பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்தது

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். கடந்த இம்ரான்கான் அரசில் இருந்து சிக்கல்கள் நிறைந்த பொருளாதாரத்தை நாடு பெற்றிருக்கிறது என கூறி உரையைத் தொடங்கினார். சர்வதேச நிதியத்துடன் (ஐஎம்எப்) செய்து கொண்ட ஒப்பந்தத்தை முந்தைய அரசு காலில் போட்டு மிதித்து எங்களுக்காக கண்ணி வெடிகளைப் போட்டது என்று சாடினார். இம்ரான்கான் அரசு தனது கடைசி வாரங்களில் அரசின் கஜானாக்கள் காலியாக இருந்தாலும் எரிபொருட்கள் விலையைக் குறைத்து, எங்களது … Read more

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு ஆதரவு அளிக்கும் 2 மசோதாக்கள் நிறைவேற்றம்.!

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் இரு மசோதாக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அந்நாட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பெண்கள் கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்கும் வகையில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் ஆதிக்கும் செலுத்தும் பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், செனட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. செனட் சபையில் மசோதா நிறைவேற 10 குடியரசு கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.        … Read more

இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

கொழும்பு, இலங்கை எதிர்கொண்டு வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, ஆட்சியாளர்களின் அரியணையை பறித்து வருகிறது. மக்கள் புரட்சியால் அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் ஏற்கனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, கடந்த மே மாதம் நடந்த மக்களின் போராட்டம் மற்றும் வன்முறையால் பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே ஆட்சிக்கு வந்தார். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணிலுக்கு எதிராகவும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதில் கடந்த 9-ந்தேதி பெரும் … Read more

சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபரின் பயணம்: ஜோ பிடன் விடுத்த எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் சவுதி அரேபிய பயணத்தின்போது பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக கேள்வி எழுப்பியது சர்வதேச அளவில் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அமெரிக்க அதிபரின் தற்போதைய செளதி அரேபியப் பயணம், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை தனது ராஜாங்க ரீதியிலான பயணத்தின்போது சந்தித்த ஜோ பிடன்,  2018 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டது தொடர்பாக சில கேள்விகளையும் கேட்டுள்ளர். அமெரிக்க அதிபரின் செளதி அரேபிய … Read more

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக்குடன் நேருக்கு நேர் மோதப்போவது யார்?

லண்டன், இங்கிலாந்து நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமாவால், அடுத்த பிரதமர் பதவி போட்டி சூடு பிடித்துள்ளது. அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களிடையே நடைபெற்ற முதல் இரு கட்ட வாக்கெடுப்புகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் முன்னிலை பெற்றிருக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில், வர்த்தக மந்திரி பென்னி மோர்டான்ட், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ், முன்னாள் மந்திரி கெமி படேனோக், டாம் டுகெந்தெட் எம்.பி. ஆகியோர் உள்ளனர். அவர்கள் … Read more

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற தடை: இலங்கை சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

கொழும்பு, இலங்கையில் கடந்த 2005 முதல் 2015-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர், மகிந்த ராஜபக்சே. ராஜபக்சே குடும்பம் விடுதலைப்புலிகளுடனான 2009-ம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் வெற்றியடைந்ததன் மூலம் சிங்களர்கள் மத்தியில் ஹீரோவாக உயர்ந்தார். அப்படியே தங்கள் குடும்பத்தினரையும் அரசில் இணைத்துக்கொண்டு பெரும் ராஜாங்கத்தையே நடத்தி வந்தார். இதனால் இலங்கை அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்த குடும்பமாக ராஜபக்சே குடும்பம் கருதப்பட்டது. அதிபர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே 2015-ல் இறங்கினாலும் அவரது அதிகார மோகம் தீரவில்லை. … Read more

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை வாங்கினாலும் இந்தியா மீது பொருளாதார தடை இல்லை – அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு சாதனங்களை வாங்குவதற்கான தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் சட்டத் திருத்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. ரஷ்யாவிடம் இருந்து 500 கோடி டாலர் மதிப்பில் ஐந்து எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு சாதனங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கடந்த 2018 அக்டோபரில் கையெழுத்திட்டது. இதற்கு முன்னதாக, 2014-ல் கிரிமியாவை ரஷ்யா இணைத்ததற்கும் 2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதற்கும் பதிலளிக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து … Read more

கோத்தபய ராஜினாமா | இலங்கையில் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க – புதிய அதிபர் 20-ம் தேதி தேர்வு

கொழும்பு: இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இடைக்கால அதிபராக நேற்று பதவியேற்றார். இன்னும் ஒரு வாரத்தில் புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என சபாநாயகர் யபா அபேவர்த்தனா கூறியுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், மக்கள் போராட்டம் வலுத்துள்ளது. அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச, மாலத்தீவு தப்பிச்சென்று, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் யபா அபேவர்த்தனாவுக்கு அனுப்பினார். அதை அவர் … Read more

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளிநாட்டிற்கு செல்ல தடை

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் வருகிற 28ஆம் தேதிவரை நாட்டை விட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெறும் மக்கள் போராட்டத்தால், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது மனைவியுடன் வெளிநாட்டிற்கு தப்பியோடினார். இந்நிலையில், அவரது சகோதரர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.   Source link

ரஷ்ய ஏவுகணை வாங்க இந்தியாவுக்கு விலக்கு; அமெரிக்க பார்லி.,யில் மசோதா நிறைவேற்றம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-ரஷ்யாவிடம் இருந்து ‘எஸ் – 400’ ஏவுகணை சாதனங்கள் வாங்க விதிக்கப்பட்டுள்ள தடையில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் சட்ட திருத்த மசோதா, அமெரிக்க பார்லி.,யில் நிறைவேறியது. கடந்த, 2014ல் கிரீமியாவை ரஷ்யா ஆக்கிரமித்ததை கண்டித்து அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அத்துடன் இதர நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து நவீன ஏவுகணை உள்ளிட்ட தளவாடங்களை வாங்குவதை தடுக்கும் வகையில் ‘காட்சா’ சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், ரஷ்யாவிடம் … Read more