அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துப்பாக்கி சூடு; 7 பேர் காயம்

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாசாரம் பெருகி வரும் சூழலில் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பூங்கா பகுதியில் நடந்து வந்த கார் கண்காட்சி ஒன்றில் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். அவர்களை நோக்கி திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர போலீசார் கூறும்போது, லாஸ் ஏஞ்சல்சின் சான் பெட்ரோ பகுதியருகே … Read more

கோத்தபய ராஜபக்ச தலைமேல் தொங்கும் கத்தி; மனித் உரிமை அமைப்பு அளித்த புகார்

இலங்கையில் இருந்து தப்பி சிங்கப்பூரில் வசிக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு சிக்கல்கள் அதிகரிக்கலாம். இலங்கையின் முன்னாள் அதிபரை கைது செய்யுமாறு தென்னாபிரிக்க மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் அமைப்பு சிங்கப்பூரில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இலங்கையில் பல தசாப்தங்களாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் ராஜபக்சேவின் பங்கு குறித்து, அந்த நேரத்தில் ராஜபக்சே நடத்திய அடக்கு முறை காரணமாக போர்க் குற்றவாளியாக கருத வேண்டும் எனவும், அவரை  கைது … Read more

பாகிஸ்தானில் அரசியல் விவகாரங்களில் தலையிட அந்நாட்டு ராணுவம் திட்டம்!

பாகிஸ்தானில் நீடிக்கும் பொருளாதார தேக்கம் மற்றும் அரசியல் ரீதியான குழப்பங்களுக்கு இடையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகளிடையே சமரசத்தை ஏற்படுத்துவதற்காக, பாகிஸ்தானின் ராணுவம் தலையிடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு இம்ரான் கான் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. Source link

பிரான்ஸ் கிராண்ட் பிரி பார்முலா-1 கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம்!

பிரான்ஸ் கிராண்ட் பிரி பார்முலா ஒன் கார் பந்தயத்தில் நடப்பு சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார். லீ கெஸ்டலெட் ஓடுதளத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பல்வேறு கிளப்புகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த சார்லஸ் லெக்ரெக், வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி பின் தங்கினார். வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட பெல்ஜிய வீரர் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். Source link

மிருககாட்சி சாலையில் குரங்குகளின் கையில் அகப்பட்டு அல்லல்பட்ட பெண்மணி.. இணையத்தில் வைரல்..!

மிருககாட்சி சாலையில் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து சேட்டை செய்யும் குரங்கின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குரங்குகள் இருக்கும் கூண்டின் அருகில் சுற்றிப் பார்த்த பெண்ணின் முடியை திடீரென எட்டிப் பிடித்த குரங்கு அதை கண்டபடி இழுத்து சேட்டை செய்தது. அருகில் இருந்தவர்களின் உதவியுடன் குரங்கிடம் இருந்து தப்பிய பெண், பதற்றத்தில் மீண்டும் குரங்குகின் கையில் சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.   Source link

மரணதண்டனையை டிவியில் நேரடியாக ஒளிபரப்ப அனுமதி கோரும் நீதிமன்றம்

மரணதண்டனையை நேரலையில் ஒளிபரப்ப சட்டத்தில் மாற்றம் தேவை என எகிப்திய நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை எழுப்பியிருக்கிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திற்கு நீதிமன்றம் எழுதிய கடிதத்தில், “மரண தண்டனையை நேரடியாக ஒளிபரப்புவது, தண்டனை கொடுப்பதற்கான நோக்கத்தை பூர்த்தி செய்யும். இந்த நடவடிக்கை தொடக்கத்தின் ஒரு பகுதி மட்டுமே இருந்தாலும், இலக்கை அடைய முடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கடிதம் தற்போது சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த வித்தியாசமான கோரிக்கையின் பின்னணியும் ஆச்சரியமானதாக இருக்கிறது. பெண் … Read more

கலிபோர்னியாவில் காட்டுத் தீ: அவசர நிலை அறிவிப்பு| Dinamalar

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியாவில், பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக, அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மிட்பைன்ஸ் நகருக்கு அருகிலுள்ள பூங்காவில், ஓக் மரங்களில் சமீபத்தில் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள வனப் பகுதிகளுக்கும் பரவியது.அந்த தீ, 48 சதுர கி.மீ., துாரத்துக்கு பரவி, நேற்று முன்தினம் மிகப்பெரிய காட்டுத் தீயாக மாறியுள்ளது. தற்போது வரை, அதை அணைக்க முடியவில்லை. இதில், அந்த பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள், மரங்கள் எரிந்து சாம்பலாகின. 6,000க்கும் … Read more

100 நாட்களுக்குப் பின் இலங்கை அதிபர் மாளிகை இன்று மீண்டும் திறப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு : இலங்கையில் அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகங்கள், 100 நாட்களுக்குப் பின் இன்று (ஜூலை 25) முதல் மீண்டும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.அரிசி, காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உச்சத்தில் உள்ளன. இதனால் கடும் அவதிக்கு ஆளான மக்கள், அரசுக்கு எதிராக வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். ராஜினாமா இந்நிலையில் … Read more

இலங்கை அதிபர் மாளிகை எதிரே கூடாரம் போட்டு தங்கியுள்ள மக்கள் போராட்டம் தொடரும் எனப் அதிரடி அறிவிப்பு..!

இலங்கை அதிபர் மாளிகை அருகே தொடர்ந்து முகாமிட்டுள்ள பொதுமக்கள் சிலர் தங்கள் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர். புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதையடுத்துக் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் காலே சாலையில் மீண்டும் வாகனப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. அதேநேரத்தில் அதிபர் மாளிகையில் இருந்து நூறு மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இன்னும் சில கூடாரங்களில் போராட்டக்காரர்கள் தங்கியுள்ளனர். Source link

அக்சர் படேல் அதிரடி அரைசதம்; தொடரை வென்றது இந்திய அணி| Dinamalar

போர்ட் ஆப் ஸ்பெயின்: இரண்டாவது ஒருநாள் போட்டியில், அக்சர் படேலின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் விளாசிய சதம் வீணானது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. போர்ட் ஆப் ஸ்பெயினில் 2வது போட்டி நடந்தது. இது, … Read more