“வரலாற்றின் போக்கை மாற்றிய தலைவர்” – மிகைல் கோர்போசேவுக்கு உலகத் தலைவர்கள் புகழஞ்சலி

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி அதிபராக அறியப்பட்ட மிகைல் கோர்பசேவ் வயது முதிர்வுக் காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. அமைதியின் பிம்பமாக கடந்த காலங்களில் அறியப்பட்ட மிகைல் கோர்போசேவ் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: ”சிறந்த அரசியல் பார்வைக் கொண்ட நபர். அரியத் தலைவர். வித்தியாசமான எதிர்காலம் சாத்தியம் என்பதை காண்பிக்க தனது முழு வாழ்க்கையையும் அவர் பணயம் வைத்தார்.” ஐ. நா. … Read more

சீன நிறுவனங்களுக்கு AI chip விற்பனை செய்வதை நிறுத்த அமெரிக்கா உத்தரவு.!

சீனாவுக்கு செயற்கை நுண்ணறிவு சிப்களை விற்பனை செய்வதை நிறுத்தி வைக்க அமெரிக்க நிறுவனங்களுக்கு  அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னணி அமெரிக்க நிறுவனங்களான என்விடியா மற்றும் AMD நிறுவனங்கள், இயந்திரங்களின் கற்றல் திறனை வேகப்படுத்தும் சிப்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், இந்த உத்தரவால் அந்நிறுவனங்களின் பங்குகள் 2 முதல் 3 சதவீதம் சரிவை கண்டுள்ளன. மேலும்,  A100 மற்றும் H100 chips விற்பனை தடையால், 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சிப் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக என்விடியா … Read more

புகழஞ்சலி: மிகைல் கோர்போசேவ் – உண்மையான அமைதியின் முகம்!

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி அதிபராக அறியப்பட்ட மிகைல் கோர்பசேவ் வயது முதிர்வுக் காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. 1931-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி ரஷ்யாவின் பிரிவோல்னோயீல் பிறந்த மிகைல் கோர்பசேவ் தனது கிராமத்தில் நாஜிக்களின் ஊடுருவலை நேரில் கண்டதால் போரின் சாட்சியாக தனது சிறுவயது வாழ்க்கை மாறியதாக பலமுறை கூறியதுண்டு. தன்னுடைய 19 வயதில் சட்டம் பயில்வதற்காக மாஸ்கோ சென்ற இவர், கம்யூனிஸ்ட் கொள்கை மீது ஆர்வம் கொண்டு அக்கட்சியில் இணைந்து … Read more

உலகின் சிறந்த நாடாக பிரிட்டனை உருவாக்க இரவும்,பகலும் பாடுபடுவேன் – கன்சர்வேடிவ் கட்சி தொண்டர்களுக்கு உறுதியளித்த ரிஷி சுனாக்

பிரிட்டனை உலகின் மிகசிறந்த நாடாக உருவாக்க இரவும், பகலும் பாடுபடுவேன் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக் , கன்சர்வேடிவ் கட்சி தொண்டர்களுக்கு உறுதி அளித்துள்ளார். பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் வாக்குபதிவு வருகிற திங்களன்று நடைபெறவுள்ள நிலையில், லண்டனில் நேற்றிரவு இறுதிகட்ட பிரச்சாரம் நடைபெற்றது. புதிய பிரதமருக்கான தேர்வில் ரிஷி சுனாக்கிற்கும், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. Source link

சூயஸ் கால்வாயில் சிக்கிய எரிபொருள் டேங்கர் கப்பல் 5 மணிநேரத்திற்கு பிறகு மீட்பு.!

சூயஸ் கால்வாயில் சிக்கிய எரிபொருள் டேங்கர் கப்பல் 5 மணிநேரத்திற்கு பிறகு மீட்கபபட்டது. போர்ச்சுக்கல்லில் இருந்து சவுதி அரேபிய செங்கடல் துறைமுகமான யான்புவை  நோக்கி புறப்பட்ட சிங்கப்பூரின் ‘அபினிட்டி வி’ என்ற சரக்கு கப்பல், தொழில்நுட்பக் கோளாறால் உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கியது. 252 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்ட கப்பல், கால்வாயை மறித்துக் கொண்ட நிலையில், ஐந்து இழுவை படகுகளை கொண்டு அந்த சரக்கு … Read more

பாகிஸ்தான் வெள்ளத்தால் 30 லட்சம் குழந்தைகள் பாதிப்பு: யுனிசெப் அமைப்பு தகவல்

நியூயார்க்: பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கி 30 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யுனிசெப் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: பாகிஸ்தானில் அண்மையில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தண்ணீரால் பரவும் நோய்கள், வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பு, போதிய உணவின்றி ஊட்டச்சத்து குறைபாடு என பல்வேறு வழிகளிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 30 லட்சம் குழந்தைகளாவது மனிதாபிமான … Read more

விண்வெளியில் அரிசி விளைவித்து சாதனை படைத்துள்ள சீன விஞ்ஞானிகள்…!

சீன விண்வெளி நிலையத்தில் பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிரை வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி நிலையத்தில், பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்சியான் ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இதற்கான பணிகள் கடந்த ஜூலையில் தொடங்கிய நிலையில், இதற்காக தாலே கிரஸ் மற்றும் அரிசி வகை செடிகளின் விதைகள் பயன்படுத்தப்பட்டன. இதில், தாலே கிரேஸ் என்ற முட்டைக்கோஸ் … Read more

சக மாணவர்கள் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்ட 15 வயது சிறுவன் கைது!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள பள்ளியில் சக மாணவர்கள் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்ட 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். படு காயம் அடைந்த இரண்டு மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களிடையே ஏன் மோதல் ஏற்பட்டது என்று விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தைத் தடை செய்ய அதிபர் ஜோ பைடன் உறுதி தெரிவித்த நிலையில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. Source link

அபுதாபியில் ஹிந்து கோவில்: அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அபுதாபி : ”ஐக்கிய அரபு எமிரேட்சில் கட்டப்பட்டு வரும் ஹிந்து கோவில், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான சின்னம்,” என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புகழ்ந்துள்ளார். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில், முதல் ஹிந்து கோவில் கட்டுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான இந்தியர்கள் கலந்துகொண்டனர்.இந்நிலையில், அங்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று அந்த … Read more

“நீங்கள் கேவலமாகத் தெரிகிறீர்கள்… இது இந்தியா அல்ல” – அமெரிக்காவில் இந்தியரை இனரீதியாக தாக்கிய மற்றொரு இந்தியர்

கலிபோர்னியா: அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் மற்றொரு இந்தியர் ஒருவரால் இனரீதியான தாக்குதலை எதிர்கொண்டுள்ளார். சில தினங்கள் முன் அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பெண்களிடம் “அமெரிக்காவில் எங்கு சென்றாலும் நீங்கள்தான் (இந்தியர்கள்) இருக்கிறீர்கள்- இந்தியாவுக்கு திரும்ப ஓடுங்கள்” என மெக்ஸிகன்-அமெரிக்கன் பெண் இனவெறியுடன் பேசி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதேபோல மற்றொரு இனவெறி சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறை இந்தியர் இனரீதியாக தாக்குதலை எதிர்கொண்டது … Read more