தீயை நான் பற்ற வைக்கவில்லை… பாகிஸ்தான் மாடல் வெளியிட்ட புதிய வீடியோ

பாகிஸ்தானில் வெப்பம் 100 டிகிரியையும் தாண்டிய நிலையில், கடுமையான வெப்பத்தால் மக்கள் தெருக்களில் நடமாடுவதையும் குறைத்துக்கொண்டு வீட்டில் அடைந்து கிடக்கும் சூழல் பாகிஸ்தானில் நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் பிரபல சமூக வலைதள நட்சத்திரமும், மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஹுமைரா அஸ்கர் (Humaira Asghar) என்ற மாடல் அழகி, பற்றி எரியும் காடுகளுக்கு முன்னால் போஸ் கொடுத்து வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டார்.  மேலும் அந்த பதிவில் “நான் எங்கிருந்தாலும் நெருப்பு பற்றிக் கொள்ளும்.” என்று … Read more

ரணில் பிரதமரானதை இலங்கை மக்கள் கடுமையாக எதிர்க்காததது ஏன்? – ஒரு விரைவுப் பார்வை

இலங்கையில் மிக நீண்ட அரசியல் அனுபவத்தைக் கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க கடந்த 12-ம் திகதி இலங்கையின் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஜனாதிபதி, ரணிலைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது. கடந்த ஆட்சியிலும் பிரதமராகப் பதவி வகித்துத் தோல்வியுற்றிருந்த ரணில், ராஜபக்‌ச குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால், என்னதான் வெளிப்பார்வைக்கு ராஜபக்‌ச குடும்பத்தின் குற்றங்கள்மீது, தான் உக்கிரமாக இருப்பதுபோல அவர் காட்டிக்கொண்டாலும், அவர்களுக்கிடையில் நட்புரீதியான மென்மையான அணுகுமுறையே இருந்துவருகிறது. இது ராஜபக்‌ச குடும்பத்துக்கே சாதகமாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் … Read more

Monkeypox: டெங்கு வைரஸின் குடும்பத்தை சேர்ந்த குரங்கு காய்ச்சலை பரப்பும் வைரஸ்

அமெரிக்காவில், ஒருவருக்கு ‘குரங்கு காய்ச்சல்’ உறுதிப்படுத்தப்பட்டுள்ளதன் மூலமாக அதிகாரப்பூர்வமாக முதல் ‘குரங்கு காய்ச்சல்’ தொற்று அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.  குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் அண்மையில் கனடாவுக்கு பயணம் மேற்கொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது. குரங்கு காய்ச்சலைப் பற்றிய சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்: டெங்குவுக்கும் குரங்குக் காய்ச்சலுக்கும் தொடர்பு இருக்கிறது. குரங்குக் காய்ச்சல் நோய், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தை சார்ந்தது. இது குரங்குகளிடமிருந்து பரவுகிறது. 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குரங்கு காய்ச்சலால் மாசசூசெட்ஸ் பாதிக்கப்பட்டுள்ளது. … Read more

கருக்கலைப்புக்கு பெற்றோர் அனுமதி தேவையில்லை; மாதவிடாய் விடுமுறை: சட்ட மசோதாவுக்கு ஸ்பெயின் ஒப்புதல்

16 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் கருக்கலைப்பு செய்துகொள்ள பெற்றோரின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்ற சட்ட மசோதாவுக்கு ஸ்பெயின் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதுபோலவே, மகளிர்க்கு மாதந்தோறும் மாதவிடாய் விடுமுறை வழங்க வழிவகை செய்துள்ளது. தங்களின் உடல் சார்ந்த முடிவுகளை பெண்கள் சுயமாக எடுப்பதை உறுதி செய்ய இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவின்படி 16 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் தாங்கள் கருவை சுமக்க விரும்பவில்லை … Read more

Spain vs Women Rights: ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பை அறிமுகப்படுத்தும் ஸ்பெயின்

