நெருப்புடன் விளையாட வேண்டாம் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை| Dinamalar

பீஜிங்:’தைவான் விவகாரத்தில் மூக்கை நுழைத்து, நெருப்புடன் விளையாட வேண்டாம்’ என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்த 1949ல் நடந்த உள்நாட்டு போரைத் தொடர்ந்து, சீனாவும், தைவானும் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வ உறவு இல்லையெனினும், சீனா தைவானுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது. அமெரிக்கா தலையிடும் இதற்கிடையே, 1997ல், அப்போதைய அமெரிக்க பார்லி., சபாநாயகர் நியூட் கிங்ரிச் தைவான் சென்றார். ‘சீனா தைவானை தாக்க முயன்றால், அமெரிக்கா தலையிடும்’ என … Read more

முறைகேடாக பெறப்பட்ட நிதியில் இங்கிலாந்தில் ரூ1,000 கோடிக்கு சொத்து வாங்கிய தொழிலதிபர்..!

DHFL மற்றும் ரேடியஸ் குழுமத்திலிருந்து முறைகேடாக பெறப்பட்ட நிதி மூலம் இங்கிலாந்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை தொழிலதிபர் அவினாஷ் போசலே வாங்கியதாக சிபிஐ  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.  எஸ் வங்கி மற்றும்  DHFL குழுமம் பல்வேறு நிறுவனங்களுக்கு பல நூறு கோடிகளை முறைகேடாக கடனாக வழங்கி ஊழல் செய்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வந்தது. இதில், ஏபிஐஎல் குழும நிறுவனர் அவினாஷ் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், அவருக்கு சொந்தமான நிறுவனங்கள், டிஎச்எஃப்எல் … Read more

இந்திய அணி அசத்தல் வெற்றி| Dinamalar

டிரினிடாட்: முதல் ‘டி-20’ போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாச இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் ‘ஈஸியா’ வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. டிரினிடாட்டில் முதல் போட்டி நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அல்ஜாரி ஜோசப் அறிமுகமானார். கேப்டன் ரோகித் சர்மா, ரிஷாப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், இந்திய ‘லெவன்’ அணிக்கு திரும்பினர். ‘டாஸ்’ வென்ற … Read more

“2020-21-ல் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி நேரடி முதலீடு” – மத்திய அரசு

கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 6 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நேரடி அந்நிய முதலீடு பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக உற்பத்தி துறையில் மட்டும் ஒரு லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து 27 சதவிகிதமும், அமெரிக்காவிலிருந்து 18 சதவிகிதமும் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கம்பியூட்டர் சாப்ஃட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறையில் 25 சதவிகிதம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. Source link

இலங்கைக்கு கடன் உலக வங்கி மறுப்பு| Dinamalar

கொழும்பு:’நாட்டின் பொருளாதார மீட்சிக்கு தேவையான கொள்கைகளை செயல்படுத்தும் வரை இலங்கைக்கு புதிய கடன்கள் வழங்கப் போவது இல்லை’ என, உலக வங்கி அறிவித்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறது. இதையடுத்து, அந்நாடு கடந்த ஏப்ரலில் அன்னிய கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் திவால் நிலைக்கு ஆளானது. இலங்கைக்கு அடுத்த ஆறு மாதங்களில், 37 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் … Read more

இலங்கைக்கு நிதி உதவி கிடையாது! – உலக வங்கி அறிவிக்க என்ன காரணம்.?

இலங்கைக்கு புதிய நிதி உதவி கிடையாது என உலக வங்கி அறிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு, ஜிடிபி, பணவீக்கம் உள்ளிட்டவை இலங்கை பொருளாதாரத்தை வாட்டி வதைக்கிறது. சீனாவிடம் கடன் சீரமைப்பு திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இரு நாட்களுக்கு முன் சர்வதேச செலாவணி நிதியம் அறிவுறுத்தி இருந்தது. இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கின்றது … Read more

சுத்தமான சூழலில் வாழ்வது ஓர் அடிப்படை உரிமை: ஐ.நா பொதுச் சபையில் நிறைவேறிய முக்கியத் தீர்மானம் 

ஜெனீவா: சுத்தமான சூழலில் வாழ்வது ஓர் அடிப்படை உரிமை என்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானம் ஒன்று ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை உலக நாடுகள் மிகவும் தீவிர பிரச்சினையாகப் பார்த்து வருகின்றன. காற்று மாசு காரணமாக மனிதர்களின் வாழ்நாள் குறைந்துகொண்டே வருவதாக ஆய்வு முடிகள் கூறுகின்றன. எனவே, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவதற்கான திட்டங்களை அனைத்து நாடுகளும் செயல்படுத்த தொடங்கியுள்ளது. இலக்கு வைத்து கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதற்கு வலு … Read more

காபூல் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு – 4 பேர் காயம் என தகவல்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் நான்கு பேர் காயம் அடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது ஷ்பகீசா டி20 கிரிக்கெட் லீக் எனும் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இது உள்ளூர் அணிகளுக்கு இடையிலான டி20 தொடராகும். இந்த தொடரின் ஒரு பகுதியாக இன்று (வெள்ளிக்கிழமை) பேண்ட்-இ-அமிர் டிராகன்ஸ் மற்றும் பாமிர் சால்மி அணிகளுக்கு இடையிலான போட்டி … Read more

ஈரானில் அதிகரிக்கும் மரணத் தண்டனைகள்: ஒரே நாளில் 3 பெண்கள் தூக்கிலிடப்பட்டனர்

தெஹ்ரான்: ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் கணவனை கொலைச் செய்த வழக்கில் மூன்று பெண்களுக்கு புதன்கிழமை மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஈரானில் செயல்படும் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த வாரத்தில் மட்டும் ஈரானில் 32 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். புதன்கிழமை மட்டும் 3 பெண்கள் தங்களது கணவரைக் கொன்ற குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டனர். இதில் 15 வயதில் திருமணமான ஷோகிலா அபாதியும் ஒருவர். … Read more

புகைபிடிக்க தடை: புகை பழக்கம் இல்லாத தலைமுறையை உருவாக்க நியூசிலாந்து இயற்றியுள்ள சட்டம்

நியூசிலாந்தில் சிகரெட் தடை: நியூசிலாந்தில் இனி, 2008க்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் சிகரெட் வாங்க முடியாது. இதனால், இனி வரும் தலைமுறையினர் புகை பிடிக்க இயலாது.  இதற்காக நியூசிலாந்து அரசு புதிய சட்ட மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. புதிய தலைமுறையினர் சட்டப்பூர்வமாக சிகரெட் வாங்குவதை தடை செய்யும் இந்த புதிய நியூசிலாந்து சட்டத்தின்படி,  இனி 2008க்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் 18 வயதை எட்டிய பிறகும் புகைபிடிக்க முடியாது. நியூசிலாந்து எம்.பி.க்கள் அனைவரும் இது குறித்த சட்ட … Read more