பிரிட்டன் பார்லி.,யில் மன்னர் சார்லஸ் உருக்கம்| Dinamalar

லண்டன்:தன் தாய் வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்த தன்னலமற்ற கடமையைத் தொடரப் போவதாக, பிரிட்டன் பார்லிமென்டில் பேசுகையில், புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் குறிப்பிட்டார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 96, சமீபத்தில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருடைய மூத்த மகன் சார்லஸ், 73, மன்னராக பொறுப்பேற்று உள்ளார்.ராணியின் இறுதிச் சடங்கு, வரும் 19ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, பார்லிமென்டில் நேற்று உரையாற்றினார் … Read more

107 வாரிசுகள், 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிப்பு.. கென்யாவில் ஒரு கல்யாண மன்னன்..!

கென்யாவில் 61 வயது முதியவர் ஒருவர் 15 மனைவிகள், 107 வாரிசுகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். டேவிட் சாகாயோ கலுஹானா என்ற அந்த நபர், 15 பெண்களை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்கள் மூலம் அவருக்கு மகன், மகள் என மொத்தம் 107 வாரிசுகள் உள்ளனர். இதனால் அவரது குடும்பமே குட்டி கிராமம் போன்று காட்சியளிக்கிறது. இது உண்மையில் மிகப்பெரும் சாதனை என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. யூடியூபில் அவரைப்பற்றி ஆவணப்படமும் வெளியாகி உள்ளது. … Read more

செல்ஃபோனை ரொம்ப யூஸ் பண்ணாதீங்க… அப்புறம் அவ்வளவுதான்!

சில, பல ஆண்டுகளுக்கு முன்புவரை அலுவல்ரீதியான தகவல் தொடர்புக்கும், உறவுகளுக்கு இடையேயான தனிப்பட்ட உரையாடல்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த செல்ஃபோன், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இந்த பெயருக்கேற்ப ஒருவர் பேசுவற்கு மட்டுமின்றி யூடியூப், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வீடியோக்களை கண்டுக்களிப்பதில் தொடங்கி G pay,PhonePeஇல் பணபரிவர்த்தனை செய்வது வரை சகலமும் இன்று ஸ்மார்ட்ஃபோனை வைத்துதான். இதேபோன்று கார், ஆட்டோ ஸ்டாண்ட்களை பொதுமக்கள் தேடி சென்று தங்களது … Read more

இங்கிலாந்து ராணி எலிசபெத் ரகசிய கடிதம்: 2085ஆம் ஆண்டுதான் பிரிக்க முடியும்!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (96) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ஆம் தேதி காலமானார். ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் அவர் உயிர் பிரிந்ததாக, பக்கிங்ஹம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராணி எலிசபெத் மறைவையடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக முடிசூடிக் கொண்டுள்ளார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணி எலிசபெத்தின் உடல் வரும் 19ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

Super Fast Expressway: உலகின் 'Super Fast' நெடுஞ்சாலைகள்; வேக வரம்பு எவ்வளவு எனத் தெரியுமா..!!

அதிவேக விரைவுச் சாலைகள்: இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான சைரஸ் மிஸ்திரி, சில நாட்களுக்கு முன் கார் விபத்தில் உயிரிழந்தார் என்பதை அனைவரும் அறிவோம். அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேரிட்டது. விபத்தின் போது சைரஸ் மிஸ்திரியின் கார் மணிக்கு 120 கிமீ வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இந்தியாவில் சாலைகளில் மணிக்கு 100 கிலோமீட்டருக்கு மேல் வேகத்தில் வாகனம் ஓட்ட அனுமதி இல்லை. இந்நிலையில், உலகில் எந்தெந்த இடங்களில் மணிக்கு 130 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் கார்கள் … Read more

“நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்” – ராணி எலிசபெத் மறைவு குறித்து மனம் திறந்த ஹாரி

லண்டன்: “நீங்களும் தாத்தாவும் மீண்டும் இணைந்ததை அறிந்து நாங்கள் புன்னகைக்கிறோம்” என்று ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு குறித்து இளவரசர் ஹாரி உருக்கமாக கூறியுள்ளார். கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனை ஆளும் பொறுப்பை ஏற்றிருந்த இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. ராணி எலிசபெத்தின் உடல் தற்போது … Read more

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! – வெளியிடப்பட்ட பலி எண்ணிக்கை நிலவரம்..!

ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. பப்புவா நியூ கினியா ஒரு தீவு நாடாகும். இது ஆஸ்திரேலியாவிற்கு அருகே அமைந்துள்ளது. இந்நிலையில், பப்புவா நியூ கினியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில … Read more

ஆஸி.,க்கு ராணி எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம்: 2085ல் தான் திறக்கமுடியுமாம்!

சிட்னி: ராணி எலிசபெத்தால் சிட்னி நகர மக்களுக்காக எழுத்தப்பட்ட கடிதம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதாக ஆஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனை ஆளும் பொறுப்பை ஏற்றிருந்த இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். அன்னைக்கு அஞ்சலி செலுத்திவிட்டுப் புதிய மன்னராகப் பொறுப்பேற்றிருக்கிறார் 73 வயது நிரம்பிய மூன்றாம் சார்லஸ். இந்த நிலையில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் … Read more

ஆஸ்திரேலியாவில் எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம்! இன்னும் 63 ஆண்டுகளுக்கு திறக்க முடியாது… ஏன் தெரியுமா?

ஆஸ்திரேலியாவின் சிட்னி மக்களுக்காக மறைந்த மகாராணி 2ஆம் எலிசபெத், 1986ஆம் ஆண்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் சிட்னியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம் ஒன்றின், ரகசிய அறையில் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று ராணியை தவிர வேறு யாருக்கும் தெரியாது. குறிப்பாக, அதை இன்னும் 63 ஆண்டுகளுக்கு திறக்க முடியாது என்பதுதான் இதில் சுவாராஸ்யமானது. 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், சிட்னி மேயருக்கு அந்த கடிதத்துடன், ‘எலிசபெத் … Read more

சாம்பியன் பட்டம் வென்ற 19 வயதே ஆன அல்காரஸ்| Dinamalar

நியூயார்க்: நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 19 வயதான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆர்தர் ஆஷ் அரங்கத்தில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் நார்வே நாட்டின் காஸ்பர் ரூட் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் மோதினர். இதில் 6-4, 2-6, 7-6 (1), 6-3 என்ற செட் கணக்கில் நார்வே … Read more