சவுதி அரேபியா தற்போது தெரிவித்துள்ளது. ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்பும் ஒரு பெண் யாத்ரீகர், இனி ஆண் பாதுகாவலர் அல்லது ‘மஹ்ரம்’ எனப்படும் ஒரு குழுவுடன் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் … Read more

பூமியை நோக்கி வந்த விண்கல்லை திசை மாற்றிவிட்டோம்: நாசா பெருமித தகவல்

நியூயார்க்: பூமியை தாக்க வந்த விண்கல் ஒன்றை நாசா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக திசைத் திருப்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதை நாசேவே தெரிவித்துள்ளது. குளிர்சாதன பெட்டியைவிட இரு மடங்கு அளவிலான டிமார்போஸ் (Dimorphos) என்ற விண்கல் ஒன்று பூமியின் மீது மோத இருந்ததாக நாசா தெரிவித்து வந்தது. இந்த நிலையில், அந்த விண்கல்லை திசைத் திருப்ப டார்ட் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. கடந்த மாதம் 27-ம் தேதி டார்ட் விண்கலம், அந்த விண்கல்லின் மீது … Read more

போக்குவரத்து நெரிசல் குறித்தக் கவலை இனி இல்லை : பறக்கும் டாக்சி அறிமுகம்

காலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உரிய நேரத்தில் அலுவலகம் செல்ல முடியாமல் தவிக்கும் போது, அப்படியே காரோடு வானத்தில் பறந்து செல்லும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என கண்டிப்பாக யோசித்திருப்போம். இந்தக் கனவு தற்போது நனவாகி உள்ளது. சீனாவைச் சேர்ந்த எக்ஸ்பெங் என்ற நிறுவனம் துபாயில் பறக்கும் டாக்சியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பறக்கும் டாக்சி செயல்படும் விதம் குறித்து விளக்கமாகப் பார்க்கலாம். பறக்கும் டாக்ஸி பறக்கும் டாக்சி அல்லது ஏர் டாக்சி குறித்து … Read more

26 ஆண்டுகள் சிறைத் தண்டனை: மியான்மர் ராணுவத்தால் ‘பழிவாங்கப்படும்’ ஆங் சான் சூச்சி

நய்பிடா: மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு ஊழல் வழக்குகளில் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவரை மியான்மர் ராணுவத்தால் ஆங் சாங் சூச்சிக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. எனினும், … Read more

500 திமிங்கலங்கள் கருணை கொலை: காரணம் என்ன?

நியூசிலாந்து நாட்டில் இருந்து வெகுதொலைவில் சாத்தம் மற்றும் பிட் தீவுகள் உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமையன்று சாத்தம் தீவில் 250 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அடுத்த மூன்று நாட்கள் கழித்து பிட் தீவில் 240க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இந்த தீவுகள் பசுபிக் பெருங்கடலில் இருப்பதாகவும், அந்த பகுதிகளில் சுறா மீன்கள் அதிகம் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இந்த சுறா மீன்களுக்கு பயந்து சுமார் 500க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் … Read more