கார்டன் பார்ட்டியை புறக்கணிக்கும் ராணி| Dinamalar

லண்டன்: பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள தோட்டத்தில், ‘கார்டன் பார்ட்டி’ என்ற முக்கிய விருந்து, ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும். இதில், 8000 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வர். பங்கேற்போருக்கு, ராணி மற்றும் அரச குடும்பத்துடன் பேச வாய்ப்பு கிடைக்கும். உயர்தரமான ராயல் விருந்தும் அளிக்கப்படும். இந்நிலையில், உடல் நலக் குறைவால் ஓய்வில் இருக்கும் பிரிட்டன் ராணி எலிசபெத், கோடை கால ‘கார்டன் பார்ட்டி’யில் கலந்து கொள்ள மாட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. லண்டன்: பக்கிங்ஹாம் அரண்மனையில் … Read more

ஈராக்கை தாக்கிய புழுதி புயல் – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

பாக்தாத், உலகின் பல்வேறு நாடுகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் வெப்பத்தின் அளவு புதிய உச்சம் தொட்டு வருகிறது. வெப்பத்துடன் சேர்த்து புழுதி காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், ஈராக்கின் தலைநகர் பாக்தாத் உள்பட 18 மாகாணங்களில் நேற்று திடீரென புழுதி புயல் வீசியது. இதனால், வானம் முழுவதும் தூசி, மண்ணால் சூழ்ந்தது.  குறிப்பாக அந்நாட்டின் அன்பர் மாகாணத்தில் புழுதி புயலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. புழுதி … Read more

ஏலியன்களை கவர நிர்வாண புகைப்படங்களை அனுப்பும் நாசா!

பல ஆண்டு காலமாகவே விஞ்ஞானிகள் பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் உயிரினங்கள் எதுவும் வாழ்கின்றதா என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  ஏலியன்கள் இருப்பதாக அடிக்கடி சில செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றனர், ஏலியன்கள் இருக்கிறதா இல்லையா என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.  சில இடங்களில் பறக்கும் தட்டை பார்த்ததாகவும், சில இடத்தில் ஏலியன் வந்து இறங்கியதாகவும் பல செய்திகள் இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கிறது.  ஆனால் இவை பற்றிய உண்மையான தகவல்கள் எதுவும் இன்றளவும் உறுதிப்படுத்தப்படவில்லை.  இருப்பினும் விஞ்ஞானிகள் … Read more

கால்பந்து அசுரன் மரடோனாவின் டி-ஷர்ட் ரூ.70 கோடிக்கு ஏலம்!| Dinamalar

மறைந்த அர்ஜென்டின கால்பந்து வீரர் மரடோனாவின் 1986ம் ஆண்டு போட்டியின் டி-ஷர்ட் ரூ.70 கோடிக்கு ஏலம் போயுள்ளது. விளையாட்டு நினைவுப் பொருட்களுக்கு இதுவரை கிடைத்ததிலேயே அதிகபட்ச விலை இதுவாகும். 1980களில் கால்பந்து உலகம் கொண்டாடிய நபர்களில் ஒருவர் மரடோனா. 1986ல் இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி மெக்சிகோவில் நடந்த உலகப் கோப்பை போட்டிகளில் பங்கேற்றது. காலியிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட போட்டியில் மரடோனா தனிப்பட்ட முயற்சியில் 2 கோல் அடித்தார். அதில் ஒரு கோலை தனது தலையால் அடிக்க … Read more

"எலான் மஸ்க் டுவிட்டரை மோசமாக்கலாம்"- பில் கேட்ஸ் பரபரப்பு கருத்து..!!

நியூயார்க், உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்கினார். அதை தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது டுவிட்டர் நிறுவனம் … Read more

நீர்யானைகளால் அச்சத்துடன் வாழ்ந்து வரும் காங்கோ ஜனநாயகக் குடியரசு மக்கள்!

காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஆற்றில் உள்ள நீர்யானைகளுக்கும் அதன் கரையில் உள்ள மனிதர்களுக்குமான மோதல் அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள ருசிசி ஆறு காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், புருண்டிக்கும் இடையே எல்லைக் கோடாக அமைந்துள்ளது. எப்போதும் நீர்வளம் நிறைந்துள்ள இந்த ஆற்றில் நீர்யானைகள் வாழ்ந்து வருகின்றன. ஆற்றின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்துப் பொதுமக்கள் வீடு கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வப்போது நீர்யானைகள் தாக்கியதில் பலர் உயிரிழந்ததால் ஆற்றங்கரை ஊர்களில் உள்ள மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். Source link

உக்ரைனின் ரயில்வே கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.!

உக்ரைனின் ரயில்வே கட்டமைப்புகளை உருக்குலைக்கும் நோக்கில் அவற்றை குறிவைத்து ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் ஆயுத உதவி வழங்கி வரும் நிலையில், அந்த ராணுவ தளவாடங்கள் ரயில்கள் மூலம் உக்ரைனுக்குள் கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில், இந்த ராணுவ தளவாட போக்குவரத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் தொடர்ந்து ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள், ரயில் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்ட மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்கி வருவதாக உக்ரைனின் … Read more

ரஷிய- உக்ரைன் போரை நிறுத்த முயன்றேன்: பெலாரஸ் அதிபர்

மின்ஸ்க்: உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கி 71-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரில் ரஷியாவுக்கு ஆதரவாக பெலாரஸும் செயல்பட்டு வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ரஷிய உக்ரைன் போரை தான் ஆதரிக்கவில்லை என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். இந்த போர் குறித்து பேசிய அவர் கூறியதாவது:- … Read more

விக்கிப்பீடியாவில் பல திருத்தங்கள்… நீங்கள் படித்த பள்ளிதான் எது? – சுந்தர் பிச்சை அளித்த பதில்

கலிபோர்னியா: ‘நீங்கள் படித்த பள்ளி எது?’ என்று விக்கிப்பீடியா திருத்தங்களை மேற்கோள் காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளார். தொழில்நுட்ப உலகின் சாம்ராட்டாக இயங்கி வருகிறது கூகுள். அதன் தலைமை செயல் அதிகாரியாக இயங்கி வருகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை. 49 வயதான அவர் படித்து, வளர்ந்தது தமிழ்நாட்டில்தான். பள்ளிப் படிப்பை தமிழகத்திலும், பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடி-யிலும், மேற்படிப்பை அமெரிக்காவிலும் முடித்தவர். கடந்த 2004-இல் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். … Read more

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களின் நிர்வாண புகைப்படங்கள்!

பிரபஞ்சத்தில் வேறு இனங்கள் ஏதுவும் உள்ளனவா என்பது பற்றிய பேச்சுகள் நீண்ட காலமாக நிலவி வருகிறது. வேற்றுகிரகவாசிகள் என்று கூறப்படும் ஏலியன்கள் இருக்கின்றனவா அல்லது இல்லையா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது சம்மந்தமான திரைப்படங்களும், நாவல்களும் ஏராளமாக வந்துள்ளன. ஏலியன்களை பற்றி பல்வேறு கதைகளும் சொல்லப்படும். விண்வெளியில் அறியப்படாத இடத்தில் இருந்து மின்காந்த அலைகளாக சிக்னல்கள் வரும்போதெல்லாம் அவை ஏலியன்களாக இருக்கக்கூடுமோ என்ற விவாதங்கள் அதிகரிக்கும். unidentified flying object என்று சொல்லப்படும் … Read more