செல்லப்பிராணியாக இருந்த நாய்க்கு உரிமையாளர் திடீரென பூனையை கொஞ்ச தொடங்கியதால் ஏக்கம்

செல்லப்பிராணியாக தன்னை வளர்த்து வந்தவர் திடீரென பூனை ஒன்றை கொஞ்சத் தொடங்கியதால் ஏமாற்றம் அடைந்த நாய் ஒன்று காட்டிய முகபாவனைகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. முதலில் அந்த பூனையை பொறாமையுடன் பார்க்கும் அந்த நாய், பின்னர் உரிமையாளரின் கவனத்தை கவர அவரை நெருங்கி வந்து உற்றுப்பார்க்கிறது. இருப்பினும் அந்த உரிமையாளர் நாயின் பக்கம் திரும்பாமல் பூனையையே தொடர்ந்து தடவி கொடுக்க, ஏக்கத்துடன் பல்வேறு முகபாவனைகளில் அந்த நாய் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தியது.   Source link

தென்கொாியா : அலுவலக கட்டிடத்தில் தீவிபத்து – 7 போ் பலி

சியோல், தென் கொாியா நாட்டில் உள்ள டேகு நகாில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் பின்புறம் 7 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இருந்த அலுவலகத்தில் தீடீரென தீ பற்றியது. கண் இமைக்கும் நேரத்தில் தீயானது அலுவலகம் முழுவதும் மலமலவென பரவியது. உடனே இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த தீ விபத்தில் 7 போ் தீயில் … Read more

காட்டுக்குள் இருந்து வழிதவறி பள்ளத்திற்குள் விழுந்த குட்டியானை.. 4 மணி நேர முயற்சிக்கு பின் பத்திரமாக மீட்பு.!

வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்து, பள்ளத்தில் விழுந்த குட்டியானை ஒன்று சுமார் 4 மணி நேர கடும் முயற்சிக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. அந்த குட்டியானையின் பிளிறல் சத்தம் கேட்டு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய மீட்புப்பணி அதிகாலை 5 மணி வரை நீடித்தது. பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணைக் கொட்டியும், கயிறுகள் மூலம் கட்டியும் அந்த குட்டி யானை மீட்கப்பட்டது.  Source link

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்; அமெரிக்காவே காரணம்: ஐ.நா.வில் ரஷியா, சீனா குற்றச்சாட்டு

ஐ.நா. சபை, ஆசிய நாடான வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் இருந்து வருகிறார். அவர், கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல் அந்த நாடு தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை சோதித்து வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி இந்த சோதனைகளை நடத்தியதால் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இந்த சூழலில் கடந்த 2018ம் ஆண்டு வடகொரியா தலைவர் கிம் ஜாங் … Read more

மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ.. பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட மக்கள்.. தீயை அணைக்கும் பணி தீவிரம்.!

ஸ்பெயின் Pujerra மலைப் பகுதியில் தீப்பற்றி எரியும் நிலையில் மலையடிவார நகரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். மலைக் காடுகளில் பற்றி எரியும் தீயில் கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தீயின் தீவிரம் அதிகம் காணப்படும் நிலையில் மலையடிவாரத்தில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். தேவையான பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை மக்கள் பத்திரப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 140 வீரர்கள், … Read more

எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் பசில் ராஜபக்சே| Dinamalar

கொழும்பு: இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்ச தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். நம் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் கூட வாங்க முடியாத அளவுக்கு அந்த நாடு திணறுகிறது. இதற்கு பொறுப்பேற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். இதனையடுத்து முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயை பிரதமராக கோத்தபய ராஜபக்சே நியமித்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகளும் அடங்கிய கூட்டணி அரசு அமைந்துள்ளது. … Read more

வியட்னாமில் 12 அதிவிரைவு காவல் படகுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்பு

ஹாங் ஹா, இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டம் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டது. இதுதவிர, உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் வேறு சில நாடுகளுக்கும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், வியட்னாம் நாட்டுக்கு சென்றுள்ள மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், அந்நாட்டின் ஹாங் ஹா நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். … Read more

“வாழ்நாள் முழுவதும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லாத பேட்டரி”.. அசத்தும் பிரிட்டன் விஞ்ஞானிகள்..!

வாழ்நாள் முழுவதும் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இனி இருக்காது. பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் அணுக்கழிவு மூலம் வைர பேட்டரிகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். அனைத்து வகையான மின்னணு சாதனங்களுக்கான இந்த பேட்டரிகள் ஆயிரம் ஆண்டுகள் வரை நீடித்திருக்கும். ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமிருக்காது. அது தன்னைத்தானே ரீசார்ஜ் செய்து கொள்ளும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அணுக் கழிவுகளை நீக்கவும் வழி பிறக்கிறது. பேஸ் மேக்கர் மற்றும் சென்சார் கருவிகளுக்கான முதல் டைமண்ட் ரேடியோ … Read more

இந்தியா மட்டுமே உதவி செய்கிறது – சர்வதேச நிதியத்தின் உதவியை கோரும் ரணில் விக்கிரமசிங்கே

பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பிரதமராக இருந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.  இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்கே, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தை அணுகியுள்ளதாகவும், இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜியேவாவுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் தெரிவித்தார்.  … Read more

உலகம் முழுவதும் 29 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு..!

உலகம் முழுவதும் 29 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், குரங்கு அம்மை நோய் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாகவும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்தார். நெருங்கிய தொடர்பு மூலமாக மட்டுமே இதுவரை இந்நோய் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் … Read more