கனடாவில் தீவிரமாக பரவும் குரங்கம்மை..! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, உலக நாடுகளை, மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கம்மை தொற்று நோய் பரவி அச்சுறுத்தி வருகிறது. குரங்கம்மை குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாக ஆய்வுகள் எச்சரித்து வருகின்றன. உடலில் கொப்பளங்கள் போல் பரவும் இந்த நோய், தற்போது உலகை பயமுறுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் குரங்கம்மை தொற்றால் உயிர் பலியும் ஏற்ப்பட்டுள்ளது. இந்தியாவில் கூட குரங்கம்மை தொற்றால் சிலர் உயிர் இழந்துள்ளனர். இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் குரங்கு அம்மை மிக வேகமாக … Read more

இங்கிலாந்தில் கடும் குடிநீர் பஞ்சம்; பரிதவிக்கும் மக்கள்

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் தண்ணீர் பஞ்சம்: பிரிட்டனில் வரலாறு காணாத வகையில் கோடை காலம் மிகவும் உக்கிரமாக இருந்து வரும் நிலையில்,  பல நகரங்கள் தற்போது வறட்சியை எதிர்கொள்கின்றன. மேலும் பல நகரங்களை வறட்சி பாதித்த நகரங்களாக அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பற்றாகுறை அதிகரித்து வருகிறது. இத்தனைக்கும் மக்கள் தங்கள் தேவைக்காக பாட்டில் தண்ணீரையே நாடுகிறார்கள் திடீரென்று கடைகளில் அவற்றின் தேவை அதிகரித்ததால், சில கடைகள் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் பாட்டில் தண்ணீர் … Read more

பாலைவனத்தில் வெள்ளம் வந்த அதிசயம் ..! – நெகிழ்ச்சியில் ஆழ்ந்த அரபு மக்கள்..!!

பாலைவனம் என்றாலே நம் மனதுக்கு தோன்றுவது மணல் குவியலும் வீசும் அனல் காற்றும் தான். மழையை எப்போதாவது அரிதாக காணும் பாலைவன மக்கள் தங்கள் பிரதேசத்தில் வெள்ளத்தை பார்க்கும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே வியப்பாக இருக்கிறது . வளைகுடா நாடுகளில் மழை பெய்வது என்பதே அரிதான ஒன்று. பெரும்பாலும் பாலைவன பிரதேசமான அரபு அமீரகம் உள்ளிட்ட பாலைவன நாடுகளில் அபூர்வமாக எப்போதாவது சிறிய அளவில் மழை பொழிவது வழக்கம். ஆனால் இந்த … Read more

பயங்கரவாதிக்கு ஆதரவு: சீனாவுக்கு கண்டனம்| Dinamalar

புதுடில்லி: பாகிஸ்தானை சேர்ந்த ‘ஜெய்ஷ் – இ – முகமது’ பயங்கரவாத இயக்கத்தின் துணைத் தலைவர் அப்துல் ரப் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீனா தடை விதித்ததை இந்தியா கண்டித்துள்ளது. இதுகுறித்து, நம் நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத இயக்கத்தின் துணைத் தலைவரான அப்துல் ரப் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, ஐக்கிய நாடுகள் … Read more

விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; மனிதர்களுக்கு எமனாகும் என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

விண்வெளி குப்பை: : நீங்கள் உங்கள் மாலை வீட்டில் பால்கனியில் அல்லது பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, வானில் இருந்து பழைய ராக்கெட்டின் குப்பைகள் உங்கள் கூரையில் வந்து விழுந்தால் எப்படி இருக்கும். உங்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படலாம். அல்லது வீட்டிற்கு பலத்த சேதம் ஏற்படலாம். ஆனால் அத்தகைய நிகழ்வு சாத்தியமா? விண்வெளி கழிவுகள் எதிர்காலத்தில் மக்களுக்கு எமனாக மாறுமா? விண்வெளியில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் குப்பை பூமியில் விழுந்து கொண்டே இருக்கிறது ஆனால் நம் … Read more

இந்திய எதிர்ப்பையும் மீறி குசும்பு!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5’ இலங்கைக்கு வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அக்கப்பல் வரும் 16 ம் தேதி அம்பன்தோட்டா துறைமுகம் வருகிறது. சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல், ஆக., 12 – 17 வரை இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இது, நம் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை அடுத்து, … Read more

இனி பேபி பவுடர் இல்லை… இதுதான் எங்களின் புதிய தயாரிப்பு – ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அதிரடி

பிரபல பன்னாட்டு மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பெரும்பாலும் குழந்தைகளுக்கான பொருட்களை தயாரித்து வருகிறது. பிறந்த குழந்தைகள் என்றாலே ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்கள் தான் என்ற பேச்சு விளம்பரங்களில் மட்டுமில்லாமல் உலக மக்களில் மனதிலும் பதிந்து இருந்தது. சுமார் 136 ஆண்டுகளாக போட்டி இல்லாத சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீது  கடந்த சில … Read more

நியூயார்க்கில் தாக்கப்பட்ட சல்மான் ருஷ்டியின் எழுத்தும் பின்புலமும்

எழுத்தாளர், நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது நியூயார்க்கில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலின் விளைவாக அவர் ஒரு கண்ணில் பார்வையை இழக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் தற்போது வெண்டிலேட்டர் எனப்படும் உயிர் காக்கும் கருவி பொருத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். சல்மான் ருஷ்டியின் புத்தக முகவரான ஆண்ட்ரூ வில்லி இது தொடர்பாக ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “இது நல்ல செய்தி அல்ல. சல்மான் ஒரு கண் பார்வையை இழக்கும் சூழலில் … Read more

டொனால்டு டிரம்ப் சொகுசு பங்களாவில் ரகசிய ஆவணங்கள் – எஃப்.பி.ஐ தகவல்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் சொகுசு பங்களாவில் ரகசிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக எஃப்.பி.ஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 8 ஆம் தேதி எஃப்.பி.ஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அவருக்கு புளோரிடா மாகாணத்தில் மார்-ஏ-லகோ என்ற எஸ்டேட் உள்ளது. கடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்ததை அடுத்து, வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய போது ரகசிய ஆவணங்களை பெட்டியில் … Read more

கத்திக்குத்தில் படுகாயம்..! உயிருக்குப் போராடும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி

இந்திய வம்சாவளி நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கத்தியால் குத்தப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. 1980களில் Satanic Verses என்ற நாவலை எழுதி மத அடிப்படைவாத அமைப்புகளின் பத்வாவுக்கு ஆளானவர் அவர். 75 வயது நிரம்பிய அவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில், நியுயார்க் மாகாணம் Buffalo பகுதியில் கல்வி மையம் ஒன்றில் … Read more