எங்கள் வேலை என்னாகும்?- பாரக் அகர்வாலை சரமாரி கேள்வி கேட்ட ட்விட்டர் ஊழியர்கள்

வாஷிங்டன்: ட்விட்டர் தலைமை நிர்வாகி பராக் அகர்வால் நடத்தியக் கூட்டத்தில் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து ஊழியர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். 44 பில்லியன் டாலருக்கு மஸ்க்கிடம் விற்க ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் கைமாறும் நிலையில் இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் கருத்து தெரிவித்து இருந்தார். ஊழியர்களின் கூட்டம் ஒன்றில் பேசிய பாரக் அகர்வால் கூறுகையில் ‘‘ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் … Read more

ரஷ்ட படைகளால் உருக்குலைந்து கிடக்கும் மரியுபோல் நகரத்தின் செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியீடு.!

ரஷ்ட படைகளின் தொடர் தாக்குதலால், உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் உருக்கிலைந்து இருப்பதை காட்டும் செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மாக்ஸார் டெக்னாலஜிஸ் என்னும் அமெரிக்க விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் சேகரித்த இந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள், பல்பொருள் அங்காடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் சேதமடைந்த கட்டிடங்களுக்கு இடையே மக்கள் திரண்டிருப்பதையும் காட்டுகின்றன. மரியுபோல் நகர் மீது தொடர் தாக்குதலை நடத்திய ரஷ்யா, கடந்த வாரம் அந்நகரை கைப்பற்றிவிட்டதாக அறிவித்தது. அங்குள்ள அசோவ்ஸ்டல் எஃகு தொழிற்சாலையையும் ரஷ்ய … Read more

37 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் திருமணம்| Dinamalar

லாஸ் வேகாஸ் : பயணத்தில் தாமதம் ஏற்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாதாதால், நடு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலேயே திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடிக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துகள் குவிகின்றன. அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஜெரேமி சால்டா – பாம் பேட்டர்சன். இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள், லாஸ்வேகாஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் கடந்த 24ல்திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால், அவர்களது விமான பயணங்களில் தாமதம் ஏற்பட்டது. … Read more

உக்ரைனின் லிவிவ் நகருக்கு நடிகை ஏஞ்சலினா ஜோலி திடீர் வருகை

பிரபல அமெரிக்க நடிகையும், ஐ.நா. அகதிகளுக்கான முகமையின் தூதருமான ஏஞ்சலினா ஜோலி திடீர் பயணமாக உக்ரைன் சென்றார். லிவிவ் நகர வீதிகளில் ரஷ்யப் படையெடுப்பால் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்ட ஏஞ்சலினா போரால் வாழ்வாதாரத்தை தொலைத்த மக்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். வெடிகுண்டு தாக்குதல்களில் காயமடைந்த குழந்தைகளை மருத்துவமனை சென்று பார்த்த ஏஞ்சலினா ஜோலி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். லிவிவ் நகரில் உள்ள ஒரு சிற்றூண்டி கடையில் தன்னார்வலர்களுடன் ஏஞ்சலினா கலந்துரையாடியது, குழந்தைகளுக்கு ஆட்டோகிராப் வழங்கியது உள்ளிட்ட வீடியோக்கள் … Read more

சீனாவில் அடுக்குமாடி வீடு இடிந்தது | Dinamalar

பீஜிங் : சீனாவில் ஆறு மாடி அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. இடிபாடுக்குள் சிக்கியுள்ள 23 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. நம் அண்டை நாடான சீனாவின் ஹூனான் மாகாணம் வாங்செங் மாவட்டம் சங்க்ஷா நகரில் ஆறு மாடி அடுக்குமாடி குடியிருப்பு நேற்று திடீரென இடிந்து விழுந்தது.இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஐந்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 23 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு வசித்த 39 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மீட்புப் … Read more

உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவது ஏன்? மே தின வரலாறு

இன்று மே 1. சர்வதேச தொழிலாளர் தினம்.. சுதந்திர தினம், அன்னையர் தினம், காதலர் தினம் தொடங்கி முட்டாள்கள் தினம் வரை அனைத்திற்கும் நாம் ஒவ்வொரு தினம் கொண்டாடுகிறோம். சில தினங்களுக்குப் பின்னால் காரணங்கள் உண்டு. ஆனால் சில தினங்களுக்குப் பின்னால் வரலாறே உண்டு. மே தினத்திற்குப் பின்னால் அப்படி ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு உண்டு. நாடோடியாக இருந்த மனிதன் உழைப்பின் மூலமாகவே இன்று நவ நாகரீகமாக வாழப் பரிணாமம் அடைந்தான். ஆனால் உழைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கான … Read more

இலங்கையில் 8 முறை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்திற்கு மட்டும் ரூ.7.3 கோடி செலவு.!

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 8 முறை கூடிய நாடாளுமன்றத்திற்கு மட்டும் 7 கோடியே 30 லட்சம் இலங்கை ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் எந்தவொரு பயனுள்ள முடிவும் எட்டப்படவில்லை என்றும் மக்கள் ஆதங்கம் தெரிவித்து உள்ளனர். பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் தாக்கல் செய்ய உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரமதசா தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியில் இருந்து தனது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சேவை நீக்கி இடைக்கால அரசு அமைக்க … Read more

சட்டப்படி தண்டனை: சிங்கப்பூர் அரசு விளக்கம்| Dinamalar

சிங்கப்பூர் : போதைப் பொருள் கடத்தியதால் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட இந்திய வம்சாவளி நபருக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் மலேஷியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான நாகேந்திரன் தர்மலிங்கம் 34 ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதால் கைது செய்யப்பட்டார். 2010ல் அவருக்கு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது.இந்த தண்டனையை எதிர்த்து அவரது தாய் கடைசியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சமீபத்தில் அங்குள்ள நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து 27ம் … Read more

அமெரிக்காவின் கான்சாஸ், நெப்ராஸ்கா மாகாணங்களை புரட்டிப் போட்ட சூறாவளிக் காற்று

அமெரிக்காவில் கன்சாஸ், நெப்ராஸ்கா மாகாணங்களில் வீசிய சூறாவளிக் காற்றால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து கட்டிடங்கள் சேதமடைந்தன. Wichita நகருக்கு வெளியே Andover வழியாக விஸ்வரூபம் எடுத்த அந்த சுழற்காற்றில் சிக்கி வாகனங்கள், மரங்கள், வீடுகள் என அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டன. பட்லர், செட்விக் உள்ளிட்ட இடங்களில் சூறாவளிக் காற்று சுழன்று அடித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். Source … Read more

இலங்கை நாட்டு மக்களுக்கு மே தின வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மகிந்த ராஜபக்சே

இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பிரதமரை பதவி விலகும்படி அந்நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்,  நாட்டு மக்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சே மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியதாவது:- அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்கும் அயராது உழைக்கும் மக்களுக்கு மே தின வாழ்த்துகள். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து வெற்றி பெற வேண்டும். … Read more