US vs Chinia: தைவான் விஷயத்தை பகடைக்காயாக பயன்படுத்துகிறதா அமெரிக்கா

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன், சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி யாங் ஆகியோர் வட கொரியா மற்றும் தைவானுடன் பேசினர். பிராந்தியத்தில், தனதுநட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அமெரிக்கா இராணுவ நிலைப்பாட்டில் குறுகிய மற்றும் நீண்ட கால மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் தெரிவித்தார்.  அமெரிக்கா தரப்பில் சல்லிவனும், சீனாவின் தரப்பில் சீனாவின் உயர்மட்ட அதிகாரி யாஙாகிய இருவரும்  உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மற்றும் “அமெரிக்க-சீனா உறவுகளில் குறிப்பிட்ட … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பு: சீனாவின் பிஜிங்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை

பிஜிங், சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஒரு பகுதியில் கொரோனா கண்டறியப்பட்டால், அந்நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பூஜ்ய கொரோனா கொள்கையை கடை பிடிக்கும் சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஷாங்காய் நகரில் வைரஸ் பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்படவில்லை. அதேபோல் தலைநகர் பிஜிங்கில் சில … Read more

லைவ் அப்டேட்ஸ்: அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாடு திரும்புவதாக தகவல்

19.05.2022 04.30: போர் காரணமாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதாக உக்ரைன் எல்லை பாதுகாப்பு காவலர்கள் தெரிவித்துள்ளனர்.  மே 10 முதல் தினசரி 30,000 முதல் 40,000 உக்ரைன் மக்கள் வீடு திரும்புவதை எல்லை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 04.20:  ரஷிய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் தாக்குதலை தொடங்கியதில் இருந்து 1,280 க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களின் … Read more

இங்கிலாந்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கத்தின் விகிதம் அதிகரிப்பு

லண்டன், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. இது உலக அளவில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. இது இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த ஏப்ரல் 2022 நிலவரப்படி இங்கிலாந்தின் நுகர்வோர் விலை குறியீடு (CPI) 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் அந்நாட்டில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இங்கிலாந்தில் தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதாக இங்கிலாந்தின் தேசிய … Read more

இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்திய சிங்களர்கள்…!

கொழும்பு, இலங்கையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசு படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபோது முடிவுக்கு வந்தது. இந்தப் போர் இறுதிக்கட்டத்தை அடைந்தபோது தமிழர்கள் கொத்து கொத்தாய் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18-ந் தேதியை தமிழர்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவு தினமாகவும், சிங்களர்கள் வெற்றி தினமாகவும் கடைப்பிடிக்கின்றனர். இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, மே … Read more

தாய்நாட்டின் மீதான அன்பின் வெளிப்பாடாக பச்சை குத்திக்கொண்ட உக்ரைன் மக்கள்!

கீவ், ரஷியாவுடன் நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், உக்ரைன் மக்கள் பச்சை குத்திக்கொள்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். தாய்நாட்டின் மீதான அன்பின் வெளிப்பாடாக உக்ரேனியர்கள் தங்கள் உடலில் டாட்டூ குத்திக்கொள்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற “கலை ஆயுதம்” திருவிழாவில், டாட்டூ குத்திக்கொள்வதன் மூலம், மக்கள் தங்கள் தேசத்தின் மீது தாங்கள் கொண்டுள்ள அன்பைக் வெளிக்காட்டியுள்ளனர். இந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை அன்று, கைவிடப்பட்ட சோவியத் கால தொழிற்சாலை ஒன்றில் நடைபெற்றது. அவர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்த பச்சை குத்திக்கொள்வதை … Read more

பெட்ரோல் வாங்க பணம் இல்லை ;இலங்கை அரசு பார்லி.,யில் அறிவிப்பு| Dinamalar

கொழும்பு,-பெட்ரோலிய நிறுவனத்துக்கு கொடுக்க அமெரிக்க டாலர்கள் கையிருப்பு இல்லாததால், பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருப்பதை மக்கள் தவிர்க்குமாறு, இலங்கை அரசு கேட்டுக் கொண்டது. நம் அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்நாட்டு பார்லிமென்ட் நேற்று முன் தினம் முதல்முறையாக கூடியது. ரூ.408 கோடி பாக்கிஇந்நிலையில், இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா பார்லிமென்டில் … Read more

இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டு திரைப்படங்களை தயாரிப்போருக்கு ஊக்கத் தொகை- மத்திய மந்திரி அறிவிப்பு

கேன்ஸ்: பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் கேன் திரைப்பட விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார்.  அப்போது இந்தியாவில் திரைப்படம் எடுப்பது, இந்தியாவுடன் இணைந்து கூட்டாக வெளிநாட்டுப் படங்களை எடுப்பதை ஊக்குவிப்பது ஆகியவை தொடர்பாக  2 திட்டங்களை அவர் அறிவித்தார். இந்திய ஊடகம் மற்றும் பொழுபோக்குத் தொழில்துறையின் வாய்ப்புகளை பயன்படுத்தும் விதமாக இந்த இரண்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி வெளிநாட்டுப் படங்களை இந்தியாவுடன் இணைந்து … Read more