ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டு கலவரத்தினால் 70,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு.!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரம் காரணமாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் அரசுப் படையினருக்கும், பழங்குடியின கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையினால், வாழ்வாதாரம் இழந்த மக்கள் உணவு, குடிநீரின் கடும் பற்றாக்குறையை எதிர்கொண்டு அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அண்டை நாடான உகண்டாவில் 7 … Read more

மாணவர்கள் போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு| Dinamalar

கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிடச் சென்ற மாணவர்களை, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர்.நம் அண்டை நாடான இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, கொழும்புவில் உள்ள அவர் அலுவலகத்திற்கு முன், 50 நாட்களுக்கு மேலாக ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று … Read more

சாலையோர மரத்தில் மோதி பயணிகள் பேருந்து விபத்து… 10 பேர் உயிரிழப்பு

வங்காளதேசத்தில் மரத்தின் மீது பயணிகள் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். வசிர்புர் பகுதியில் அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களில் சிலர் கவலைக் கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.   Source link

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்.. வருடாந்திர நினைவு நாள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் நடைபெற்ற நினைவுநாள் நிகழ்ச்சியில் திடீரென நுழைந்த மர்மநபர் சுற்றி இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில், ஒருவர் உயிரிழந்தார். துல்சா நகருக்கு அருகே நடைபெற்ற வருடாந்திர நினைவு நாள் நிகழ்வில் ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான நிகழ்வின் போது, புகுந்த புகுந்த மர்மநபர் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்தனர்.  கடந்த 5 … Read more

உக்ரைனுக்கான நேட்டோவின் ஆதரவு உடைக்க முடியாதது – ஸ்பெயின் பிரதமர் சான்செஸ்

உக்ரைனுக்கான நேட்டோவின் ஆதரவு உடைக்க முடியாதது என ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் தெரிவித்துள்ளார். உக்ரைனில் நடக்கும் கொடூரங்கள், அப்பாவி மக்களின் மரணங்கள் சர்வதேச சட்டத்தை மீறும் ரஷ்ய அதிபர் புடினின் செயலை கண்டிக்க கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தார். புடின் தனது நோக்கத்தை அடையமாட்டார் என்றும் சான்செஸ் தெரிவித்தார். புடினின் ஆட்சியால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், உக்ரைனை ஆதரிப்பதே ஐரோப்பாவிற்கும், உலகிற்கும் எதிர்காலம் இருப்பதை உறுதி செய்யும் ஒரே வழி என்றும் தெரிவித்தார். Source link

பிரேசில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

ரியோ டி ஜெனிரோ,: பிரேசில் நாட்டில் வடகிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின. வெள்ளத்திற்கு அலகோவாஸ், பெர்னாம்புகோ ஆகிய மாகாணங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அந்நாட்டின் வடகிழக்கே அமைந்த பெர்னாம்புகோ மாகாணத்தின் தலைநகர் ரீசிப் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். … Read more

மோனலிசா ஓவியம் மீது கேக் வீச்சு; பாட்டி வேடமிட்டு வந்த இளைஞரால் பரபரப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரிஸ்: பெண் வேடமிட்டு வந்த இளைஞர் ஒருவர், உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் மீது கேக்கை வீசினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தாலியின் புகழ் பெற்ற ஓவியர் லியானர்டோ டாவின்சி. அவரது மோனலிசா உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் இன்றும் உலகப் புகழ் பெற்றவையாக திகழ்கின்றன. அவற்றில் மோனலிசா ஓவியத்தில் அதன் புன்னகை, உலகை இன்றும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறது.அதற்கு காரணம், … Read more

விண்வெளியில் ஹேர் வாஷ் செய்வது எப்படி?

விண்வெளிக்கு சென்று திரும்பிய சீன வீராங்கனை ஒருவர் விண்வெளியில் ஹேர் வாஷ் செய்வது எப்படி என்பது குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேல்நோக்கி பறந்துகொண்டிருக்கும் தனது தலைமுடியில் ஷேம்பூவை முதலில் போட்டு விட்டு பின்னர் வாட்டர் பேக்கில் (Water pack) இருந்து நீரை ஊற்றினார். பின்னர் டவல் கிளவுஸ்களை கைகளில் மாட்டிக்கொண்டு தலையை துவட்டிவிட்டு, நீரை உலர்த்தும் கேப் ஒன்றை அணிந்துகொண்டார். சீனா சொந்தமாக அமைத்து வரும் தியாங்யாங் விண்வெளி நிலைய கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள கடந்த 2021-ம் … Read more

நேபாளம் விமான விபத்து – இதுவரை 21 உடல்கள் மீட்பு

காத்மாண்டு: நேபாளத்தில் உள்ள ஒரு தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் தாரா ஏர் விமானம் நேற்று காலை 9.55 மணிக்கு 4 இந்தியர் உள்பட 22 பேருடன் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமானது. விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் ரேடார் பார்வையில் இருந்து மறைந்தது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் விமானம் இமயமலையின் பனிபடர்ந்த பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. … Read more

பள்ளிப் பாடபுத்தகத்தில் ஆபாச படங்கள்… அரசின் மீது பொதுமக்கள் ஆத்திரம்!

சீனாவில் 3 முதல் 6வயதுக்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இடம்பெற்றுள்ள சில படங்கள் பார்ப்பதற்கு ஆபாசமாக இருப்பதாக பெற்றோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதாவது பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள வண்ண புகைப்படங்களில் சிறுவர், சிறுமிகள் ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக. பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அத்துடன் குழந்தைகள் ஓரப்பார்வை பார்த்துக்கொண்டும், நாக்கை நீட்டிக் கொண்டும் இருப்பது போல ஆபாச சமிக்ஞைகளை வெளிப்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. விமான … Read more