வலிமிகுந்த மாதவிடாய் மற்றும் கருக்கலைப்புக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பைக் கொண்டுவர ஸ்பெயின் திட்டமிட்டுள்ளது. இதற்கான அந்நாட்டின் முயற்சிகள் சட்டமாக மாறவிருக்கிறது. மாதவிடாய் விடுப்பு மசோதாவுக்கு ஸ்பெயின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டது. இதன் மூலம் மாதவிடாய்க்காக பெண் ஊழியர்களுக்கு  விடுப்பு வழங்கும் முதல் ஐரோப்பிய நாடு ஸ்பெயின் ஆகும். கருக்கலைப்பு உரிமைகளை வலுப்படுத்தும் சிறுபான்மை இடதுசாரி அரசாங்கத்தின் வரைவு மசோதா சட்டமானால், பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை அறிமுகப்படுத்தும் முதல் ஐரோப்பிய நாடு என்ற சாதனையை … Read more

அடுத்த தேர்தலில் எனது வாக்கு இந்த கட்சிக்குத்தான் – எலான் மஸ்க்

அடுத்த தேர்தலில் டிரம்ப்-ஐ அதிபர் வேட்பாளராக முன்னிறுத்திய குடியரசு கட்சிக்கு வாக்களிக்கப்போவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்களை அனுமதிக்கும் நிறுவனங்களால், அமெரிக்காவிலேயே  உற்பத்தி செய்யப்படும் மின்சார கார்களுக்கு ஜோ பைடன் அரசு அண்மையில் வரி சலுகை அறிவித்திருந்தது. இதற்கு உலக பெரும்பணக்காரரும், டெஸ்லா கார் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரித்தாழும் சூழ்ச்சி மற்றும் வெறுப்பு அரசியலை கையாளும் ஜோ பைடனின் மக்களாட்சிக் கட்சிக்கு இனி வாக்களிக்க போவதில்லை என அவர் டுவிட்டரில் … Read more

ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் கைது!

இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21 பேரை காவல் துறை அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். கிரான்குளம் தர்மபுரம் பகுதியில் உள்ள கடற்கரையில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். களுவாஞ்சிகுடி மற்றும் தாண்டியடி  பகுதியில் பணியில் இருந்த காவல் துறை அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்கள் வடக்கு கிழக்கின் பல்வேறு … Read more

சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்

டோக்கியோ : ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்தன. இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது. 10 ஆண்டுகள் கடந்தும் மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு கதிர்வீச்சின் தாக்கத்தை இன்னமும் … Read more

போரை நிறுத்துங்கள்; உங்களுடன் ஓர் இரவை கழிக்கிறேன்: புடினிடம் கூறிய ஆபாச நடிகை

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த உலகளாவிய சக்திகள் பலவேறு வகையில் முயற்சி செய்து வரும் வேளையில், முன்னாள் ஆபாச நட்சத்திரம்  ஒருவர் புடினுக்கு புதுமையான ஒரு ஆபரை வழங்கியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தப்பட வேண்டும் என உலகம் முழுவதிலும் இருந்து பல வகையில் முறையீடுகள் வைக்கப்படுகின்றன. இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை நிறுத்தினால்,  அவருடன் ஒர் இரவைக் கழிக்க தான் தயார் என முன்னாள் ஆபாச நட்சத்திரம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கு … Read more

பாக். வெளியுறவு அமைச்சர் அமெரிக்க அமைச்சர் பிளிங்கனுடன் பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை சந்தித்துப் பேச்சு நடத்தினார். பாகிஸ்தானில் கடும் உணவுத் தட்டுப்பாடு குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. மின்சாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகள் பல மடங்கு பெருகி உள்ளன. நாட்டின் பொருளாதாரம் உருக்குலைந்து உள்ளது .இந்நிலையில் அமெரிக்காவுடன் அரசு ரீதியான உறவை மேம்படுத்தவும் பொருளாதார நட்பை வலுப்படுத்தவும் அந்நாட்டிற்கு பிலாவல் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை விமர்சித்துள்ள இம்ரான் கான், அமெரிக்காவிடம் பிச்சையெடுக்க பிலாவல் … Read more