ஆப்கானிஸ்தானின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரமாக உயர்வு.!

ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் நகருக்கு அருகே அதிகாலையில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், பக்திகா மாகாணத்தில் 4 மாவட்டங்களும், கோஸ்ட் மாகாணத்தில் ஒரு மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் … Read more

ஹாங்காங்கில் மின் கேபிள் பாலத்தில் திடீர் தீ விபத்து.. சுமார் 20 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிப்பு

ஹாங்காங்கில் மின் கேபிள் பாலத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, சுமார் 20 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. யுவன் லாங் பகுதியில் உள்ள பாலத்தில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், 3 மாவட்டங்களுக்கு மின்சாரம் வழங்கும் உயர் மின்னழுத்த கேபிள்கள் சேதமடைந்தன. உடனடியாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் மருத்துவமனைகள் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மின் விநியோகம் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் … Read more

சீர்குலைந்தது இலங்கை பொருளாதாரம் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வெளிப்படை| Dinamalar

கொழும்பு:கச்சா எண்ணெய் வாங்கக் கூட பணமில்லாத அளவிற்கு இலங்கை பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக, அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, மின் வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கித் தவித்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பார்லிமென்டில் பேசியதாவது:இலங்கை பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து விட்டது. கச்சா எண்ணெய் வாங்கக் கூட அன்னியச் செலாவணி இல்லை. இலங்கை எண்ணெய் நிறுவனத்தின் … Read more

சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் புல்டோசர் மூலம் அழிப்பு.!

அமெரிக்காவின் நியூயார்க்கில் சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டது. இதனை நியூயார்க்கின் மேயர் எரிக் ஆடம்ஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட இரண்டாயிரம் வாகனங்களில் முதற்கட்டமாக 100 வாகனங்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டதாகவும், அழிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களின் கழிவுகள் அனைத்தும் பழைய உலோகங்களாக மாற்றப்பட்டு மறு சுழற்சி செய்யப்படும் என்று நியூயார்க் மேயர் தெரிவித்தார். Source link

நாடு முழுவதும் பொது நீச்சல் குளங்களில் 'புர்கினி' நீச்சல் உடை அணிய தடை – பிரான்ஸ் கோர்ட்டு அதிரடி

பாரிஸ், பிரான்ஸ் நாட்டில் கிரினொபெல் நகரில் பொது நீச்சல் குளங்களை பயன்படுத்த பிகினி என்ற குறிப்பிட்ட உடையை அணிய வேண்டுமென்ற விதி உள்ளது. ஆனால், பொதுநீச்சல் குளங்களை இஸ்லாமிய மத பெண்கள் பயன்படுத்தும் வகையில் புர்கானி என்ற உடையும் அனுமதிக்கப்பட்டது. புர்கானி என்பது பர்தா மற்றும் பிகினி என்ற வார்த்தைகளின் கூட்டு சொல்லாக கூறப்படுகிறது. புர்கினி என்பது உடல் முழுவதையும் மூடி முகம் மட்டும் தெரியும் வகையிலான உடையாகும். இந்த உடைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். … Read more

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 4 நகரங்களுக்கு சேவை நிறுத்தம்..!

விமானிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 4 அமெரிக்க நகரங்களுக்கான சேவையை செப்டம்பர் 7-ம் தேதியுடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. விமானிகள் பற்றாக்குறை காரணமாக அமெரிக்காவில் உள்ள முக்கிய விமான நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான விமான சேவைகளை தொடர்ந்து ரத்து செய்து வருகின்றன. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 20,000 விமான சேவைகளைக் குறைத்துள்ளது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 7 வரை நாள்தோறும் 100 விமான சேவைகளைக் … Read more

ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

மாஸ்கோ, ரஷியாவின் தென் மேற்கு பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலை மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஆலை முழுவதும் தீப்பிடித்து எாிந்து நாசமானது. இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினா் அரைமணி நேரமாக போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்பு துறை அதிகாாிகள் தொிவித்தனா். 2 ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், … Read more

கடிக்க வந்த முதலையை சமையல் பாத்திரத்தை வைத்து அடித்து விரட்டிய நபர்..!

ஆஸ்திரேலியாவில் தன்னை கடிக்க வந்த முதலையை சமையல் பாத்திரத்தை (frying pan) வைத்து அடித்து விரட்டிய நபரின் வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். கேளிக்கை விடுதி உரிமையாளரான கைஹான்சன் என்பவர் அடிலெய்டு ஆற்றுப் பகுதிக்கு சென்றிருந்த நேரத்தில், ஆற்றில் இருந்த முதலை அவரை தாக்க வந்தது. அப்போது, தான் கையில் வைத்திருந்த பாத்திரத்தை வைத்து முதலையை அடித்து விரட்டினார்.  Source link

இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் – பொதுமக்கள் கடும் அவதி

லண்டன், இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள், சம்பளத்தை உயர்த்தக்கோரி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நாட்டில் விலைவாசி உயர்வுக்கு ஈடாக தங்களது சம்பளம் போதவில்லை என்றும் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தி ரெயில்வே ஊழியர்கள் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்கள் அனைத்தும் வெறிச்சோடிப் போய் காணப்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் … Read more

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அதிகரிக்கும் கற்பழிப்பு புகார்கள்… குற்றங்களை கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் அங்கு நான்கு அல்லது ஐந்து பலாத்கார புகார்கள் எழுவதாக கூறப்படுகிறது. பெண்களும், குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க தற்போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, இரண்டு வாரங்களுக்குள் செயல் திட்டம் வகுக்கப்படும் என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் அட்டா தரார் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க திட்டம் வகுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். Source … Read more