வரலாறு காணாத போராட்டம்: இம்ரான்கான் எச்சரிக்கை| Dinamalar

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் பார்லிமென்டில் சமீபத்தில் நடந்த ஓட்டெடுப்பில், அந்நாட்டு பிரதமராக இருந்த இம்ரான் கான் தோல்வி அடைந்தார். இதையடுத்து, நவாஸின் பாக்., முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவி ஏற்றார். பாக்., அரசை கலைத்து விட்டு பொதுத் தேர்தல் நடத்தக் கோரி பேரணியும் இம்ரான் நடத்தினார். இந்த நிலையில், … Read more

உலக அளவில் கரோனா குறைந்து வருகிறது: உலக சுகாதார நிறுவனம்

ஜெனீவா: உலக அளவில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் தரப்பில் வெளியிட்ட தகவலில், “மே மாதம் இறுதி வாரத்தில் உலக அளவில் சுமார் 30 லட்சம் பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் கரோனா பாதிப்பு 12% குறைந்துள்ளது. உலக அளவில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பும் குறைந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கடந்த 24 … Read more

கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்ற தீவிரம் காட்டும் ரஷ்யா.. 400 குழந்தைகள் தங்கியிருந்த பள்ளி மீது குண்டுவீசி தாக்குதல்..!

கிழக்கு உக்ரைனில் சுமார் 400 குழந்தைகள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷ்ய படையினர் குண்டுவீசி தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. டான்பாஸ் பகுதியின் முக்கிய இணைப்பு நகரமாகத் திகழும் பாக்முட்டில் பள்ளி மற்றும் அதன் நிர்வாக கட்டிடம் மீது ரஷ்யா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உயிர்சேதம் குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், சேதமடைந்த கட்டிடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணி மேற்கொள்கின்றனர். Source link

இலங்கை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் பசில் ராஜபக்ச…!

கொழும்பு, இலங்கை முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை பசில் ராஜபக்சே இலங்கை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் வழங்கினார். இது குறித்து பசில் ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளேன். எம்.பி. பதவியை துறந்தாலும், அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன். இனிவரும் காலங்களில் எந்த அரசு பதவியையும் வகிக்கப் போவதில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக தனது முழு நேர பங்களிப்பை … Read more

ஆப்கான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி எடுத்து சென்ற பணம் எவ்வளவு தெரியுமா

ஆகஸ்ட் 15 அன்று தலிபான்கள் காபூலுக்குள் நுழைந்தபோது அஷ்ரஃப் கனி, அவரது நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் சிலருடன் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிச் சென்றார்.  ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறும் போது தன்னுடன் ஒரு மில்லியன் டாலர்களுக்கும் குறைவான பணத்தை எடுத்துச் சென்றதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. SIGAR (ஆப்கானிஸ்தான் புனரமைப்புக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல்), ஆப்கானிஸ்தானில் புனரமைப்பு பற்றி விசாரிக்கும் நிறுவனம், வெளியிட்ட ஆதாரங்களின்படி, மூன்று ஹெலிகாப்டர்களில் அஷ்ரஃப் … Read more

துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா… லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது – உக்ரைன் அதிபர் !

துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கருங்கடல் துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிட்டுள்ளதால் கோதுமை, சோளம், எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். Source link

பாகிஸ்தான் கராச்சியில் இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டு, சிலைகள் அழிப்பு

கராச்சி பாகிஸ்தானின் கராச்சியின் கோரங்கி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரி மாதா கோவிலில் உள்ள தெய்வச் சிலைகள் நேற்று அடித்து நொறுக்கப்பட்டன. தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு வந்து கோவிலை பார்வையிட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். நாட்டில் சிறுபான்மை சமூகத்தின் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான சமீபத்திய நாசவேலை சம்பவம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கராச்சியில் வசிக்கும் இந்து சமூகத்தினரிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியதாக தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் … Read more

செல்லப்பிராணியாக இருந்த நாய்க்கு உரிமையாளர் திடீரென பூனையை கொஞ்ச தொடங்கியதால் ஏக்கம்

செல்லப்பிராணியாக தன்னை வளர்த்து வந்தவர் திடீரென பூனை ஒன்றை கொஞ்சத் தொடங்கியதால் ஏமாற்றம் அடைந்த நாய் ஒன்று காட்டிய முகபாவனைகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. முதலில் அந்த பூனையை பொறாமையுடன் பார்க்கும் அந்த நாய், பின்னர் உரிமையாளரின் கவனத்தை கவர அவரை நெருங்கி வந்து உற்றுப்பார்க்கிறது. இருப்பினும் அந்த உரிமையாளர் நாயின் பக்கம் திரும்பாமல் பூனையையே தொடர்ந்து தடவி கொடுக்க, ஏக்கத்துடன் பல்வேறு முகபாவனைகளில் அந்த நாய் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தியது.   Source link

தென்கொாியா : அலுவலக கட்டிடத்தில் தீவிபத்து – 7 போ் பலி

சியோல், தென் கொாியா நாட்டில் உள்ள டேகு நகாில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் பின்புறம் 7 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இருந்த அலுவலகத்தில் தீடீரென தீ பற்றியது. கண் இமைக்கும் நேரத்தில் தீயானது அலுவலகம் முழுவதும் மலமலவென பரவியது. உடனே இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த தீ விபத்தில் 7 போ் தீயில் … Read more

காட்டுக்குள் இருந்து வழிதவறி பள்ளத்திற்குள் விழுந்த குட்டியானை.. 4 மணி நேர முயற்சிக்கு பின் பத்திரமாக மீட்பு.!

வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்து, பள்ளத்தில் விழுந்த குட்டியானை ஒன்று சுமார் 4 மணி நேர கடும் முயற்சிக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. அந்த குட்டியானையின் பிளிறல் சத்தம் கேட்டு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கிய மீட்புப்பணி அதிகாலை 5 மணி வரை நீடித்தது. பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணைக் கொட்டியும், கயிறுகள் மூலம் கட்டியும் அந்த குட்டி யானை மீட்கப்பட்டது.  Source link