வட கொரியாவில் கொரோனா 2.62 லட்சம் பேருக்கு தொற்று| Dinamalar

சியோல்: வட கொரியாவில், கொரோனாவால் புதிதாக 2.62 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுதும், 2020ல் கொரோனா பரவத் துவங்கியபோது, கிழக்காசிய நாடான வட கொரியாவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளாக அங்கு வைரசால் யாரும் பாதிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அங்கு தற்போது வைரஸ் பரவி வருகிறது.இந்நிலையில், அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில், 2.62 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீ..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீயினை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த காட்டுத் தீ காரணமாக டெய்லர் கவுண்டி பகுதியில் 60க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். பலத்த காற்று காரணமாக இந்த காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், அருகாமை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அபாயம் விடுத்துள்ளதாக அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. Source link

பாகிஸ்தான் குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க உளவுத்துறை

வாஷிங்டன்: அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழு கூட்டத்தில், அமெரிக்கா உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர் கூறியதாவது:- கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் உறவு மோசமாகியிருக்கிறது. இந்தியாவின் அணு ஆயுதங்கள், ராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமாக கருதுகிறது.  இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் தனது ராணுவத்துக்கு பயிற்சியை வழங்கி வருகிறது. மேலும் … Read more

இலங்கை வன்முறை தொடர்பாக 3 எம்.பிக்கள் கைது

கொழும்பு:  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசுக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் மீது கடந்த மே 9-ஆம் தேதி முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது.  இதில் ஆளும்கட்சி எம்.பி. ஒருவா் உள்பட 10 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்த வன்முறை தொடா்பாக 1,059 பேரை ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்திருந்த நிலையில், தற்போது வன்முறையை ஊக்குவித்ததாக ஆளும் … Read more

வங்கதேசத்தில் ஆற்றில் மூழ்கிய கப்பல் | Dinamalar

டாக்கா : கோதுமை ஏற்றிச் சென்ற சிறிய ரக சரக்கு கப்பல், வங்கதேசத்தின் மேக்னா ஆற்றில் மூழ்கியது.வங்கதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, இந்தியாவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்து, அதை மாவாக்கி விற்பனை செய்து வருகிறது. இதற்காக, இந்தியாவிலிருந்து கோதுமையை ஏற்றிக் கொண்டு, வங்கதேசத்தக்கு சரக்கு கப்பல் ஒன்று சென்றது. சட்டோகிரம் துறைமுகத்தில் நின்ற அந்த கப்பலில் இருந்து 16 லட்சம் கிலோ கோதுமை, தனியார் நிறுவனத்தக்கு சொந்தமான சிறிய சரக்கு கப்பல் ஒன்றில் ஏற்றப்பட்டது. இந்தக் … Read more

உக்ரைனுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி – ஜி7 நாடுகள் அறிவிப்பு

ஜெர்மனி: உக்ரைன் மீது ரஷியா 3 மாதங்களுக்கும் மேலாக போரில் ஈடுபட்டு வருகிறது. இதனால், உக்ரைன் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர்.  உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தேவையான நிதி, ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு உதவி ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு முன்வந்துள்ளன. ஜி7 கூட்டமைப்பு நாடுகள் 18.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 1.4 லட்சம் கோடி) நிதி உதவியாக வழங்கவுள்ளன. … Read more

இலங்கை புதிய பிரதமர் மறுப்பு| Dinamalar

கொழும்பு: ”கடந்த வாரம் அரசுக்கு எதிராக நடந்த வன்முறையின் போது, பொதுச் சொத்துக்களை நாசப்படுத்துவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை,” என, இலங்கையின் புதிய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, அவர் அலுவலகம் முன் முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்களை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கினர். இதனால் கொதித்தெழுந்த மக்கள் வன்முறையில் இறங்கினர். ராஜபக்சே குடும்பத்தினரின் வீடுகளை தீ வைத்து எரித்தனர்; சொத்துக்களை சூறையாடினர். இதையடுத்து, பொதுச் … Read more

விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை: கோத்தபய ராஜபக்சே

இலங்கை இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர், கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி முடிவடைந்தது. அந்த தேதி, போரில் உயிர்நீத்த இலங்கை ராணுவ வீரர்களை நினைவுகூரும்வகையில், போர் வீரர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ராணுவ மந்திரியாகவும் இருக்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாட்டின் விடுதலையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த ராணுவ படைகளை எந்த சூழ்நிலையிலும் மறக்க முடியாது. நமது படைகள், மனிதாபிமான நடவடிக்கை மூலம் … Read more

தூக்க கலக்கத்திலேயே கேரட்டை சாப்பிடும் பாண்டா கரடி.. சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ.!

மிருகக்காட்சி சாலை ஒன்றில் ஆழ்ந்து உறங்கி கொண்டிருக்கும் பாண்டா கரடியை ஊழியர் ஒருவர் எழுப்பி கேரட்டை உணவாக கொடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பாண்டா கரடி சொகுசாக மரத்தால் ஆன பலகையில் சாப்பிட மறந்த நிலையில் படுத்து தூங்குகிறது. இதனை அடுத்து அங்கிருக்கும் பெண் ஊழியர் ஒருவர் அந்த பாண்டாவை கேரட்டால் எழுப்பி அதனை உணவாக கொடுக்கிறார். அந்த பாண்டாவும் சமர்த்தாக தூக்க கலக்கத்திலேயே கேரட்டை வாங்கி சாப்பிடுகிறது. பொதுவாக பாண்டா கரடிகள் சோம்பேறி … Read more

பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடு இந்தியா – ஐ.நா. கணிப்பு

நியூயார்க்: ஐ.நா. பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை, உலக பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு: உக்ரைன் போரால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நடப்பு சர்வதேச பொருளாதார வளர்ச்சி, மறுமதிப்பீடு செய்யப்பட்டு 4 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக உலகளவில் பணவீக்கம், கடந்த 10 ஆண்டு சராசரியை விட, இரு மடங்கு உயர்ந்து, 6.7 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்தாண்டு தெற்காசிய … Read more