அண்டை நாடுகளின் உணவுத் தேவைகளை இந்தியா பூர்த்தி செய்யும் – முரளிதரன்

உலகச் சந்தையில் கோதுமையின் விலை அதிகரித்த போதும், உணவுப் பாதுகாப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ஐநா.பாதுகாப்பு சபையில் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளுக்கு கடுமையான நேரங்களில் உணவுப் பாதுகாப்புக்கு இந்தியா உதவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் தலைமையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில், மோதல்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன், உக்ரைன் போர் காரணமாகவும் விலை உயர்வு காரணமாகவும் … Read more

டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 200 ஆக வீழ்ச்சி

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த நாட்டு ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதில் மிகவும் மோசமாக டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு நேற்று 200 ஆக சரிந்து விட்டது. இது பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாகும். பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு இவ்வாறு தொடர்ந்து வீழ்ந்து வருவது அந்த நாட்டு பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. பல பில்லியன் டாலர் கடன் திட்டத்தை புத்துயிர் பெறுவதற்காக … Read more

வங்காளதேசத்தில் 3 போர்க்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

வங்காளதேச விடுதலைப்போர் 1971-ம் ஆண்டு நடந்தது. அப்போது, அப்துல் அஜிஸ் என்ற ஹாபுல், அவரது சகோதரர் முகமது அப்துல் மாட்டின், அப்துல் மன்னன் என்ற மோனாய் ஆகியோர் இந்தியாவில் உள்ள பர்புஞ்சிக்கு பயிற்சிக்காக வந்து, பயிற்சியை முடிக்காமல் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்று, சுதந்திர வங்காளதேசத்தை உருவாக்க முயன்ற கொரில்லாகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தின் பக்கம் நின்று போரிட்ட ரசாக்கர் படையில் சேர்ந்தனர்.இவர்கள் அப்போது, கொலை. இனப்படுகொலை, கற்பழிப்பு, சித்ரவதை உள்ள குற்றங்களை வங்காளதேச விடுதலைப்போரின்போது, பர்லேகா … Read more

விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை- கோத்தபய ராஜபக்சே

மனிதாபிமான நடவடிக்கை இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர், கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி முடிவடைந்தது. அந்த தேதி, போரில் உயிர்நீத்த இலங்கை ராணுவ வீரர்களை நினைவுகூரும்வகையில், போர் வீரர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ராணுவ மந்திரியாகவும் இருக்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாட்டின் விடுதலையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த ராணுவ படைகளை எந்த சூழ்நிலையிலும் மறக்க முடியாது. நமது படைகள், மனிதாபிமான நடவடிக்கை … Read more

ஆப்கனில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடவேண்டும் – தலிபான்கள் உத்தரவு

காபுல்: ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு மிகக் கடுமையான பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என அந்நாட்டு மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர். ஆனால், தங்களின் முந்தைய ஆட்சிக்காலத்தைப் போன்று கடுமையான ஆட்சி இருக்காது என தலிபான்கள் உறுதி அளித்தனர்.  இதற்கிடையே, பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்து வருகின்றனர். கடந்த 7-ம் தேதி தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பில், பொது இடங்களில் பெண்கள் … Read more

வேகமான வளர்ச்சியில் இந்திய பொருளாதாரம்| Dinamalar

நியூயார்க் :உக்ரைன் போர் உலக நாடுகளை பாதித்துள்ள போதிலும், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வேகமாக உள்ளதாக ஐ.நா., ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா., பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை, உலக பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: உலக நாடுகள் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், உக்ரைன் போரால் அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நடப்பு சர்வதேச பொருளாதார வளர்ச்சி, மறுமதிப்பீடு செய்யப்பட்டு, 4 சதவீதத்தில் இருந்து, 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. … Read more

அமெரிக்காவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி

அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்னும் மீளாத நிலையில், அங்கு ஒருவருக்கு அபூர்வமான குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் மசாசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர். சமீபத்தில் அவர் நண்பர்களை சந்திப்பதற்காக தனியார் வாகனத்தில் கனடா சென்று வந்துள்ளார். இந்த ஆண்டு அமெரிக்காவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இப்போதுதான் முதன்முதலாக உறுதியாகி உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அங்கு குரங்கு காய்ச்சல் பரவாமல் … Read more

முகத்தை மூடி செய்தி வாசிக்க பெண் ஊடகவியலாளர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவு| Dinamalar

காபூல்: முகத்தை மூடி செய்தி வாசிக்க பெண் ஊடகவியலாளர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் தாலிபான் தனது பிற்போக்குத் தனமான ஷரியா சட்டம் மூலமாக அந்நாட்டின் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரம் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றது. ஆண்களின் துணை இல்லாமல் பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. முகத்தை … Read more

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பால் பவுடர் தட்டுப்பாடு; ஜோ பைடன் போர்க்கால நடவடிக்கை

பால் பவுடர் தட்டுப்பாடு அமெரிக்க நாட்டில் 12 மாதங்களுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தாய்மார் தாய்ப்பாலை விட புட்டிப்பால் தருவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் இந்த புட்டிப்பாலுக்கான பால் பவுடரை தயாரிக்கிற நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான அப்பாட் நியூட்ரிசன், பாதுகாப்பு காரணங்களையொட்டி மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக குழந்தைகளுக்கு பால் பவுடர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அரசியல் ரீதியில் அழுத்தங்களை ஏற்படுத்தி, தலைவலியாக மாறி இருக்கிறது. போர்க்காலநடவடிக்கை இந்தநிலையில், இதில் இருந்து மீண்டு வருவதற்கு ஏற்ற … Read more

பாமாயில் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் – இந்தோனேசியா அதிபர் அறிவிப்பு

ஜகார்த்தா:  உலகின் மிகப்பெரிய பாமாயில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. பாமாயில் இந்தோனேசியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தாவர எண்ணெயாகும். அதேசமயம் கச்சா பாமாயில் அழகுசாதனப் பொருட்கள் முதல் சாக்லேட் வரை பரவலான பயன்பாடுகளுக்காக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, உக்ரைன் விவசாய சக்தியின் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து சமீபத்திய வாரங்களில் அதிக விலையை எட்டிய பல முக்கிய உணவுப் பொருட்களில் காய்கறி எண்ணெய்களும் … Read more