இரவுநேர கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த 17 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு.!
தென் ஆப்ரிக்காவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த 17 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் கிழக்கு லண்டனில் பிரிகேடியர் டெம்பின்கோசி கினானா எனும் இடத்தில், இரவு நேர விடுதியில் 18 முதல் 20 வயதுடைய இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள போலீசார், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகித்துள்ளனர். Source link