அமெரிக்காவில் குரங்கம்மை நோய்க்கு முதல் மரணம்

அமெரிக்காவில் குரங்கம்மை நோய்க்கு முதல்முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குரங்கம்மை நோய்க்கு இதுவரை உலகம் முழுவதும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 98 நாடுகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் 60 சதவீதம் அமெரிக்காவிலும், 38 சதவீதம் ஐரோப்பாவிலும் பதிவாகி உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  Source link

257 கி.மீ., வேக சூறாவளிஜப்பானில் பாதுகாப்பு தீவிரம்| Dinamalar

ஒகினாவா:ஜப்பானில் ‘ஹின்னம்னார்’ என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி மணிக்கு, 257 கி.மீ., வேகத்தில் வீசும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், கன மழை, புயலுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கிழக்கு சீன கடலில் உருவாகியுள்ள இந்த சூறாவளி, ஜப்பான் தீவுகளை கடுமையாக தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வலுவாக இருக்கும். கடலில் 50 … Read more

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர்..! – ரசிகர்கள் உற்சாகம்..!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரை நட்சத்திரங்களும் கூட இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். இந்திய ரசிகர்கள் மத்தியில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் டேவிட் … Read more

பாகிஸ்தான் பேரழிவு; பிரதமர் மோடியின் ட்வீட்டிற்கு நன்றி தெரிவித்த ஷாபாஸ் ஷெரீப்!

பாக்கிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் புதன்கிழமை தனது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். பேரழிவை ஏற்படுத்தி வரும் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொருள் இழப்புகள் குறித்த அக்கறையை பாராட்டிய அவர், தனது நாடு இயற்கை பேரழிவினால் ஏற்படுள்ள பிரச்சனைகளை சமாளிக்கும் என்று கூறினார். பாகிஸ்தானில் இது வரை இல்லாதல் அளவிற்கு பெய்யும் பருவ மழையால் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, 1,100 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்து விட்டனர். 33 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதாவது, … Read more

பாகிஸ்தானுக்கு வெள்ள நிவாரண நிதியாக 30 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு வெள்ள நிவாரண நிதியாக 30 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு <!– பாகிஸ்தானுக்கு வெள்ள நிவாரண நிதியாக 30 மில்லியன் அமெரிக்க… –> Source link

இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது தூக்கி வீசப்பட்ட டெலிவரி பாய்..!

அர்ஜெண்டினாவில் இருசக்கர வாகனத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற டெலிவரி பாய், அவ்வழியாக வந்த ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சனிக்கிழமை இரவு Quilmes நகரில் உள்ள தண்டவளத்தில் ரயில் வருவதை குறிக்கும் சிக்னல் போடப்பட்டிருந்ததால், ரயில்வே கேட்டுக்கு முன் ஒரு வேன் காத்திருந்தது. வேனை முந்திக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற 23 வயதான டெலிவரி பாய், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டார். … Read more

வெறுப்பைத் தூண்டும் விதமாக பேசிய இமாம் நாட்டில் இருந்து வெளியேற்றம்: ஃபிரான்ஸ்

இமாம் ஒருவரை நாட்டை விட்டு வெளியேற்ற பிரான்ஸ் உயர் நிர்வாக நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்று பிரான்சு நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மான் தெரிவித்துள்ளார். வெறுப்பூட்டும் பேச்சுகளை பேசிய குற்றச்சாட்டுக்காக, இமாம் ஹசன் இக்யுஸ்சென், மொராக்கோவிற்கு நாடு கடத்தப்படுகிறார் என்று பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் வெளியிட்ட டிவிட்டர் செய்தி கூறுகிறது. “குடியரசுக்கு ஒரு பெரிய வெற்றியாக” ஹாசன் இக்யுசென் “தேசிய பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்” என்று டார்மானின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் மாநில கவுன்சிலின் … Read more

குழந்தை பெற்றால் பெற்றோருக்கு மாதம் ரூ.60,000.. மக்கள் தொகையை அதிகரிக்க தென் கொரியா புதிய திட்டம்..!

தென் கொரியாவில் மக்கள் தொகையை அதிகரிக்க, குழந்தை பெற்றால் பெற்றோருக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் தென் கொரியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறந்த நிலையில், 2001ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 5 லட்சமாக குறைந்தது. கடந்தாண்டு இதுவரை இல்லாத அளவிற்கு 2 லட்சத்து 66 ஆயிரமாக குறைந்தது. பெண்கள் கருத்தரிக்கும் விகிதம் குறைந்ததும் ஒரு காரணமாக கூறப்பட்டு வந்த நிலையில், மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக … Read more

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகி ஓராண்டு நிறைவு.. பட்டாசுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் தாலிபன்கள் கொண்டாட்டம்..!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி ஓராண்டு பூர்த்தி அடைந்துள்ளதை தாலிபன்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். தலைநகர் காபூல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இன்று தேசிய விடுமுறை அளிக்கப்பட்டது. காபூலில் உள்ள முன்னாள் அமெரிக்க தூதரகம் முன்பாக திரண்ட தாலிபன்கள் அங்கு அந்நாட்டுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். பட்டாசுகளை வெடித்தும், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டும் அவர்கள் இதனை கொண்டாடினார்கள். Source link

கியூபாவின் புரட்சி நாயகன் சே குவேராவின் மகன் கமிலோ மறைவு

கியூபாவின் புரட்சி நாயகரான சே குவேராவின் மகன் கமிலோ குவேரா நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 60. இதனை கியூபா அரசு தரப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அவர் வெனிசுலாவுக்கு பயணம் மேற்கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அலீடா மார்ச் மற்றும் சே குவேரா தம்பதியருக்கு பிறந்த 4 பிள்ளைகளில் இவர் ஒருவர். இவர் அவர்களுக்கு பிறந்த மூன்றாவது மகன் ஆவார். ஹவானாவில் சே குவேரா ஆய்வு மையத்தின் இயக்குனராக அவர் பணியாற்றி வந்துள்ளார். சே … Read more