புயல், மழை… இருளில் மூழ்கிய கனடா!

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும், புயல், மழை போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் அளவுக்கு என்னதான் விஞ்ஞானம் வளர்த்திருந்தாலும், இவற்றின் பாதிப்பை மனிதனால் இன்னமும் தடுத்து நிறுத்த முடியவில்லை. என்னதான் இருந்தாலும் கடைசியில் நான்தான் ஜெயிப்பேன் என்று இயற்கை அவ்வபோது உணர்த்தி உள்ளது. கனடாவில் ஏற்பட்டுள்ள புயல், மழை இன்னொரு முறை இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தி உள்ளது. கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் உள்ளிட்ட கிழக்கு மாகாணங்களில் நேற்று கடுமையான புயல் தாக்கியது. அத்துடன் இடி, மின்னலுடன் … Read more

2 நாள் பயணமாக ஜப்பான் செல்லும் மோடி.. குவாட் மாநாட்டில் பங்கேற்கிறார்.!

குவாட் நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்ல உள்ள பிரதமர் நரேந்திர மோடி, பரஸ்பர நலன்கள் தொடர்பாக தலைவர்களுடன் விவாதிக்க அந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள குவாட் அமைப்பின் 3ஆவது மாநாடு வரும் 24ஆம் தேதி ஜப்பானில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தனி விமானத்தில் டோக்கியோ செல்கிறார். உக்ரைன் போர், காலநிலை மாற்றம் … Read more

அதிபரை அவமானப்படுத்தும் விதமாக ட்வீட் போட்ட எதிர்கட்சி பெண் தலைவருக்கு சிறை… கொதித்தெழுந்து மக்கள் பேரணி.!

துருக்கியில், எதிர்கட்சி பெண் தலைவர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அதிபர் எர்டோகனை அவமானப்படுத்தும் விதமாக டுவிட்டரில் பதிவிட்ட கனான் கஃப்டான்சியோகுளு-விற்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகள் 11 மாதங்கள் 20 நாட்கள் சிறை தண்டனை விதித்தது. இதனை கண்டித்து இஸ்தான்புலில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். துருக்கி நாட்டு சட்டப்படி 5 ஆண்டுகளுக்கு குறைவாக விதிக்கப்படும் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என்பதால் கஃப்டான்சியோகுளு சிறை செல்ல வாய்ப்பில்லை என … Read more

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய இலங்கை பிரதமர்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 137 வகையான மருந்து பொருட்கள் என 136 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  இதற்காக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை … Read more

இலங்கை துறைமுகம் சென்றடைந்தது தமிழ்நாடு அரசின் நிவாரண பொருட்கள்.!

தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் இலங்கை சென்றடைந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகத்தில் இருந்து கடந்த 18ஆம் தேதியன்று, 9 ஆயிரம் டன் அரிசி, இருநூறு டன் ஆவின் பால் பவுடர், 24 டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் உதவிப்பொருட்களுடன் சென்ற கப்பல் இன்று மாலை … Read more

தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைப்பு

கொழும்பு: இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன்வந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 டன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. … Read more

அமெரிக்க வீரர்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டும், செல்பி எடுத்தும் மகிழ்ந்த அதிபர் ஜோ பைடன்.!

ஜப்பான் செல்வதற்கு முன் தென் கொரிய நாட்டு விமானப்படை தளத்தை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்கு முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டும், செல்பி எடுத்தும் பொழுது போக்கினார். முன்னதாக தென் கொரிய அதிபர் யூன் சுக்குடன் இணைந்து அந்நாட்டு வான் மற்றும் விண்வெளி இயக்க மையத்தை ஜோ பைடன் பார்வையிட்டார். வட கொரியா ஏதேனும் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தினால் அதனை முறியிடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க மற்றும் தென் கொரிய ராணுவத்தினருடன் அவர் … Read more

காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத புடின்; அதிர வைக்கும் தகவல்கள்

விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல வகையான கூற்றுக்கள் தினம் தினம் வெளிவருகின்றன. தற்போது, அவருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல் நிலை சீர் குலைந்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. சில அறிக்கைகளில், அவர் ஒரு புற்றுநோயாளி என்று கூறப்படுகிறது. தி சன் நாளிதழின்ல் வெளியான ஒரு புதிய அறிக்கையில், புடின் சமீபத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. புற்றுநோய் அறுவை சிகிச்சை காரணமாக, அவர் … Read more

'நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம்' – முகத்தை மூடி செய்தி வாசித்த ஆப்கன் பெண் செய்தியாளர்கள் வேதனை

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களை உத்தரவை ஏற்று பெண் நிருபர்களும், செய்தி வாசிப்பாளர்களில் தங்கள் முகத்தை துணியால் மூடி செய்தி வழங்கி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது, உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாடா உத்தரவிட்டார். தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச … Read more

நீண்ட இடைவேளைக்கு பிறகு சுரங்கப்பாதைகளில் இருந்து குடியிருப்புக்கு திரும்பும் கார்கீவ் மக்கள்.!

ரஷ்யா நடத்திய தாக்குதலால் உக்ரைனின் கார்கீவில் ரயில் சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள ரயில் நிலையம் ஒன்றின் சுரங்கப்பாதையில் கடந்த 2 மாதங்களாக பதுங்கி இருந்தனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு கார்கீவில் கடந்த வாரம் பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில் சுரங்கப்பாதைகளில் உள்ள மக்கள் மீண்டும் தங்களது குடியிருப்புக்கு திரும்பி வருகின்றனர்.  Source link