ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ராக்கெட் லாஞ்சர்களை வழங்க பிரிட்டன் முடிவு.!

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நீடித்துவரும் நிலையில், எம் 270 ரக ராக்கெட் லாஞ்சர்களை உக்ரைனுக்கு வழங்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது. 80 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது இந்த ராக்கெட் லாஞ்சர்கள். ரஷ்யாவின் தாக்குதலை திறம்பட எதிர்கொள்ள இந்த தளவாடங்கள் உக்ரைன் நண்பர்களுக்கு மிகவும் உதவும் என்று லண்டனில் பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் வாலஸ் தெரிவித்தார். Source link

இது மிதக்காது.. பறக்கும்.. உலகின் முதல் பறக்கும் மின்சார படகை அறிமுகப்படுத்திய கனடா.!

மாசு ஏற்படுத்தாத உலகின் முதல் பறக்கும் மின்சார வாடகை படகை கனடாவை சேர்ந்த ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புகைவெளியிடாத, ஒலி எழுப்பாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நவீன படகில் ஆறு பேர் பயணிக்க முடியும். அதி வேகத்தில் செல்லும் போது இந்த படகு தண்ணீரில் படாமல் மேலெழும்பி செல்வதால் பயணிகள் பறக்கும் அனுபவத்தை பெற முடியும். Source link

பெய்ஜிங்கில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு : இயல்பு நிலை திரும்புகிறது..!!

பெய்ஜிங், சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. உருமாறிய கொரோனா காரணமாக இந்த தொற்று பரவல் அதிகரித்ததாக கூறப்பட்டது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்ததால் அங்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சீனாவில் கடந்த சில வாரங்களாக தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஷாங்காயில் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் … Read more

Imran Khan: இம்ரான் கான் கைது செய்யப்படுவார் – உள்துறை அமைச்சர் தகவல்!

பாதுகாப்பு ஜாமின் முடிந்ததும் இம்ரான் கான் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்து உள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில், ஆளும் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்த போராட்டங்களின் போது வன்முறையை தூண்டியதாக அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் ஜாமின் கோரி பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் தரப்பில் … Read more

‘வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் உலக அமைதிக்கு அச்சுறுத்தல்’ – தென் கொரியா அதிபர் கவலை

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதத் திட்டங்கள் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலையை எட்டியுள்ளதாக தென்கொரியா அதிபர் யூன் சுக் யோல் தெரிவித்துள்ளார். வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய பிறகு இன்று காலை சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். Source link

நைஜீரியாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் பலி

ஓவோ, நைஜீரியா நாட்டின் வடமேற்குப் பகுதி ஒண்டோ மாநிலத்தில் உள்ள ஓவோவில் செயின்ட் பிரான்சிஸ் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று பெந்தகோஸ்தே ஞாயிறு பிரார்த்தனை நடைபெற்றது. அதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்று வழிபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தேவாலயத்துக்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடித்தும் தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள் குழந்தைகள் உள்பட 50 பலர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் … Read more

ஷாங்காயில் 2 மாத முடக்கத்திற்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்..!

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் இரண்டு மாத கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படுள்ளன. ஷாங்காய் நகரத்தல் கடந்த ஒன்றாம் தேதி பொதுமுடக்கம் நீக்கப்பட்ட நிலையில், இன்று முதல் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். . Source link

'மக்கள்தொகை வீழ்ச்சி' நாகரிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – எலான் மஸ்க் பரபரப்பு கருத்து

வாஷிங்டன், உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது. பொருளாதார ரீதியில் ஒப்பிடும்போது முன்னேறிய நாடாக ஜப்பான் உள்ளது. எனினும் அந்த நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஜப்பானில் மக்கள் தொகையில் தற்போது பெரும்பாலானோர் முதியவர்களாக உள்ளனர். ஜப்பான் நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்காவிட்டால் அந்த நாடு விரைவில் காணாமல் போய்விடும் என டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்து … Read more

தலைநகர் கீவ் மீது 5 ஏவுகணைகளை வீசி ரஷ்ய படைகள் தாக்குதல்..!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ரயில்வே பணிமனை மீது ரஷ்ய படைகள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. பல வாரங்களுக்கு பிறகு கீவ் நகர் மீது ரஷ்ய படைகள் நேற்று மீண்டும் தாக்குதலை தொடங்கின. மொத்தமாக 5 ஏவுகணைகள் வீசப்பட்டதில் ஒரு ஏவுகணை ரயில்பழுதுபார்க்கும் பணிமணை மீது விழுந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கிழக்கு ஐரோப்பிய கூட்டணி நாடுகள் உக்ரைன் படைகளுக்கு வழங்கிய டாங்குகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது. Source link

முகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் சர்ச்சை கருத்து: கத்தார், குவைத், ஈரானை தொடர்ந்து சவுதியும் கடும் எதிர்ப்பு!

தோஹா, முகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இந்த மூன்று நாடுகளிலும், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலும் ஆட்சேபனைக்கு வழிவகுத்தன. இந்த சர்ச்சை … Read more