இலங்கை பொருளாதார நெருக்கடி: ராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ச

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். பசில் ராஜபக்ச கடந்த ஆண்டு ஜூன் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரையில் இலங்கையின் நிதித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்த நிலையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் நிதியமைச்சர் பதவியிலியிருந்து அவர் ராஜினாமா … Read more

பெருவில் சுரங்க தொழிலாளர்களிடையே மோதல் – 14 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பெருவில் தங்க சுரங்க தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். காரவெலியில் உள்ள சுரங்கத்தில் முறைசார தொழிலாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடின ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காணாமல் போன 10 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக 31பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Source link

காங்கோவில் வைரச்சுரங்கத்தில் கற்கள் சரிந்து விழுந்த விபத்து – 40 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வைரச்சுரங்கம் சரிந்த விழுந்த விபத்தில் சிக்கி, 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கின்ஷசா நகரில் செயல்பட்டு வரும் வைரச்சுரங்கத்தில், தொழிலாளர்கள் வைரத்தை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Source … Read more

எரிமலை குழம்பில் விழுந்த ஹெலிகாப்டர்| Dinamalar

ஹோனலுாலு:அமெரிக்காவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று எரிமலை குழம்பில் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.அமெரிக்காவில் பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு மாகாணம் ஹவாய். இங்கு, விமானி உட்பட ஆறு பேருடன் சென்ற சுற்றுலா ஹெலிகாப்டர் எரிமலைக் குழம்பில் விழுந்து நொறுங்கியது. இதில், நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், விமானி, 50, மற்றும் 18 வயது பெண் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. ஹோனலுாலு:அமெரிக்காவில் சுற்றுலா ஹெலிகாப்டர் … Read more

கார்கீவில் போரால் உருக்குலைந்த பள்ளியின் முன் இறுதியாண்டு கல்வியை முடித்த மாணவர்கள் நடனம்

உக்ரைன் கார்கீவில் ரஷ்யப் படைகளின் தாக்குதலால் உருக்குலைந்த தங்கள் பள்ளியின் முன் பட்டம் பெற்ற மாணவர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். ரஷ்ய படையெடுப்பால் வீட்டில் இருந்து இணைய வழியில் இறுதியாண்டு கல்வியை முடித்த மாணவர்கள் பட்டம் பெற்றனர். பள்ளி இறுதியில் நடைபெறும் நிகழ்வுகளை நினைவுகூறும் வகையில் போரால் உருக்குலைந்து காட்சியளிக்கும், தங்கள் பள்ளியின் மூலம் மாணவர்கள் நடனமாடி கொண்டாடினர். Source link

மர்ம நபர் வைத்த தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு| Dinamalar

சியோல்:தென் கொரியாவில், நீதிமன்றம் அருகே அலுவலக கட்டடம் ஒன்றில் மர்ம நபர் வைத்த தீயில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்.கிழக்காசிய நாடான தென் கொரியாவின் டேகு நகரில், மாவட்ட நீதிமன்ற கட்டடத்துக்கு அருகில், ஏழு மாடி வணிக வளாகம் உள்ளது. இங்கு, வழக்கறிஞர்கள் உட்பட பலர் அலுவலகங்கள் வைத்திருந்தனர். இதன் இரண்டாவது தளத்துக்கு நேற்று காலை சிறு சிலிண்டருடன் வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த ஒரு அலுவலகத்துக்கு தீ வைத்தார். அது மற்ற தளங்களுக்கும் வேகமாக … Read more

சர்வதேச நிதியத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி| Dinamalar

வாஷிங்டன்:சர்வதேச நிதியத்தின் ஆசிய – பசிபிக் மண்டல இயக்குனராக இந்திய பொருளாதார நிபுணர் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.இது பற்றி சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா வெளியிட்டு உள்ள அறிக்கை:சர்வதேச நிதியத்தின் ஆசிய – பசிபிக் மண்டல துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா ஸ்ரீநிவாசன், அதன் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். இம்மாதம் 22ல் அவர் இந்தப்பதவியை ஏற்பார். இந்தியரான கிருஷ்ணா ஸ்ரீநிவாசன், சர்வதேச நிதித்துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். நிதியத்தின் முக்கியமான காலகட்டங்களில் எங்களுடன் இணைந்து … Read more

டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்றரஷ்ய படையினர் தீவிர தாக்குதல்| Dinamalar

பாக்முட்:உக்ரைனின் டான்பாஸ் மாகாணத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்ய படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இரு தரப்பு வீரர்களும் தெருவில் இறங்கி சண்டையிட்டு கொண்டனர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரியில் போர் தொடங்கியது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது முதல், ரஷ்யா மீது 46 நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில், ‘உக்ரைனின் சிவிரோடொனெட்ஸ்க் நகர் மற்றும் நகரை சுற்றியுள்ள பகுதிகளை உக்ரைனிய படைகள் தங்கள் … Read more

நைஜீரியாவில் 32 பேர் படுகொலைபயங்கரவாதிகள் அட்டூழியம்| Dinamalar

அபுஜா:நைஜீரியாவில், பயங்கரவாதிகள், 32 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், ஐ.எஸ்., அமைப்பின் கீழ் செயல்படும் புலானி என்ற பயங்கரவாத பிரிவு, விவசாயிகளை கிராமங்களில் இருந்து வெளியேற்றி, நிலங்களை ஆக்ரமித்து வருகிறது.கடுனா மாவட்டத்தில் கஜூரா பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளனர். கிராம மக்கள் அருகில் உள்ள புதர்களில் மறைந்துள்ளனர். அவர்களை பயங்கரவாதிகள் தேடிச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதே போல நான்கு கிராமங்களில் அடுத்தடுத்து நுழைந்த பயங்கரவாதிகள், 32 … Read more