இஸ்ரேல் நாட்டிலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து இஸ்ரேலிலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கத்திய ஐரோப்பாவுக்கு சென்று அங்கு குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவரை பார்த்துவிட்டு திரும்பிய, 30 வயதுடைய நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அறிகுறிகள் இருந்ததன் பேரில் டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  Source link

அதிபர் ஜோ பைடன் உள்பட 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை இணையதள பக்கத்தில் தடை விதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், உக்ரைன் போரை தொடர்ந்து அமெரிக்கா எடுத்த விரோத நடவடிக்கைகள் அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Source link

கிரிப்டோவில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை; காரணத்தை விளக்கும் பில் கேட்ஸ்

கிரிப்டோ முதலீட்டில் சிறு முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட முதலீடுகளின் அளவை பார்க்கும் போது பெரும் பணக்காரர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகம். பிட்காயின் உட்பட அனைத்து முன்னணி கிரிப்டோகரன்சியின் மதிப்புகள் தற்போது சரிந்துள்ள வேளையில் பில் கேட்ஸ் தற்போது தான் ஏன் கிரிப்டோகரன்சியில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார். மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் சமீபத்தில் Reddit தளத்தில் ‘Ask Me Anything’  என்ற … Read more

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்

இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் உள்ளதால், பிற நாடுகளில் உள்ள ஆலைகளில் உற்பத்தியை அதிகரிக்கும்படி ஆப்பிள் நிறுவனம் அதன் ஒப்பந்த நிறுவனங்களிடம் கூறியுள்ளது. கொரோனா சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பொறியாளர்களையும் வல்லுநர்களையும் அந்நாட்டுக்கு அனுப்பி வைப்பதை ஆப்பிள் நிறுவனம் நிறுத்திக் கொண்டது. கடந்த ஆண்டில் ஆப்பிள் ஐபோன்களில் 90 விழுக்காடு சீனாவிலும், 3 விழுக்காடு இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஐபோன் … Read more

கனடாவை உலுக்கிய கடும் புயலுக்கு 4 பேர் பலி… 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

மான்ட்ரியல்: கனடாவின் கிழக்கு மாகாணங்களான  ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நேற்று கடுமையான புயல் தாக்கியது. இடி மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது.  இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. புயல், மழை தொடர்பான விபத்துகளில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. 

அமெரிக்க அதிபர் ரஷ்யாவுக்க்குள் செல்ல நிரந்தரத் தடை: விளாடிமிர் புடின்

ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்க அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எடுத்த நடவடிக்கை சர்வதேச கவனங்களை ஈர்த்துள்ளது. ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு, அமெரிக்க அதிபருக்கு நிரந்தர தடை விதித்துள்ளார் புடின். இது மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைக்கு எதிரான ஒரு அடையாள நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அமெரிக்கர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை ரஷ்யா வெளியிட்டுள்ளது என்று சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  மேலும் படிக்க | மேற்கத்திய நாடுகள் தடைக்கு … Read more

நாய் உணவை சாப்பிட ரூ.5 லட்சம் – பிரபல நிறுவனம் அறிவிப்பு!

பிரிட்டனில் உள்ள நிறுவனம் ஒன்று நாய் உணவை 5 நாட்கள் சாப்பிடும் நபருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. நாட்டில் செயல்பட்டு வரும் ஆம்னி என்ற நிறுவனம் தங்களுடைய உற்பத்தியான நாய் உணவை சுவைத்து அது பற்றிய விவரங்களை தருவதற்கு சம்பளம் தருகிறது. இந்நிறுவனம் தாவர வகையிலான நாய் உணவை தயாரிக்கிறது. அந்த உணவு பொருட்களில் இனிப்பு உருளை கிழங்குகள், பருப்புகள், பூசணிக்காய் போன்ற காய்களும், புளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற கனிகளும் மற்றும் பட்டாணி, … Read more

Sri Lanka Crisis: இலங்கையில் அவசரநிலை நீக்கம்; காரணம் என்ன

இலங்கை நெருக்கடி: இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலையை இலங்கை அரசாங்கம் சனிக்கிழமை நீக்கியுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை கருத்திற்கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.  அண்மையில் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை உயர்வு, எரிபொருல் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக, தீவிரமடைந்த மக்கள் போராட்ட்டத்தை ஒடுக்கும் வகையில், ஆட்சி ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கினர். அதனை தொடர்ந்து வன்மூறை தீவிரமடைந்து  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல தலைவர்களின் வீட்டிற்கு … Read more

ரஷ்யாவுக்கு எதிராக கில்லர் மூவ்: எலக்ட்ரிக் பைக்குகளை பயன்படுத்தும் உக்ரைன்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனின் ஏராளமான இலக்குகளை குறி வைத்தும், அந்நாட்டின் நகரங்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வழங்கி வருகின்றன. உக்ரைனில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் போர்ட்டபிள் ஏவுகணையான லைட் ஆண்டி டேங்க் வெப்பன் ஏவுகணையை ஜனவரியிலேயே இங்கிலாந்து வழங்கியது. போருக்கு முன்பே சுமார் 2,000 ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன், மேலும் பல ஆயுதங்களை … Read more

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு 40,000 டன் டீசலை அனுப்பியது இந்தியா

கொழும்பு: இலங்கைக்கு, கடனுதவி திட்டத் தின் கீழ், மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசலை இந்தியா நேற்று வழங்கியது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, எரிபொருள் இறக்குமதி செய்ய, இந்தியா கடந்த மாதம் 50 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனுதவியை வழங்கியது. இலங்கை திவால் நிலையில் உள்ளதாக, அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில் இலங்கைக்கு கடனுதவி திட்டத்தின் கீழ், மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசலை அனுப்புவதாக இலங்கையில் உள்ள … Read more