தைவானை தனிமைப்படுத்த முடியாது; சீனாவுக்கு அமெரிக்கா சவால்| Dinamalar

ஜப்பான் : தைவானை சீனாவால் தனிமைப்படுத்த முடியாது என ஜப்பானில் சீன ராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சவால் விடுத்தார்.டோக்கியோ, சீனாவிடம் இருந்து பிரிந்து விட்ட நிலையில் தன்னை தனிநாடாக தைவான் கருதினாலும் சீனா அப்படி நினைக்கவில்லை. தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. கடந்த மே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பானுக்கு பயணம் செய்தபோது, “சீனா பலவந்தமாக தைவான் தீவை கைப்பற்ற முயற்சித்தால், அமெரிக்கப்படைகள் தைவானை இராணுவ … Read more

மதுபான கூடத்தில் தீ: 14 பேர் உயிரிழப்பு| Dinamalar

பாங்காக்,-தாய்லாந்தில் மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 14 பேர் உயிரிழந்தனர்; காயம் அடைந்த 40 பேரில், 15 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் சோன்புரி மாகாணத்தில் உள்ள, ‘த மவுன்டன் பி பப்’ என்ற மதுபானக் கூடத்தில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், நான்கு பெண்கள் உட்பட 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்; பலத்த காயம் அடைந்த நிலையில் 40 பேர் … Read more

தைவானை அச்சுறுத்தும் சீனா அமெரிக்கா கடும் எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-தைவான் ஜலசந்தி மற்றும் பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மையை காக்கும் நோக்கத்திற்கு முரணாகவும், பொறுப்பற்ற விதத்திலும் சீனா செயல்பட்டு வருவதை கண்டிப்பதாக அமெரிக்கா எச்சரித்து உள்ளது. கைப்பற்றுவோம் தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை தன்னுடன் அதிகாரப்பூர்வமாக இணைப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொண்டுள்ளது. தேவைப்பட்டால் தைவானை கைப்பற்றுவோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது .இந்நிலையில், அமெரிக்க பார்லி.,யின் … Read more

மலேசிய விமானப் படைக்கு 18 இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை விற்கவுள்ள இந்தியா..!

மலேசிய விமானப் படைக்கு 18 இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை இந்தியா விற்பனை செய்யவுள்ளதாக, மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், கடந்த ஆண்டு அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 83 தேஜஸ் போர் விமானங்களை 2023-ம் ஆண்டு முதல் விநியோகம் செய்வதற்கான 6 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அரசு வழங்கியது.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மலேசிய விமானப்படையிடம் இருந்து பெறப்பட்ட … Read more

ஐஸ்கிரீம் விளம்பர சர்ச்சை: ஈரானில் விளம்பரங்களில் பெண்கள் நடிக்க தடை

விளம்பரங்களில் பெண்கள் நடிக்க தடை விதித்துள்ளது ஈரான் அரசு. ஐஸ்கிரீம் விளம்பர படம் ஒன்றில் பெண் ஒருவர் நடித்திருந்தார். அது சர்ச்சையான நிலையில் இந்த உத்தரவை அந்த நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. என்ன நடந்தது? – ஐஸ்கிரீம் விளம்பரத்தில் பெண் ஒருவர் ஹிஜாபை தளர்த்திய நிலையில் நடித்திருந்தார். அது மத ரீதியிலான நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருந்ததாக ஈரான் நாட்டின் இஸ்லாமிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஈரானின் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம் இந்த … Read more

சீனாவின் எதிர்ப்புகளை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசிக்கு சீன அரசு தடை விதித்திருப்பதாக தகவல்!

பீஜிங், அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசிக்கு எதிராக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் பல்வேறு தடைகளை அறிவித்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. சீனாவின் கடும் மிரட்டல்களுக்கு மத்தியில், கடந்த 2-ந் தேதி இரவு தைவான் தலைநகர் தைபேவுக்கு, அமெரிக்காவை ஆளும் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி சென்று, அந்த நாட்டின் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து, அமெரிக்காவின் உறுதியான ஆதரவைத் தெரிவித்தார். இது சீனாவுக்கு அமெரிக்கா மீது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி … Read more

சீனா அமெரிக்கா உறவு முறிகிறதா..? – தொடரும் பேச்சுவார்த்தை ..!

சீன-அமெரிக்க பேச்சுவார்த்தையை சீனா நிறுத்தி வைக்கும் என்றும், ராணுவத் தலைவர்களுக்கு இடையேயான அழைப்புக்கான திட்டங்களை நிறுத்தும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தைவான் தீவில் இரு வல்லரசு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், காலநிலை மாற்றம், போதைப்பொருள் எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் ராணுவப் பேச்சுக்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டு வருவதாக சீனா கூறியது. பெய்ஜிங் தனது பிரதேசமாக உரிமை கோரும் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகைக்கு ஆவேசமாக … Read more

கொரோனா தடுப்பூசிகளை பாதுகாக்க சூரிய சக்தியால் இயங்கும் சிறிய குளிர்சாதன பெட்டிகளை பயன்படுத்தும் கென்யா..!

கடும் தட்ப வெப்பநிலை நிலவும் கென்யாவில் சூரிய சக்தியால் இயங்கும் சிறிய குளிர்சாதன பெட்டிகள் தடுப்பூசிகளை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சிறிய பிரிட்ஜ்-களை நடமாடும் தடுப்பூசி மையம் போல் அங்கு பயன்படுத்துகின்றனர். ஆரம்பத்தில் விவசாய பொருட்களை பாதுகாக்க சூரிய சக்தியால் இயங்கும் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், தற்போது கொரோனா தொற்றால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதும், தடுப்பூசிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் வைப்பது அவசியம் என்பதாலும், இந்த சிறிய சூரிய சக்தி குளிர்சாதனப் பெட்டிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. … Read more

தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது: சீனாவுக்கு நான்சி பெலோசி பதிலடி!

டோக்கியோ, சீனாவிடம் இருந்து பிரிந்துவிட்ட நிலையில் தன்னை தனிநாடாக தைவான் கருதினாலும், சீனா அப்படி நினைக்கவில்லை. தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ள சீனா துடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த மே மாதம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பானுக்கு பயணம் செய்தபோது, “சீனா பலவந்தமாக தைவான் தீவைக் கைப்பற்ற முயற்சித்தால், அமெரிக்கப் படைகள் தைவானை இராணுவ ரீதியாகப் பாதுகாக்கும்” என்று எச்சரித்திருந்தார். இதன்காரணமாக தைவான் பிரச்சினையில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கிறது. சீனாவின் கடும் மிரட்டல்களுக்கு … Read more

42 அடி நீளம்… – உலகிலேயே நீண்ட நகங்களுடன் கின்னஸில் இடம்பிடித்த பெண்: பின்புலத்தில் துயரக் கதை

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த டயனா ஆம்ஸ்ட்ராங் தனது கைகளில் 1,306 செ.மீ உயரம் கொண்ட நகங்களை வளர்த்ததற்காக உலகிலேயே நீண்ட நகங்களை கொண்டவராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். 25 ஆண்டுகளுக்கு மேலாக தனது நகங்களை வெட்டாமல் வளர்த்து கொண்டிருக்கிறார் டயனா. அவரது நகங்கள் 1,306 செ.மீ (42 அடி) நீளம் கொண்டவை. இதன் மூலம் அவர் உலகிலேயே நீளமான நகங்களை கொண்ட நபராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். 63 வயதாகும் டயனா பல வருடங்களுக்கு … Read more