மோடிக்கு எதிரா கேஸ் போட்ட அமெரிக்க டாக்டர்… கடைசியில இப்படி ஆகிடுச்சே!

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் நகரைச் சேர்ந்த லோகேஷ் வய்யுரு, இந்திய வம்சாவளி டாக்டர். குறிப்பாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இரைப்பை குடல் சிகிச்சை பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்ன வழக்கு, அதிரவைக்கும் அளவிற்கு என்னென்ன குற்றச்சாட்டுகள் போன்ற விஷயங்கள் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதாவது, பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தொழிலதிபர் அதானி, … Read more

Gotabaya Rajapaksa: நாளை இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே?

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, நாளை, அந்நாட்டிற்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு உள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் எனக் கூறி போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் கடந்த மாதம் தொடக்கத்தில் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து ஜூலை 13 ஆம் தேதி கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் மாலத்தீவுக்கு … Read more

இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் – சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு அடுத்த 4 ஆண்டுகளில் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் அளிக்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறையால் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, வெளிநாடுகளிடமிருந்து இதுவரை 51 பில்லியன் டாலர் வரை கடன் பெற்றுள்ளது. இதில், 28 பில்லியன் டாலரை வருகிற 2027-க்குள் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. Source link

முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே நாளை இலங்கைக்கு திரும்புகிறார்..!

முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே நாளை சனிக்கிழமை இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக உள்நாட்டில் கடுமையான போராட்டங்களையடுத்து கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற கோத்தபயா, தமது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். மாலத்தீவு வழியாக தாய்லாந்து சென்ற அவர் தற்காலிக விசாவில் தற்போது பாங்காக் நகரில் நட்சத்திர ஓட்டலில் பலத்த பாதுகாப்புடன் தங்கி இருக்கிறார். அவர் மீண்டும் நாடு திரும்ப விரும்புவதாக தெரிவித்ததையடுத்து அதிபர் … Read more

8K அல்ட்ரா ஹெச்டியில் காட்சியளிக்கும் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள்

110 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் 8 கே அல்ட்ரா ஹெச் டி தரத்தில் அதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 1912-ஆம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15ந் தேதிக்கு இடைப்பட்ட இரவில் டைட்டானிக் கப்பல் புறப்பட்ட மூன்றே மணிநேரத்தில் பனிப்பாறை மீது மோதி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். 110 ஆண்டுகள் கடந்த பின்னரும் இது மிகப்பெரிய கடல் விபத்தாக கருதப்படுகிறது. … Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்னை கழுத்தை நெரித்து கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்து சென்ற இளைஞர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கோனாப்பட்டு கிராமம்  புதுமனை ஆரோக்கியபுரத்தை சேர்ந்த வசந்தா என்ற பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த 17ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு சிவக்குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 6 மாதத்திற்கு முன்பு … Read more

தேனீக்களால் 20,000 முறை கொட்டப்பட்ட அமெரிக்க இளைஞர் கோமாவில் இருந்து மீண்டார்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேனீக்களால் 20,000 முறை கொட்டப்பட்ட இளைஞர் கோமா நிலைக்கு சென்றார். ஒரு வாரத்துக்குப் பிறகு கோமாவில் இருந்து அவர் மீண்டுள்ளார். அமெரிக்காவின் ஒகையோ மாகாணம், ரிப்ளி பகுதியை சேர்ந்தவர் ஆஸ்டின் (20). கடந்த வாரம் இவர் தனது வீட்டு தோட்டத்தில் எலுமிச்சை மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மரத்தில் இருந்த மிகப்பெரிய தேனீ கூடு கலைந்தது. ஆயிரக்கணக்கான தேனீக்கள் ஆஸ்டினை சூழ்ந்து கொட்டின. சுமார் 20,000 முறை தேனீக்களால் கொட்டப்பட்டதால் மயங்கி … Read more

இந்திய கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் எதிரொலி – போர்ச்சுகல் அமைச்சர் ராஜினாமா

லிஸ்பன்: போர்சுக்கல் நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணிப் பெண் மருத்துவ வசதி குறைபாடுகளால் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மார்த்தா டெமிடோ செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து ஊடகங்கள் தெரிவிப்பதாவது: போர்ச்சுகலுக்கு சுற்றுலா வந்த இந்திய கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தலைநகர் லிஸ்பனில் உள்ள சாண்டா மரியா மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அந்த மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கான போதிய … Read more

மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தின் உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு..!

ரஷ்ய எண்ணெய் நிறுவன உரிமையாளர் ரவில் மகனோவ் மருத்துவமனையின் ஆறாவது மாடி ஜன்னலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை அவருடைய நிறுவனம் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 67 வயதான இவர் மாஸ்கோவின் மத்திய மருத்துவ மருத்துவமனையில் ஆறாவது மாடியின் ஜன்னலில் இருந்து திடீரென கீழே விழுந்து இறந்து கிடந்தார். கிரெம்ளின் கிளினிக்’ என்று அழைக்கப்படும் மருத்துவமனையில், இதய நோய்க்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மன உளைச்சலில் இருந்ததாகவும் … Read more

ஐ.நா. தீர்மானத்தை புறக்கணிக்கும் துருக்கிக்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி: லிபியா தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்து வரும் துருக்கிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ருஷிரா காம்போஜ் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதைத் தொடர்ந்து அந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகிறது. இது, இருநாட்டு உறவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. லிபியா தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வரும் தீர்மானங்களில் துருக்கி காட்டி வரும் அப்பட்டமான அலட்சியம் மிகவும் கண்டிக்கத்தக்கது. … Read more