குகையிலிருந்து பறந்து சென்ற நூற்றுக்கணக்கான வெளவால்கள்.. கருப்பு ஆறு போல் வானில் பறந்து ஜாலம் – வீடியோ இணையத்தில் வைரல்..!
மெக்சிகோவில் உள்ள வெளவால்களின் குகை என்றழைக்கப்படும் குகையிலிருந்து, நூற்றுக்கணக்கான வெளவால்கள் பறந்து சென்ற காட்சியை காரில் பயணித்த நபர் ஒருவர் பதிவு செய்தார். அளவில் சிறியதாக இருக்கும் இந்த வெளவால்கள், தென் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் பொலிவியா, பிரேசிலில் மட்டும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.