வேன் கவிழ்ந்து பாகிஸ்தானில் 22 பேர் பலி| Dinamalar
கராச்சி:பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லோராலியாவில் இருந்து, சோப் நகருக்கு, ஒரு வேன்சென்று கொண்டிருந்தது. அக்தர் சாய் மலைப்பகுதியில், ஒரு வளைவில் திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில், பயணம் செய்த ஐந்து குழந்தைகள், ஐந்து பெண்கள் உட்பட, 22 பேர் இறந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒரேயொரு குழந்தை மட்டும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. விபத்து பற்றி போலீசார் கூறுகையில், ‘அக்தர் சாய் மலை உச்சியில் இருந்து, வேன் மிகவும் ஆழமான பள்ளத்தில் விழுந்து … Read more