பூங்காவில் உள்ள குப்பைகளை அகற்ற உதவும் ‛சூப்பர் நாய்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாண்டியாகோ: சிலி நாட்டின் தலைகரில் உள்ள பூங்கா ஒன்றில் சேரும் குப்பைகளை வளர்ப்பு நாய் ஒன்று அகற்ற உதவுகிறது. பூங்கா ஊழியர்கள் அந்த நாயை சூப்பர் ஹீரோ என்று செல்லமாக அழைக்கின்றனர். சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பூங்காவிற்கு நடை பயிற்சிக்காக வருபவர், கோன்சலோ சியாங். அவர் தன்னுடைய வளர்ப்பு நாயை கூட அழைத்து வரும் வழக்கத்தை கொண்டுள்ளார். ‛சாம்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஐந்தரை வயது நாய் … Read more

அமெரிக்காவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டம்

அமெரிக்காவில் 5 வயதுக்குட்பட்ட இளஞ் சிறார்களுக்கு வரும் 21ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்த பைடன் அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய வெள்ளை மாளிகையின் கொரோனா கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளார் ஆஷிஷ் ஜா, பெடரல் கட்டுப்பாட்டாளர்கள் அனுமதி அளித்தவுடன் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க உள்ளதாக தெரிவித்தார். இதுகுறுத்து அடுத்த வாரம் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் வெளிப்புற உறுப்பினர்கள் குழு கூடி பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தார். … Read more

சிலி நாட்டில் பூங்காவில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் நாய்.!

சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் உள்ள பூங்காவில்  நாய் ஒன்று, பிளாஸ்டிக்  குப்பைகளை அகற்ற உதவி வருகிறது. சாம் என பெயரிடப்பட்டிருக்கும் ஐந்தரை வயதான அந்த நாயை, அதன் உரிமையாளர் கோன்சலோ சியாங் பூங்காவுக்கு நடைபயிற்சிக்காக தினமும் அழைத்து வருகிறார். அப்போது அந்த நாய் பூங்காவில் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், முகமூடிகள், கேன்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி பூங்காவை தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது. பூங்கா ஊழியர்கள் அந்த நாயை சூப்பர் ஹீரோ என்றழைக்கின்றனர்.   Source link

மிருக்காட்சி சாலையில் உயிரிழந்த விலங்குகளுக்கு அஞ்சலி செலுத்திய விலங்குகள் நல ஆர்வலர்கள்.!

பொலிவியாவின் லா பாஸில் உள்ள நகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ளூர் மிருகக்காட்சி சாலையில் உயிரிழந்த விலங்குகளுக்கு பொதுமக்களும், விலங்குகள் நல ஆர்வலர்களும் அஞ்சலி செலுத்தினர். மிருகக்காட்சி சாலையில் பல விலங்குகள் இறந்திருக்கும் நிலையில் அதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மிருகக்காட்சி சாலை அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே விலங்குகள் உயிரிழந்திருக்கக்கூடும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் உயிரிழந்த விலங்குகள், வெளியில் இருந்து மீட்டு அழைத்துவரப்பட்ட போதே பலவீனமாக இருந்ததாக மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source … Read more

இங்கிலாந்தில் குழு “வலியை” உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்.!

இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு “வலியை” உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கியுள்ளனர். இது குறித்து கூறிய ஆராய்ச்சியாளர்கள் குழு, மூளையில் இருந்து வரும் தரவுகளுக்கு பதிலளிக்கக்கூடிய பெரிய அளவிலான எலக்ட்ரானிக் தோலை உருவாக்குவதற்கு இது முன்மாதிரியாக இருக்கும் என்றும் மனித உடலில் உள்ள உணர்ச்சி நியூரான்கள் செயல்படும் விதத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். Source link

உக்ரைனில் பள்ளி மீது ராட்சத ஏவுகணை தாக்குதல் – ஒருவர் பலி..!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், கார்கிவ் நகரில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய ராட்சத ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். உக்ரைன் மீதான தாக்குதலை அதிதீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள் பொதுமக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில், தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், கார்கிவ் பகுதியில் உள்ள பள்ளி மீது நடத்திய தாக்குதலில் பள்ளிக் கட்டிடம் இடிந்து நொறுங்கி தரை மட்டமானது. Source link

US Gun Violence: துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்குங்க! – அதிபர் பைடன் வலியுறுத்தல்

கைத் துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 25 ஆம் தேதி டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞர் பள்ளி குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் … Read more

ராணி 2ஆம் எலிசபெத் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவு.. ராயல் விமானப் படை விமானங்கள் வானில் வர்ணஜாலம்..!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிளாட்டினம் ஜூபிலியை முன்னிட்டு இங்கிலாந்து விமானப் படை விமானங்கள் கண்கவர் கலை நிகழ்வுகளை நடத்தி வானை அலங்கரித்தன. பிரிட்டன் ராணியாக இரண்டாம் எலிசபெத் முடிசூடி 70 ஆண்டுகள் ஆனதை வெகு விமரிசையாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு ராயல் விமானப்படை விமானங்கள் சிவப்பு, வெள்ளை, நீல வர்ணங்களை விண்ணில் கக்கியவாறு வர்ணஜாலம் நிகழ்த்தின.   Source link

10% ஊழியர்கள் வேலை நீக்கம்; ட்விட்டருக்குப் பதில் டெஸ்லாவில் கை வைத்த எலான் மஸ்க்

மின்சாரக் கார் தயாரிப்பு, விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் தடம் பதித்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க், முன்னணி சமூக ஊடகமான ட்விட்டரை முழுமையாக வாங்கியுள்ளார். ஒரு பங்குக்கு 54 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும்.  எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து நிர்வாகச் செலவைக் குறைப்பதற்காக … Read more

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கோகோ கோலா குளிர்பான பாட்டில்கள்.. மக்கள் போராட்டம்.!

கோகோ – கோலா குளிர்பான பாட்டில்கள் குவிந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வருவதால் அவற்றை சேகரிப்பதில் அந்நிறுவனமும் பங்கெடுக்க வேண்டும் என கூறி அர்ஜெண்டினாவில் குப்பையில் வீசப்பட்ட பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் பியூனோஸ் அயர்ஸில் உள்ள கோகோ – கோலா நிறுவனத்தின் தலைமையகம் முன்பாக குடித்து விட்டு தூக்கியெறியப்பட்ட ஏராளமான குளிர்பான பாட்டில்களை மலை போல் குவித்து வைத்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். Source link