பூமியை நெருங்கும் எவரெஸ்டை விட பெரிய வால் நட்சத்திரத்தினால் ஆபத்து உள்ளதா…

வால் நடத்திரம் என்பது சிறிய சூரியக் குடும்பப் பொருளாகும். வால் நட்சத்திரங்களின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான்பொருட்கள் போலவே வால் நடசத்திரங்களும் சூரியனைச் சுற்றுகின்றன.   இந்நிலையில், எவரெஸ்டை விட இரு மடங்கு பெரிய அளவிலான வால் நட்சத்திரம் ஒன்று ஜூலை 14 அன்று பூமிக்கு மிக அருகில் வரும் என கூறப்பட்டுகிறது. பூமியை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருக்கும் இந்த வால் நட்சத்திரத்திற்கு C/2017 K2 (PANSTARRS) அதாவது K2 … Read more

லிபியாவில் போராட்டம்: அரசு அலுவலகங்களுக்கு தீ வைப்பு

திரிபோலி: லிபியாவில் கடந்த சில நாட்களாக அரசை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் வெள்ளிக்கிழமை லிபியாவில் ஆளும் அரசி எதிர்த்து அரசு அலுவலங்களில் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதற்கிடையில் லிபியாவில் அமைதி ஏற்பர ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து லிபியாவுக்கான ஐ. நா அதிகாரி கூறும்போது, “ அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும் … Read more

கருக்கலைப்பு பற்றிய பயண விபரங்கள் கூகுளில் நீக்கம்

அமெரிக்காவில் கருக்கலைப்புக்காக மருத்துவமனை சென்ற தகவல், இருப்பிட பயண விபரங்களில் இருந்து நீக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. மாகாண எல்லை தாண்டி சென்று கருக்கலைப்புக்காக செல்லும் பெண்களின் மின்னஞ்சல்கள், இருப்பிட தகவல் விபரம், இணைய தேடல் உள்ளிட்டவை பயன்படுத்தி தங்களது நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்படலாம் என கருதி முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. தேடுபொறியில் யாரேனும் எடை குறைப்பு மருத்துவமனை, போதை மறுவாழ்வு மையத்துக்கு சென்றிருந்தது தெரிந்தால், அந்த தகவலும் நீக்கப்படும் என்றும் கூகுள் … Read more

முத்தமிட்டு முதலையை மணந்த மேயர் – மெக்சிகோவில் விநோதம்

உலகெங்கிலும் விநோத செயல்கள் அரங்கேறுவது உண்டு. சம்பிரதாயம் என்று கூறி மனிதனுக்கும் கழுதைக்கும் திருமணம், மனிதனுக்கும் தவளைக்கும் திருமணம் என ஏகப்பட்ட விஷயங்கள் அப்படி நடக்கும்.  அதேசமயம் ஆபத்தான விலங்குகளிடம் மனிதர்கள் அந்த சம்பிரதாயத்தை காண்பிக்கமாட்டார்கள். ஆனால் மெக்சிகோவல் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மேலும் படிக்க | அமீரகத்திலிருந்து தாயகம் திரும்பிய நபர் உயிரிழப்பு: காத்திருந்த குடும்பத்தினர் சோகத்தின் உச்சியில் மத்திய மெக்சிகோவில் இருக்கும் சான் பெட்ரா  ஹவுமெலுலா என்ற நகரத்தின் மேயராக இருப்பவர் விக்டர் ஹ்யூகோ … Read more

வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகள் அளிக்கப்படும் – இலங்கை குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை

நிதி நெருக்கடி காரணங்களால் வாரத்தில் திங்கட்கிழமை  மட்டும் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகள் அளிக்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியேற்றத்துறை அறிவித்துள்ளது. Matara, வவுனியா, கண்டி பாஸ்போட் அலுவலகங்களில் 100 பேருக்கு மட்டுமே சேவைகள் வழங்கப்படும் என்றும், சேவைகள் பெற விண்ணப்பதாரர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 60 நாட்களுக்கு முன்பதிவு செய்யதவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் வெளிநாடு வேலை உள்ளிட்ட அவசர பயணம் மேற்கொள்வோர் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வாட்ஸ் அப் மூலம் பெற எண்கள் … Read more

27 பேர் கதி என்ன?| Dinamalar

ஹாங்காங் : ஹாங்காங்கில் 30 பேர் பயணித்த கப்பல், புயலில் சிக்கியது. பெரிய அலையால் கவிழ்ந்தது. மூவர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது. சீனாவில் சமீபத்தில் உருவான ‘சபா’ புயலால் கனமழை பெய்து வருகிறது. ஹாங்காங்கின் தென்மேற்கே 296 கி.மீ.,ல் தொழிற்சாலை கப்பல் பயணித்தது. அப்போது மணிக்கு 144 கி.மீ., வேகத்தில் வீசிய ‘சபா’ புயல் காற்றால் 10 அடிக்கு மேல் கடல் அலை எழும்பியது.இதில் சிக்கிய கப்பல் இரண்டாக உடைந்து நீரில் மூழ்கியது. தகவலறிந்த … Read more

பெலாரஸ் மீது உக்ரைன் ராணுவம் வான் தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் தகவல்

ரஷ்யா ஆதரவு நிலைப்பாடு காரணமாக தங்கள் மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். உக்ரைன் ராணுவம் ஏவிய ஏவுகணைகளை Pantsir வான் தடுப்பு சாதனங்களை கொண்டு வானிலே இடைமறித்து தங்கள் ராணுவம் அழித்ததாக லுகான்ஸ்கோ கூறினார். கடந்த மூன்று  நாட்களுக்கு முன் இதேபோல் தங்கள் ராணுவ நிலைகளை குறிவைத்து உக்ரைன் படைகள் தாக்க முயன்றதாக அவர் தெரிவித்தார். உக்ரைன் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் ஆத்திரமூட்டுவதாக அதிபர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். … Read more

பாக்.,கை குப்பைத்தொட்டியாகபயன்படுத்தும் வெளிநாடுகள் | Dinamalar

கராச்சி : பாகிஸ்தானை கழிவுகளை கொட்டும் இடமாக, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் கழிவுகளை, வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. அமெரிக்கா, பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாகிஸ்தான் கழிவுகளை இறக்குமதி செய்கிறது.இங்கு, கராச்சி, லாகூர், சியால்கோட், கைபர் பக்துன்க்வா, குஜ்ரன்வாலா உள்ளிட்ட பல இடங்களில், மறு சுழற்சி ஆலைகள் செயல்படுகின்றன. இவை இறக்குமதி … Read more

ஒத்துழைப்பு இல்லை: நிதியமைச்சர் ராஜினாமா!

கொரோனா பெருந்தொற்றால் உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மெல்ல மீண்டும் வரும் நிலையில், பொருளாதார சுழற்சியால் பொருட்களின் தேவை அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் உணவுப்பொருட்கள் தொடங்கி பல பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சமையல் எண்ணெய், கோதுமை, சர்க்கரை என பல உணவுப்பொருட்களின் விலையும், பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகளில் பொருளாதார சிக்கல் உருவாகி வருகிறது. இதனால் பல நாடுகளில் … Read more

இலங்கைக்கு 3 கப்பல்களில் எரிபொருள் அனுப்ப இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் முடிவு

பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் உதவி செய்ய முன்வந்துள்ளது. மூன்று கப்பல்களில் பெட்ரோல் மற்றும் டீசல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.முதல் கப்பல் வரும் 13 ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவை சென்றடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இலங்கையின் பெட்ரோல் டீசல் தேவை தற்காலிகமாகத் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Source link