தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது: சீனாவுக்கு நான்சி பெலோசி பதிலடி!
டோக்கியோ, சீனாவிடம் இருந்து பிரிந்துவிட்ட நிலையில் தன்னை தனிநாடாக தைவான் கருதினாலும், சீனா அப்படி நினைக்கவில்லை. தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ள சீனா துடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த மே மாதம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பானுக்கு பயணம் செய்தபோது, “சீனா பலவந்தமாக தைவான் தீவைக் கைப்பற்ற முயற்சித்தால், அமெரிக்கப் படைகள் தைவானை இராணுவ ரீதியாகப் பாதுகாக்கும்” என்று எச்சரித்திருந்தார். இதன்காரணமாக தைவான் பிரச்சினையில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கிறது. சீனாவின் கடும் மிரட்டல்களுக்கு … Read more