ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு

ரஷ்ய ராணுவம் தங்கள் நாட்டில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. பள்ளிக்கூடங்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்புகளை ரஷ்யா குறிவைத்து தாக்குவது போர் குற்றம் என குற்றஞ்சாட்டிய உக்ரைன் அரசு மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாவதாக கூறியுள்ளது. கடந்த மாதம் பிலோஹோரிவ்கா என்ற கிராமத்தில் இருந்த பள்ளி ஒன்றின் மீது நடந்த குண்டுவீச்சு தாக்குதலில் அந்த பள்ளி தரைமட்டமானதாகவும், 60 பேர் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் உக்ரைன் அரசு குறிப்பிட்டுள்ளது.   … Read more

உணவுக்கழிவுகளை சிமெண்டாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள்

உணவுக் கழிவுகளை கட்டுமானப் பயன்பாட்டிற்கான சிமெண்டாக மாற்றும் தொழில்நுட்பத்தை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்நாட்டின் டோக்கியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான கோட்டா மச்சிடா, யுயா சகாய் ஆகியோர் இணைந்து இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். உலகின் முதன் முறையாக உணவுக் கழிவுகளிலிருந்து சிமென்ட் தயாரிக்கும் செயல்முறை உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர்கள், தங்களது சிமெண்ட்டின் வலிமை சாதாரண சிமெண்ட்டை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம் என கூறினர்.   Source link

வருகிறது உணவு நெருக்கடி?- உக்ரைனில் கோதுமை உற்பத்தி 40% வீழ்ச்சி: தவிப்பில் உலக நாடுகள்

மாஸ்கோ: ரஷ்ய படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் மே மாதத்தில் கோதுமை உற்பத்தி 40% வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னணி தானிய ஏற்றுமதி நாடான உக்ரைனில் சோளம், சூரிய காந்தி உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மலேசியோ, இந்தோனேஷியா என பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் … Read more

இலங்கையில் அனைத்து அரசு அலுவலகங்களும் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயங்கும் என அறிவிப்பு

இலங்கையில் அனைத்து அரசு அலுவலகங்களும் இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொழிலாளர் ஆணையர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இந்த வாரம் முதல் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என அறிவித்த அவர், மக்கள் வெள்ளிக்கிழமையன்று அலுவலகங்களை நாடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். Source link

ஜானி டெப் Vs ஆம்பர் ஹேர்ட் | மீ டூ இயக்கம் முதல் மீம் மெட்டீரியல்ஸ் வரை – 10 குறிப்புகள் 

பிரபல அமெரிக்க நடிகையும், மாடலுமான ஆம்பர் ஹேர்ட் – நடிகர் ஜானி டெப் இடையேயான காதல் 2015-ல் திருமணத்தில் முடிந்தது. ஒன்றரை ஆண்டுகளிலே திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு, பின்னர் ஆம்பர் தொடர்ந்த வழக்கில் விவாகரத்துடன் இழப்பீடாக 7 மில்லியன் டாலரும் வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாஷிங்டன் போஸ்டில் ஒரு கட்டுரை எழுதுகிறார். உலக அளவில் #metoo இயக்கம் பரவலாக இருந்த காலக்கட்டத்தில்தான் ஆம்பரின் கட்டுரையும் வெளி வந்தது. இதனால் இந்தக் கட்டுரை … Read more

மவுன்ட் எட்னா எரிமலையில் பொங்கி வடியும் தீக் குழம்பு.. விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேற்றம்..!

இத்தாலி மவுண்ட் எட்னா எரிமலையில் இருந்து தீக் குழம்பு பொங்கி வலியும் கிளோஸ் அப் வீடியோ வெளியாகி உள்ளது. அண்மை வாரங்களாக மீண்டும் குமுறத் தொடங்கிய எரிமலை, 3 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தில் இருந்து தீக் குழம்பை கக்கி வருகிறது. மத்திய தரைக்கடல் தீவான சிசிலியில் எரிமலையின் சாம்பல் கழிவு மற்றும் கரும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. எரிமலையின் இரண்டாயிரத்து 800 மீட்டர் தூரத்தில் இருந்து வெளியேறும் எரிகுழம்பை கிளோஸ் அப் வீடியோவாக பதிவு செய்து … Read more

குழந்தை கடத்தலில் ஈடுபடும் ரஷியா- ஜெலன்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டு

கீவ்: ரஷிய ராணுவம் இதுவரை 2 லட்சம் குழந்தைகளை கடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100-வது நாளை நெருங்கி வருகிறது. இந்த போர் உலக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரினால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இந்த போர் குறித்து  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- ரஷிய ராணுவம் உக்ரைனில் இருந்து 2 லட்சம் குழந்தைகளை கட்டாயமாக கடத்தி சென்றுள்ளது. … Read more

“கொரோனா பரவலால் வடகொரியா நிலைமை மோசமாகி வருகிறது” – உலக சுகாதார அமைப்பு

கொரோனா பரவலால் வடகொரியாவின் நிலைமை மோசமாகி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைக்கான இயக்குநர் மைக் ரையன், வடகொரியாவில் நிலவும் உண்மையான நிலையை கண்டறிவதில் சிக்கல்கள் நீடிப்பதாகவும் வடகொரிய அரசு முழுமையான தரவுகளை வழங்காததால் சீனா, தென் கொரியா போன்ற அண்டை நாடுகளின் மூலம் அந்நாட்டின் நிலையை கண்காணித்து வருவதாகவும் கூறினார். மேலும் வடகொரிய மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாதது குறித்து கவலை தெரிவித்த மைக் ரையன், … Read more

ஒட்டு மொத்த பெண்களுக்கும் பின்னடைவு : ஆம்பர் ஹேர்ட் வருத்தம்!

பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாப்பாத்திரத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் ஜானி டெப். இவர், அமெரிக்க நடிகையான ஆம்பர் ஹேர்ட்டை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் படிக்க |Monkeypox Virus: கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் அடுத்த வைரல், எச்சரிக்கை விடுத்த ICMR  இந்நிலையில், ஜானி டெபின் பெயரை குறிப்பிடாமல் ஆம்பர் ஹேர்ட் தான் பட்ட பாலியல் … Read more

ஆஸ்திரேலியாவில் 4500 ஆண்டுகள் பழமையான தாவரம் கண்டுபிடிப்பு..!

ஆஸ்திரேலியாவில் நீருக்கு அடியில் 4,500 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஷார்க் விரிகுடாவில் உள்ள இந்த தாவரம் சுமார் 200 சதுர கிமீ பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. முதலில் இந்த செடியைப் பார்க்கும் போது கடல் புல்வெளி என்று நினைத்ததாகவும், பின்னர், ஆராச்சியில் ஒரு விதையில் இருந்து பரவிய தாவரம் என கண்டறியப்பட்டுள்ளது.  Source link