பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத்தலால் எஸ்-400 ஏவுகணை வாங்குகிறது இந்தியா – அமெரிக்க பாதுகாப்புத் துறை தகவல்
வாஷிங்டன்: பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே ரஷ்யாவின் எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதாக அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்கள் அடங்கிய ராணுவ சேவைகள் குழுவின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அந்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பெரியர் பேசியதாவது: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அமைப்புகள் தங்கள் மீதான தாக்குதலை அதிகரிக்கும் … Read more