‘‘ஆதாரமற்ற செய்தி’’- கோத்தபய மாலத்தீவு தப்பிச் செல்ல உதவியா?- இந்தியா திட்டவட்ட மறுப்பு
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக வெளியான ஆதாரமற்ற ஊகத்தின் அடிப்படையிலான ஊடக தகவல்களை திட்டவட்டமாக மறுப்பதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச்மாதம் முதல் தொடர் … Read more